வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி (Post No.5528)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 11 October 2018

 

Time uploaded in London –14-36 (British Summer Time)

 

Post No. 5528

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது-கல்வி (Post No.5528)

 

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து 16, 17, 18, 19, 20 எண்ணிட்ட ஸ்லோகங்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

 

हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदा‌உप्य्
अर्थिभ्यः प्रतिपाद्यमानम् अनिशं प्राप्नोति वृद्धिं पराम् ।
कल्पान्तेष्वपि न प्रयाति निधनं विद्याख्यम् अन्तर्धनं
येषां तान्प्रति मानम् उज्झत नृपाः कस्तैः सह स्पर्धते ॥ 1.16 ॥

 

ஹர்துயாதி ந கோசரம் கிம் அபி சம் புஷ்ணாதியத் ஸர்வதாப்ய

அர்த்திப்யஹ   ப்ரதிபாதயமானம் ஐசம் ப்ராப்னோதி வ்ருத்திம் பராம்

கல்பாந்தேஷ்வ்பி ந ப்ரயாதி நிதனம் வித்யாக்யம் அந்தர் தனம்

யேஷாம் தான்ப்ரதி மானம் உஜ்ஜத் ந்ருபாஹா கஸ்தைஹை சஹ  ஸ்பர்ததே

 

திருடர்களால் காணமுடியாதது;

எப்போதும் பேரின்பம் நல்குவது;

கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும்;

யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.

மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.

அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?

 

 

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

 

வெள்ளதால் /வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது

 

கொடுத்தாலும் நிறைவன்றிக்

குறைவுறாது

கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது

கல்வியென்னும்

உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள்தேடி

உழல்வதென்னே

 

XXXX

 

 

இன்னுமொரு பாடல்

अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्
तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥

 

அதிகத பரமார்த்தான் பண்டிதான்மாவ மம்ஸ்தாஸ்

த்ருணம் இவ லகு லக்ஷ்மீர்நைவ தான் ஸம்ருணததி

அபிநவமதலேகா ஸ்யாமகண்டஸ்தலானாம்

ந பவதி பிஸந்துர் வாரணம் வாரணானாம்

எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை

அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்

முகம் கருத்த யானைக ளை    தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?

 

 

xxx

 

இன்னுமொரு பாடல்

 

अम्भोजिनीवनविहारविलासम् एव
हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां
वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥

 

அம்போஜினீவன விஹார விலாஸம் ஏவ

ஹம்ஸஸ்ய ஹந்தி நிதராம் குபிதோ விதாதா

 

ந த்வஸ்ய துக்தஜல பேதவிதௌ ப்ரசித்தாம்

வைதக்தீ கீர்த்திம் அபஹர்தும் அசௌ ஸமர்த்தஹ

பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.

 

XXX

केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला
न स्नानं न विलेपनं न कुसुमं नालङ्कृता मूर्धजाः ।
वाण्येका समलङ्करोति पुरुषं या संस्कृता धार्यते
क्षीयन्ते खलु भूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥ 1.19 ॥

 

 

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் ஹாரா ந சந்த்ரோஜ்வலா

ந் ஸ்நானம்ந விலேபனம் நகுஸுமம் நாளங்ருதா மூர்த்தஜாஹா

வாண்யேகா சமலங் கரோதி புருஷம் யா ஸம்ஸ்க்ருதா தார்யதே

க்ஷீயந்தே கலு பூஷணானி ஸததம் வாக் பூஷணம் பூஷணம்

மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;

நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.

நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ

ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.

ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.

நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.

 

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

 

குஞ்சியகுங் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சளழகும் அழகல்ல- நெஞ்சத்து

நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்

கல்வியழகே அழகு- நாலடியார்

 

சிகை அலங்காரமோ, கரை போட்ட ஆடை அலங்காரமோ, மஞ்சள் முதலிய அலங்காரப் பூச்சுகளோ அழகல்ல. கல்வி கற்று நடு நிலையில் நிற்பதே அழகு.

 

இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

 

கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு விளக்கமுடியாதவர்கள்

மலர்ந்தும் மணம் வீசாத மலர்களைப் போன்றவர்கள்.

 

சொல் அழகு

 

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்றமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

XXXX

 

विद्या नाम नरस्य रूपम् अधिकं प्रच्छन्नगुप्तं धनं
विद्या भोगकरी यशःसुखकरी विद्या गुरूणां गुरुः ।
विद्या बन्धुजनो विदेशगमने विद्या परा देवता
विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीनः पशुः ॥ 1.20 ॥

 

வித்யா நாம நரஸ்ய ரூபமதிகம் ப்ரச்சன்னகுப்தம் தனம்

வித்யா போககரீ ய்ஸ்ஹ ஸுககரீவித்யா குரூணாம் க்ருஹு

வித்யாம் ப்ந்துஜனோ விதேச கமனே வித்யா பராதேவதா

வித்யா ராஜஸு பூஜ்யதேந து தனம் வித்யா விஹீனஹ பசுஹு

 

கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;

அவனுடைய ரஹஸிய செல்வம் அது;

வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது.

‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;

வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்;

கல்வியே உயர்ந்த கடவுள்.

மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.

 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்– குறள் 410

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

XXXX SUBHAM XXX

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: