ஹிந்துக்களின் தர்ம சிந்தனை! (Post 5545)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 16 October 2018

 

Time uploaded in London – 6-33 AM (British Summer Time)

 

Post No. 5545

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

இது தான் இந்தியா

ஹிந்துக்களின் தர்ம சிந்தனை!

ச.நாகராஜன்

 

ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் 6, மார்ச், 1948 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை – ‘தர்மத்தின் பால் பக்தி

 

‘ஸ்டெல்லா அஜுரா என்ற இத்தாலிய சரக்குக் கப்பல் ஒன்று பம்பாயிலிருந்து வெனிஸுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் புறப்பட்டது. 48 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் நாராயண்தாஸ் என்ற 18 வயது இளைஞன் கப்பலில் சரக்கு அறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனுக்கு வேலை வேண்டும். பாஸ்போர்ட் இல்லாததினால் ஏடனிலோ அல்லது சூயஸிலோ கப்பலிலிருந்து அவனை இறக்கி விட முடியாது. கப்பல் வெனிஸை அடைந்தது. சரக்குகள் இறக்கப்பட்டன. கப்பலில் ஒரு காவலாளியும் நாராயண்தாஸும் தான் இருந்தனர்.

 

அதிகாரிகளுக்கு ஒரு பிரச்சினை – அவன் வேலை பார்க்க விரும்பினான், ஆனால் கொடுப்பதற்கோ அவர்களிடம் வேலை ஒன்றும் இல்லை. கப்பலிலிருந்து இறக்கி விடவும் முடியாது. அவனுக்கு உணவு அளிக்கப்பட்ட போது அவன் அதை ஏற்க மறுத்தான். ஏதேனும் வேலை கொடுத்தால், அதைச் செய்ததற்குப் பிறகு தான் சாப்பிடுவேன் என்றான் அவன். அதிகாரிகள் அவனுக்குப் பெயருக்கு ஒரு வேலை கொடுத்தார்கள்.

அங்குள்ள டெஸ்கை நாளுக்கு இருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான் அந்த வேலை.

 

தர்மத்தை – தனது மதத்தின் கொள்கையை – இப்படி வழுவாது பார்ப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நாராயண்தாஸ் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு லட்சியவாதி!

 

*

ஒரு சமயம் அயோத்யா மஹாராணி ஸ்ரீ கனக பவனில் உள்ள இறைவனான, ஸ்ரீ பிஹாரிஜியின் சேவைக்கென ஒரு குதிரையை அளித்தார். சில வருட சேவைக்குப் பின்னர் அந்த குதிரைக்கு வயதானது. அது சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டது. அது ஒரு கிராமத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்குப் பதிலாக சேவைக்கென புதிய இளம் குதிரை ஒன்று தரவழைக்கப்பட்டது.

வயதான குதிரை இயல்பாகவே அமைதியானது. அது, தான் அயோத்யாவிலிருந்து அனுப்பப்படப்போவதைத் தெரிந்து கொண்டது. தரையில் அது உறுதியாகப் படுத்து விட்டது. யாரும் அதை அசைக்கக் கூட முடியவில்லை.

 

குதிரையைப் பாதுகாப்பவர், “ அதை அனுப்பப்போகிறோம் என்று சொன்ன நாளிலிருந்து அதன் கண்களில் கண்ணீர் பொழிந்து கொண்டே இருக்கிறது. கொள்ளைக் கூட அது தின்பதில்லை.” என்றார். அதை வலுக்கட்டாயமாக குதிரை லாயத்தில் அடைத்தனர்.

மோஹந்தாஜி என்பவர் குதிரையைப் பார்த்துப் பரிதாபம் அடைந்தார். அவர் மஹாராணியிடம் சென்று குதிரையைப் பற்றிச் சொல்லவே, மஹாராணி, “அதை இதுவரை அனுப்பவில்லையெனில், மீண்டும் இங்கு கொண்டு வாருங்கள்” என்றார்.

 

மோஹந்தாஜி ரயில் நிலையத்திற்கு விரைந்தார். ஸ்டேஷன் மாஸ்டரிடம் அதை விடுவிக்குமாறு வேண்டினார். ஸ்டேஷன்மாஸ்டரோ, “அது ஏற்றப்பட்ட வாகன் ஏற்கனவே கிளம்பி விட்டது” என்றார். மோஹந்தாஜி, ‘ரயில் வாகன் ஸ்டேஷனில் இன்னும் இருப்பதை நான் பார்த்தேன்’, என்றார். ஸ்டேஷன்மாஸ்டர் விசாரித்த போது அந்த வாகனை ரயிலில் இணைக்க கார்டு மறந்து விட்டார் என்பது தெரிய வந்தது.

 

வேறு ஒருவரும் அந்தக் குதிரைக்கான முயற்சி எதையும் எடுக்காமல் இருந்த போது எல்லாம் வல்ல இறைவனான ஸ்ரீ பிஹாரிஜியே அந்தக் குதிரை மீது கருணை மிகக் கொண்டு அருள் பாலித்தார்!

மீண்டும் தனது இடத்திற்கு வந்த அது, இறக்கும் வரை குதிரை லாயத்திலேயே இருந்தது. இறந்த பின்னர், அதன் உடல் புனித சரயு நதியில் விடப்பட்டது

 

ஆதாரம் :28-9-18 ட்ரூத் ஆங்கில வார இதழ் தொகுதி 86; இதழ் 24

 

ஆங்கில மூலம் கீழே தரப்பட்டுள்ளது :

 

Noble Righteous Hindus: Righteous Thinking

Devotion to Dharma :  6th March,1948 published in Hindustan Standard

A cargo ship of Italy named “Stella Azura” set sail for Venice from Bombay almost couple of months ago. 48 hours later a 18 year old stow away was found named Narayandas. He wanted to work. He could not disembark at Aden or Suez as he did not possessed passport. The ship reached Venice. The cargo was offloaded. Only a guard and Narayandas remained in the ship. The authorities got into trouble with this guy as he wanted to work but there was no work. He cannot disembark either. If he was offered food, he refused to take food without work. His religion forbids him. If he is given some work , then only he can take food. Authorities finally forced to give him a token work of cleaning the deck twice a day.

 

How many people obeys the religion in this way? Narayandas should be our ideal.

Once the Maharani of Ayodhya put a horse into service of Sri Bihariji in Sri Kanak Bhavan.After few years of service it turned

 

old and it was released from service.It was to be sent to a village and a young horse was brought instead.

 

The old horse was peaceful in nature. Now she realized that she was being transferred from Ayodhya.It started lying on the ground firmly, nobody could remove her. The stable keeper said “Since the day it was decided to move her, it is in tears.It is not taking fodder.” Then it was forcefully put into horse box.

Mohantaji had sympathy for her. He told the Rani and she said “ If it is not already despatched, then bring her back.”

 

Mohantaji rushed to railway station and went to the station master to release her. The station master said “ It has already departed”. Mohantaji said “I just saw the wagon still in station”. On enquiry station master found that the guard forgot to attach the wagon. The Lord Almighty Bihariji Himself bestowed grace on her as no one else took interest for her.I rushed to the stable of the temple till its demise. After its demise its body was put in holy Sarayu river.

 

Courtesy : Truth Weekly Vol 86 Issue 24 dt 28-9-2018

 

****

Leave a comment

2 Comments

  1. இந்தக் குதிரையின் கதை நமக்கு குருவாயூரப்பனுக்குச் சேவை செய்த “கேசவன்” என்ற யானையை நினைவூட்டுகிறது. நிலம்பூர் அரண்மனையால் [தம்புரான்]வழங்கப்பட்ட இந்த கஜராஜன், மாப்ளா கலகத்திலிருந்து தப்பி அதன் பதினைந்தாவது வயதில், 1922 ஜனவரி 14ம் தேதி குருவாயூர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 1976 டிசம்பர் 2ம்தேதி ஏகாதசியன்று காலை ஸ்ரீ க்ருஷ்ணன் துதி கேட்டவாறே பகவான் சரணத்தில் சேர்ந்தது. ஆரம்பத்தில் எவ்வளவோ இன்னல்களுக்கு ஆளாகியும் குருவாயூரப்பன் சேவை தவிற பிற செயல்களில் ஈடுபட மறுத்து சண்டித்தனம் செய்தது! இதன் வரலாற்றை ஸ்ரீ உண்ணிக்ருஷ்ணன் புதூர் மலையாளத்தில் எழுதி தமிழில் ஆனந்த விகடன் வெளியீடாக வந்திருக்கிறது. மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்களும், மனதை உருக்கும் சம்பவங்களும் நிறைந்த வாழ்க்கை! இறுதியில் மனிதர்களுக்கும் கிடைத்தற்கரிய பேறு! இதை நினைப்பதே புண்ணியம்!
    இத்தகைய வரலாறுகளிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன.
    1. மனிதன் தவிர விலங்கு, பிராணி வர்கத்தினருக்கும் அறிவும் உணர்ச்சியும் உண்டு. [தொல்காப்பியத்தில் உயிரினங்களுக்கு ஒன்றிலிருந்து ஆறுவரை அறிவுள்ளமை குறிப்பிடப்பட்டிருக்கிறது. சில மிருகங்களுக்கு (மனிதன் தவிர) ஆறு அறிவு உண்டு, யானையும் அதில் சேரும்.
    2. யானைகள், குதிரைகள் மனிதன் பேச்சையும், உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் அறிந்துகொள்ளும் சக்தியுள்ளவை. இதை தற்காலத்தில் பல மேலை நாட்டினர் ஆதரங்களுடன் நிலை நாட்டியுள்ளனர். Elephant Whisperer, Horse Whisperer என்ற தலைப்புக்களில் இத்தகைய பலரைப் பற்றிய நூல்கள் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன.
    3. இத்தகைய சில பிராணிகள் தாங்கள் தெய்வீக சேவையில் ஈடுபட்டிருப்பதை நன்றாகவே உணர்ந்துகொண்டிருக்கின்றன.
    4, பகவான் இத்தகைய உயிரினங்களுக்கும் அனுக்ரஹம் செய்கிறார்! கஜேந்திரனும், சிலந்தியும் வெறும் புராண கப்சாக்கள் அல்ல!
    கடந்த 50 வருட காலத்தில் குருவாயூர் கஜராஜன் கேசவன் போன்ற கம்பீரமான யானை உலகில் எங்குமே பிறக்கவில்லை என்று சொல்கிறார்கள்!
    இத்தகையா குதிரைகளும் யானைகளும் மனிதனுக்கே ஆசானாக இருக்கின்றன! அவற்றின் பெயரும் புகழும் நிலைப்பதாக!

  2. Santhanam Nagarajan

     /  October 17, 2018

    நல்ல அருமையான செய்தி! ஆனந்தவிகடனில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தேக்கடி ராஜா யானையின் கதையைப் பற்றிய ஒரு அருமையான நாவல். ஆனால் அதே ஆனந்தவிகடனின் வெளியான உன்னிகிருஷ்ணன் புதூர் அவர்களின் நூலைப் படிக்கவில்லை. புதிய தகவலுக்கு நன்றி

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: