மொஜார்ட்டின் இறுதிப் பாடல் இசையமைப்பு ! (Post No.5578)

WRITTEN BY S NAGARAJAN

Date: 23 October 2018

Time uploaded in London – 7-09 AM (British Summer Time)

Post No. 5578

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மொஜார்ட்டின் இறுதிப் பாடல் இசையமைப்பு!

ச.நாகராஜன்

உல்ஃப்கேங் அமாடியஸ் மொஜார்ட் (Wolfgang Amadeus Mozart – (பிறப்பு 27-1-1756 மறைவு 5-12-1791) உலகின் மிகப்ப் பெரும் இசைக்கலைஞர்.

35 வயதிலேயே மறைந்த இந்த மாபெரும் இசைமேதை தன் வாழ்நாளுக்குள்ளாக 600 இசையமைப்புகளைச் செய்து முடித்திருந்தார். ஐந்தாம் வயதிலேயே அவருக்கு இந்த இசையமைக்கும் திறமை இருந்தது.

 

அவரது இறுதி இசையமைப்பு Requiem என்பதாகும்.

மொஜார்ட்டின் உடல் வாகு பூஞ்சையானது. அதனால் ஆரோக்கியமின்றி அவர் அவஸ்தைப்பட்டார்.

முடிவு நெருங்கிக் கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயது ஆகிவிட்ட சமயம் அவர் பிரசித்தி பெற்ற ரிக்யுயம் இசையை அமைத்தார். அதைத் தனது இறுதிச் சடங்கு பாடலாகவே அவர் கருதினார்.

ஒரு நாள் அவர் ஆழ்ந்து இசையமைப்பில் ஈடுபப்ட்டிருந்த சமயம் வீட்டின் முன்னால் வண்டி ஒன்று வந்து நின்ற சப்தம் கேட்டது. அழகிய உடை அணிந்த ஒருவர் அவர் முன் வந்தார். அவரது நடை உடை பாவனை ஒரு கனவானுக்கு உரித்ததாக இருந்தது.

“சார்,ஒரு முக்கியமான விஷயத்திற்காக ஒரு முக்கியமான நபரால் நான் இங்கு அனுப்பப் பட்டிருக்கிறேன்!

என்றார் அவர்.

மொஜார்ட், “அந்த முக்கியமான நபர் யார்? என்று கேட்டார்.

வந்தவர்: அதைச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை.

மொஜார்ட் : சரி, அவருக்கு என்ன வேண்டும்?

வந்தவர் : அவர் மிகவும் நேசித்த ஒருவரை அவர் இழந்து விட்டார். அந்த நினைவு அவருக்குப் போற்றுதலுக்கு உரிய ஒன்று. வருடா வருடம் அவரது நினைவாக அவர் ஒரு அற்புதமான இசைச் சடங்கு ஒன்றை நடத்த விரும்புகிறார். அதற்காக உங்களை இறுதிச் சடங்கிற்கான பாடல் ஒன்றை இசையமைக்கச் சொல்கிறார். 

மொஜார்ட் மர்மம் நிறைந்த இந்தப் பேச்சால் ஆச்சரியப்பட்டார். அந்த இசையமைப்பிற்கு அவர் ஒத்துக் கொண்டார்.

வந்தவர் : உங்கள் இசை ஞானம் முழுவதையும் இதில் பயன்படுத்துங்கள். மிக அற்புதமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இதை முடிக்க எவ்வளவு நாள் வேண்டும்?

மொஜார்ட் : ஒரு மாதம்! 

வந்தவர் : சரி! ஒரு மாதம் கழித்து நான் வருகிறேன். இதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?

மொஜார்ட் : நூறு டாலர்கள்                         

வந்தவர் : இதோ நூறு டாலர்கள்.

அவர் நூறு டாலர்களை எண்ணி மொஜார்ட்டின் மேஜை மீது வைத்தார். மொஜார்ட் சிறிது நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தார்ல் பின்னர் தனது வேலையாட்களில் ஒருவரை அழைத்து ஒரு பேப்பரையும் பேனாவையும் மையை கொண்டு வரச் சொன்னார். அவரது மனைவியின் ஆட்சேபணையையும் பொருட்படுத்தாமல் எழுத ஆரம்பித்தார். பல நாட்கள் இந்த எழுத்துப் பணி தொடர்ந்தது. பகல், இரவு பாராமல் இது தொடர்ந்தது.

 

நாள் ஆக ஆக, இது இன்னும் தீவிரமானது. ஆனால் ஏற்கனவே பலம் இழந்து நலிந்திருந்த அவரது உடலால் இந்த உற்சாகப் பணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஒரு நாள் காலை அவர் மயங்கி விழுந்தார். வேலையையும் நிறுத்த வேண்டியதாயிற்று.      

ஒரு நாள் தன் மனைவியிடம் அவர், “ நிச்சயமாக இதை எனது இறுதிச் சடங்கிற்காகத் தான் எழுதுகிறேன், எனது இறுதிச் சடங்குப் பாடலாக இது அமையும்” என்றார். இந்த எண்ணத்தை இறுதி வரை அவரால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை.

பணியைத் தொடர்ந்தபோது அவரது உடல் பலம் குறைந்து கொண்டே வந்தது. இசையமைப்பு முன்னேறிக் கொண்டே இருந்தது.

அவர் கொடுத்திருந்த ஒரு மாதக் கெடு முடிந்தது.
அந்தப் பணியைக் கொடுத்திருந்த அறிமுகமில்லாத அந்நியர் மீண்டும் வந்தார். மொஜார்ட் : எனது வார்த்தையைக் காப்பாற்ற முடியவில்லை.
வந்தவர் : அதனால் பரவாயில்லை.இன்னும் எவ்வளவு நாள் வேண்டும்?
மொஜார்ட் : இன்னொரு மாதம் தேவை. நான் எதிர்பார்த்ததை விட இந்த வேலை நீண்டு கொண்டே போகிறது. நான் முதலில் நினைத்திருந்ததை விட  இன்னும் அதிகமாகிறது.
வந்தவர் : அப்படியானால் இந்தப் பணிக்கான தொகை இன்னும் கொஞ்சம் கூடுதலாகும், இல்லையா? இதோ, இன்னும் ஐம்பது டாலர்.
மிகவும் ஆச்சரியப்பட்ட மொஜார்ட், “ நீங்கள் யார்? என்றார். வந்தவரோ, “அது இந்தப் பணிக்கு அவசியமற்ற விஷயம். ஒரு மாதத்தில் திரும்பவும் வருகிறேன்” என்று சொல்லி உடனே அங்கிருந்து புறப்பட்டார்.
மொஜார்ட் உடனடியாகத் தனது வேலையாட்களில் ஒருவரை அழைத்து, வந்தவர் எங்கு செல்கிறார் என்பதை அவரைத் தொடர்ந்து சென்று பார்த்து வரச் சொன்னார். ஆனால் அந்த வேலையாளுக்கோ இதற்கான திறமை இல்லாததால் வந்தவர் சென்ற இடத்தைக் கண்காணிக்க முடியாமல் திரும்பி வந்தார்.
மொஜார்ட் வந்தவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல; மறு உலகத்தைச் சேர்ந்தவரே அவர்; தனது இறுதி காலம் நெருங்குவதை உணர்த்தவே அவர் வந்துள்ளார் என்று எண்ணினார்.
தனது இசையமைப்பில் இன்னும் அதிக ஈடுபாடு கொண்டார். தனது மேதைத் தன்மை அனைத்தையும் அதில் காட்டினார். இந்தப் பணியினால் அவருக்கு பயங்கரமான வலிப்புகள் வந்தன. ஆனால் பணி குறித்த காலமான ஒரு மாதத்திற்குள்ளாக முடிந்து விட்டது.
குறித்த நாள் வந்த போது சரியாக அன்று அந்த அந்நியர் வந்து சேர்ந்தார். ஆனால் அன்று மொஜார்ட் இல்லை. அவர் இறந்திருந்தார்.
அவரது இசை வாழ்வு மிகக் குறுகியது; ஆனால் மிகவும் ஆழ்ந்தது. 36 வயது முடியவில்லை. அவர் மறைந்து விட்டார். ஆனால் இந்தக் குறுகிய வாழ்நாளில் அவர் அடைந்த புகழ் அழியவே அழியாது. அவரது இசையைப் போற்றுகின்ற இதயங்கள் உள்ளவரை அந்தப் புகழ் நீடித்து நிலைத்திருக்கும்!
ஆதாரம் : The Flowers of Literature by William Oxberry தமிழாக்கம் ச.நாகராஜன்
ஆங்கில மூலம் இதோ:

 


The composition of Requiem, and how Mozart died

The bodily frame of Mozart was tender and exquisitely sensible ; ill health soon overtook him, and brought with it a melancholy approaching to despondency. A very short time before his death, which took place when he was only thirty-six, he composed that celebrated requiem, which, by an extraordinary presentiment of his approaching dissolution, he considered as written for his own funeral.

One day, when he was plunged in a profound reverie, he heard a carriage stop at his door. A stranger was announced, who requested to speak with him. A person was introduced, handsomely dressed, of dignified and impressive manners. ” I have been commissioned, sir, by a man of considerable importance, to call upon you.”—” Who is he?” interrupted Mozart. ” He does not wish to be known.”—” Well, what does he want?” —” He has just lost a person whom he tenderly loved, and whose memory will be eternally dear to him. He is desirous of annually commemorating this mournful event by a solemn service, for which he requests you to compose a requiem.”—Mozart was forcibly struck by this discourse, by the grave manner in which it was uttered, and by the air of mystery in which the whole was involved. He engaged to write the requiem. The stranger continued, ” Employ all your genius on this work; it is destined for a connoisseur.”—” So much the better.”—” What time do you require ?”—” A month.”—” Very well; in a month’s time I shall return—what price do you set on your work ?”—” A hundred ducats.” The stranger counted them on the table, and disappeared.

Mozart remained lost in thought for some time: he then suddenly called for pen, ink, and paper, and, in spite of his wife’s entreaties, began to write. This rage for composition continued several days; he wrote day and night, with an ardour which seemed continually to increase; but his constitution, already in a state of great debility, was unable to support this enthusiasm; one morning he fell senseless, and was obliged to suspend his work. Two or three days after, when his wife sought to divert his mind from the gloomy presages which occupied it, he said to her abruptly, ” It is certain that I ain writing this requiem for myself; it will serve for my funeral service.” Nothing could remove this impression from his mind.

As he went on, he felt his strength diminish from day to day, and the score advancing slowly. The month which he had fixed being expired, the stranger again made his appearance. ” I have found it impossible,’ said Mozart, ” to keep my word.” ” Do not give yourself any uneasiness,” replied the stranger; ” what further time do you require?”—” Another month; the work has interested me more than I expected, and I have extended it much beyond what I at first designed.” —” In that case, it is but just to increase the premium; here are fifty ducats more.”—”Sir,” said Mozart, with increasing astonishment, “who then are you ?”—”That is nothing to the purpose; in a month’s time I shall return.”

Mozart immediately called one of his servants, and ordered him to follow this extraordinary personage, and find out who he was ; but the man failed from want of skill, and returned without being able to trace him.

Poor Mozart was then persuaded that he was no ordinary being ; that he had a connection with the other world, and was sent to announce to him his approaching end. He applied himself with the more ardour to his requiem, which he regarded as the most durable monument of his genius. While thus employed, he was seized with the most alarming fainting fits; but the work was at length completed before the expiration of the month. At the time appointed, the stranger returned, but Mozart was no more. His career was as brilliant as it was short. He died before he had completed his thirty-sixth year; but in this short space of time he had acquired a name which will never perish, so long as feeling hearts are to be found.

From The Flowers of Literature by William Oxberry

–SUBHAM–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: