Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 October 2018
GMT Time uploaded in London – 6-42 am
Post No. 5599
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
Part 3 Tamil Quiz on Great Indian Women
பகுதி 3 – இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா? Quiz க்விஸ் (Post No.5599)
- காகதீய சாம்ராஜ்யத்தின் முழு முதல் மன்னராக ஆட்சி செய்த ராணி. 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகராசி. யார் அவர்?
42.காண்டவ வன (கோண்ட்வானா) ராணி; 500 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆண்ட நங்கை யார்?
43.மராட்டிய பக்தி இலக்கியத்தில் புகழ்பெற்ற மாதரசி; மாமியாரின் கொடுமையையும் மீறி விட்டலாவைத் தொழுதார். தமிழ் உள்பட பலமொழிகளில் திரைப்படக் கதையானவர். யாரோ அவர் யரோ?
44.மதுரை நாயக்க வம்ச ராணி; ராணி மங்கம்மாளின் பேத்தி. யார் அவள்?
45.கணித மேதை பாஸ்கரரின் புதல்வி; அவரது நீங்காத நினைவுக்காக அவள் பெயரில் புஸ்தமும் எழுதினார். அந்த புகழுக்குரிய பெண்ணரசி யார்?
46.இந்தியாவின் கவிக்குயில், விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர், வங்காளக் கவிஞர். யார் அவர்?
47.அர்ஜுனன் மணிபுரத்துக்கு வந்தபோது
சித்ராங்கதை என்ற இளவரசியை மணந்தான். அவளுடைய தமிழ்ப் பெயர் என்ன?அவள் பெயரில் நாடகம், நாட்டுப்புற பாடல்கள் உள. அந்த அழகி யார்?
48.தமிழ் கற்கும் அனைவரும் அறிந்த பெண்மணி; சங்க காலம் முதல் மூன்று பெயர்களாவது இவர் பெயரில் நூலெழுதி இருக்கிறார்கள். யார் அந்த மூதாட்டி?
49.மஹாபாரத திரவுபதி போலப் போராட்டக் காரி: துணிச்சல் மிக்க பத்தினித் தெய்வம். 12 வயதில் 16 வயது வணிகனை மணந்த நங்கை யார்?
50.கரிகால் சோழனின் மகள்; காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கணவணை மீட்ட காரிகை யாரோ?
51.திருப்பாவை முப்பதும் செப்பினாள்; பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை. யார் அவர்?
52.காஷ்மீரின் புகழ் பெற்ற சிவ பக்தை; சைவ சித்தாந்தி. யார் அவர்?
53.தட்சிணேஸ்வரத்தில் காளியின் அருட் மழையில் நனைந்தவரின் மனைவி; அவரும் புனிதை; யார்?
54.மஹாத்மா காந்தியின் மனைவி பெயர் என்ன?
55.ஐ.நா.சபையில் தமிழ் முழக்கம், ஸம்ஸ்க்ருத முழக்கம் செய்யும் கான மழை பெய்த புகழ் மிகு, அருள் மிகு பாடகி யார்?
56.பாரதியாரின் பாடல்களைத் திரைப்படத்தில் பாடி தேசபக்திக் கனல் எழுப்பிய இசையரசி யார்?
57.மேற்கூறிய இரு கர்நாடக இசையரசிகளுடன் சேர்ந்து இசை மூவர் என்று பெயர் எடுத்தவர்களில் ஒருவர்; ஜி.என்.பாலசுப்ரமண்யத்தின் சீடர்; லலிதாங்கியின் மகள்; யார் அவர்?
58.நடனம் என்றால் தஞ்சாவூர் மாது ஒருவரின் பெயரே முழங்கும். யார் அவர்?
59.புத்தரின் மனைவி பெயர், ராகுலனப் பெற்றெடுத்த பெண்ணரசி பெயர் என்ன?
60.மஹாஷ்டிர மாநிலத்தின் கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, கவிஞர், புனே நகரில் பிளேக் நோய் கண்டு இறந்த பெண்மணி யார்?
விடைகள்:–
41.ருத்ரமாதேவி
42.ராணி துர்காவதி
43.சக்குபாய்
44.ராணி மீனாட்சி
45.லீலாவதி
46.சரோஜினி நாயுடு
47.அல்லிராணி- சித்ராங்கதா
48.அவ்வையார்
49.கண்ணகி
50.ஆதிமந்தி
51.ஆண்டாள்
52.லல்லேஸ்வரி, காஷ்மீர்
53.சாரதாபாய்
54.கஸ்தூரிபாய்
55.எம்.எஸ்.சுப்புலெட்சுமி
56.டி.கே.பட்டம்மாள்
57.எம்.எல்.வசந்தகுமாரி
58.பால சரஸ்வதி
59.யசோதரா
60.சாவித்ரிபாய் பூலே
ANSWERS
41.RUDRAMA DEVI
42.RANI DURGAVATI
43.SAKKUBHAI
44.MEENAKSHI OF MADURAI
45.LEELAVATI (Lilavati)
46.SAROJINI NAYUDU
47.ALLI RANI/CHITRANGADA
48.AVVAIYAR
49.KANNAKI
50.ADI MANTHI
51.ANDAL
52.LAL DED (Lalleswari) OF KASHMIR
53.SARADA DEVI
54.KASTURIBHAI
55.MS SUBBULAKSHMI
56.DK PATTAMMAL
57.M L VASANTHAKUMARI
58.BALA SARASVATI
59.YASODHARA, WIFE OF BUDDHA, MOTHER OF RAHULA
60.SAVITRIBHAI PHULE
–subham–