சபரிமலை தரிசனம் : கம்யூனிஸ்டுகளின் அக்ரமம்! (Post no.5604)

WRITTEN BY S NAGARAJAN

Date: 30 October 2018

Time uploaded in London – 7-24 AM (British Summer Time)

Post No. 5604

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சபரிமலை தரிசனம் : கம்யூனிஸ்டுகளின் அக்ரமம்!

ச.நாகராஜன்

1

சொந்தத்தில் சூன்யம் வைத்துக் கொள்வது என்று ஒரு பழமொழி உண்டு.

கம்யூனிஸ்டுகளுக்கு இந்தப் பழமொழி சபரிமலை தரிசன விஷயத்தில் நூற்றுக்கு நூறு பொருந்துகிறது.

சூன்யத்தைத் தானே வைத்துக் கொண்டு விட்டார்கள்.

தெய்வ சாபம் மற்றும் தேச சாபம் அவர்களை விடாது.

விளைவை சீக்கிரத்தில் அனுபவித்தே ஆக வேண்டும்.

விளைவு தேர்தல் முடிவின் ரூபத்தில் வந்து சேரும்.

கம்யூனிஸ்டுகளின் அக்ரமம் சபரிமலை சாஸ்தாவிந் அருளினால் ஒரு முடிவுக்கு வந்தே தீரும்!

சொந்த நாட்டிலேயே அழிந்து விட்ட கம்யூனிஸம் இந்தியாவில் இழுத்துக் கொண்டு இருக்கிறது.

சுவாசம் சீக்கிரம் நின்று விட அவர்களே வழியைத் தேடிக் கொண்டு விட்டார்கள்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

2

ஜனநாயகம் என்றால் என்ன அர்த்தம்? எந்தக் கடையனும் சமூகத்திற்கு எதிராக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று அர்த்தமா?

ஊடக தர்மம் என்றால் என்ன அர்த்தம்?

120 கோடி இந்தியர்,நாட்டுக்குச் சொந்தமானவர்கள் வாழ்கையில், அதில் ஓரிரு தேச துரோகிகள்  சொல்வதை தினமும் ஒரு மணி நேரம் ஒளி பரப்பி அதை ஒட்டு மொத்த நாட்டின் கருத்தாகச் சித்தரிக்க முற்படுவது தான் ஊடக தர்மமா?

நீதி மன்ற நியாயம் என்றால் என்ன அர்த்தம்?

120 கோடி மக்களுக்கும் ஒரே நீதி ஒரே நியாயம் ஒரே சட்டம் என்பதல்லாமல் ஹிந்துக்களுக்கு மட்டும் தனியாக ஒரு சட்டம், இதர மதங்களுக்கு இதே இந்தியாவில் ஒரு தனிச் சட்டம் என்பதா நீதி மன்ற நியாயம்?

ஹிந்துக்களுக்கான நாட்டில் ஹிந்துக்களை மட்டும் பாதிக்கும் விதத்தில் சட்டம் இருப்பது நியாயமாகுமா?

எண்ணிப் பார்த்து இதில் உள்ள குறைகளைக் களைய வேண்டிய தருணம் வந்து விட்டது, இல்லையா?!

3

செகுலரிஸம் என்றால் ஹிந்து விரோதம் என்று அர்த்தமா?

அப்படித்தான் கடந்த 70 ஆண்டு கால பாரத வரலாறு கூறுகிறது.

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஒரு பெண் பாதிரியாராக இருக்க முடியாது.

பெண்ணியவாதிகளில் எந்த ஒரு பெண்ணாவது இதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறாரா?

ஊடகத்தில் இது பற்றிய எந்த ஒரு விவாதமாவது இடம் பெற்றிருக்கிறதா?

இஸ்லாமியரின் மசூதிகளில் பெண்களை அனுமதிப்பதுண்டா?

பெண்ணியவாதிகளில் எந்த ஒரு பெண்ணாவது இதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறாரா?

ஊடகத்தில் இது பற்றிய எந்த ஒரு விவாதமாவது இடம் பெற்றிருக்கிறதா?

இஸ்லாமியரின் மத சம்பந்தமான பணத்தை இதர வழிகளில் செலவழிக்க அரசால் முடியுமா? அதை வஃப் போர்ட் அல்லவா தீர்மானிக்கிறது!

கிறிஸ்தவரின் மத சம்பந்தமான பணத்தை இதர வழிகளில் செலவழிக்க அரசால் முடியுமா? அதை வடிகன் காட்டும் வழியில் இநதிய கிறிஸ்தவ தலைமைப் பீடம் அல்லவா தீர்மானிக்கிறது!

ஆனால் ஹிந்து கோவில்களின் பணமோ அரசு சொல்லும் வழியில் பணத்தை ஹிந்து கோவில்களுக்கான ஆக்கபூர்வமான வழியில் அல்லாமல் எதற்கு வேண்டுமானாலும் செலவழிக்கப்படுகிறது.

நீதி மன்றங்கள் இஸ்லாமியர் பற்றியோ அல்லது கிறிஸ்தவர் பற்றியோ எந்த ஒரு வழக்கையும் மத ரீதியாக சுயேச்சையாக விசாரித்துத் தீர்ப்பு சொல்ல முடியாது.

அதாவது செகுலரிஸம் என்பது ஹிந்து விரோதம் – ஹிந்து விரோதம் மட்டுமே – என்பது உறுதியாகிறது!

4

பாரம்பரிய பழக்கம் என்பது ஹிந்து  மதத்தில் ஒரு முக்கியமான அங்கம்.

சபரி மலை, திருப்பதி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆலயங்களில் ஆங்காங்கு வழி வழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்கள், சடங்குகள், திருவிழாக்கள் அப்படியே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கு என்ன சங்கடம், தெரியவில்லை.

அதிக வருமானம் வரும் ஒரு கோவிலின் அதிகப்படியான பணத்தை, வருமானம் அவ்வளவாக இல்லாத கோவிலுக்கு அல்லவா கொடுக்க வேண்டும்?

அதை விடுத்து நலத் திட்டங்கள் என்ற பெயரால் நினைத்தபடி செலவழிக்க அரசுக்கு என்ன உரிமை?

இதற்கான ஆலய வாரியம் ஒன்றல்லவா சுயேச்சையாக செயல்படும் விதத்தில் அமைக்கப்பட வேண்டும்?

கம்யூனிஸ்டுகள், நாத்திகக் கும்பலான திராவிட இயக்க ஆதிக்கத்திலிருந்து கோவில்கள் விடுபட இதுவல்லவா வழி?

சபரிமலையில் கம்யூனிஸ்டு பெண்களையும், இஸ்லாமிய பெண்களையும் மாறு வேடத்தில் – குறிப்பாக 10 முதல் 50 வயதுக்குள்ளவராக இருப்பவரைத் தேர்ந்தெடுத்து – வலிய அனுப்ப முற்படுவது நியாயமா?

ஹிந்துக்களும் யோக்கியமான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இது பற்றித் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

உரிய முறையில் ஹிந்துக்களுக்கான அடிப்படை உரிமைகளை – அதிகப்படியான உரிமைகளை அல்ல – அடிப்படை உரிமைகளை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்; அதற்குரிய சட்டங்களை இயற்ற வேண்டும்!

இதற்கு ஹிந்துக்கள் ஒரே குரலாக ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும்.

இதை இயக்கபூர்வமான வழியில் செய்ய வேண்டுமெனில், ஆர் எஸ் எஸ் ஒன்றே தான் வழி!

நான்ய பந்தா வித்யதேயனாய!

இதை விட வேறு வழி ஒன்றுமில்லை!

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: