WRITTEN BY S SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 4 November 2018
GMT Time uploaded in London – 6-09 am
Post No. 5623
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
நீதி சதகத்தில் 23 ஸ்லோகங்களைக் கண்டோம். மேலும் தொடர்வோம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது தமிழ்ப் பழமொழி. சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது — என்பது பர்த்ருஹரி மொழி!
பர்த்ருஹரி 24,25,26,27
இந்த நான்கு பாடல்களிலும் மேன்மக்களுக்கும் கீழ்மக்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் காட்டுகிறார். கீழ் மக்கள் நாய் போன்றவர்கள். மேல் மக்களோ சிங்கம் ,யானை போன்றோர். ஒரு லட்சியத்தை அடைய உயர்ந்த உத்திகளை மட்டுமே பயன்படுத்துவர். இதைத் தமிழ்ப் புலவர்களும் அழகாக பாடி வைத்துள்ளனர். அவைகளை ஒப்பிட்டுச் சுவைப்போம்.
ஜயந்தி தே ஸுக்ருதினோ ரஸஸித்தாஹா கவீஸ்வராஹா
நாஸ்தி யேஷாம் யச: காயே ஜராமரணஜம் பயம்-1-24
ஆழ்ந்த கல்விகற்ற, நவ ரசங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் புலவர்களின் புகழ் என்றும் குன்றாது. அப்பேற்பட்ட புலவர்கள் என்றும் வெல்வர்.
அவர்களுடைய புகழ் அழியும் என்ற பயமே இல்லை.
जयन्ति ते सुकृतिनो
रससिद्धाः कवीश्वराः ।
नास्ति येषां यशःकाये
जरामरणजं भयम् ॥ 1.24 ॥
‘கவி’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் புலவர் என்ற பொருளும் நெடுநோக்குடைய அறிஞர் என்றும் பொருளும் உண்டு. உண்மையில் வேத காலக் கவிஞர்கள் அப்படித்தான் இருந்தனர்.
xxxxx
சிங்கம் புல்லைத் தின்னுமா?
க்ஷுத்க்ஷாமோஅபி ஜராக்ருசோபி சிதிலப்ராணோபி கஷ்டாம் தசா
மாபன்னோபி விபன்னதீதிரபிப்ராணேஷு நஸ்யஸ்வபி
மத்தேபேந்த்ர விபின்னகும்பபிசிதக்ராஸைகபத்தஸ்ப்ருஹஹ
கிம் ஜீர்ணம் த்ருணமத்தி மானமஹதாமக்ரேஸரஹ கேஸரீ 1-25
சிங்கத்துக்கு பசியால் வாட்டம்; ஆனால் கிழடு; உடலில் பலம் குன்றிவிட்டது; உடல் ஊனம்; பலஹீனம்; மனத் தளர்ச்சி; காம்பீர்யம் போய் மரணப் படுக்கையில் இருந்தாலும் மதம்பிடித்த யானையின் மீது பாய்ந்து அதை உண்ணவே எண்ணும். அப்பேற்பட்டவர்களே மஹத்தான சாதனையாளர். சிங்கம் என்றாவது புல்லைத் தின்னுமா?
क्षुत्क्षामोஉपि जराकृशोஉपि शिथिलप्राणोஉपि कष्टां दशाम्
आपन्नोஉपि विपन्नदीधितिरिति प्राणेषु नश्यत्स्वपि ।
मत्तेभेन्द्रविभिन्नकुम्भपिशितग्रासैकबद्धस्पृहः
किं जीर्णं तृणम् अत्ति मानमहताम् अग्रेसरः केसरी ॥ 1.29 ॥
xxx
ஸ்வல்பஸ்னாயுவஸாவ சேஷமலினம் நிர்மாம்ஸமப்யஸ்திகோஹோ
ஸ்வா லப்த்வா பரிதோஷமேதி ந ச தத்தஸ்ய க்ஷுதாசாந்தயே
ஸிம்ஹோ ஜம்புகமங்கமாகதமபி த்யக்த்வா நிஹந்தி த்விபம்
ஸர்வஹ க்ருச்ரகதோபி வாஞ்சந்தி ஜனஹ ஸத்வானுரூபம் பலம் 1-26
சதைப்பற்று இல்லாத எலும்பைக் கண்டாலும் நாய் சந்தோஷப்படும்; ஆயினும் அது அதன் பசியைத் தீர்க்காது. சிங்கமோ தன் பிடியில் ஒரு முயலே சிக்கினாலும் அதை விட்டுவிட்டு பலம் பொருந்திய யானையயே கொல்ல விழையும். பெரியவர்கள் தங்கள் பெருமைக்கேற்ற செயலைச் செய்தே குறிக்கோளை அடைவர்.
கோப்பெருஞ்சோழன் செப்புவது
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்…………….
–புறம் 214, கோப்பெருஞ்சோழன்
யானை வேட்டைக்குப் போனவன் யானையை பெறலாம். ஆனால் குறும்பூழ் பறவையைப் பிடிக்கப் போனவன் வெறும் கையுடனும் வரக்கூடும்; ஆகையால் உயர்ந்த குறிக்கோளுடன் செல்க.
स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसम् अप्यस्थि गोः
श्वा लब्ध्वा परितोषम् एति न तु तत्तस्य क्षुधाशान्तये ।
सिंहो जम्बुकम् अङ्कम् आगतम् अपि त्यक्त्वा निहन्ति द्विपं
सर्वः कृच्छ्रगतोஉपि वाञ्छन्ति जनः सत्त्वानुरूपं फलम् ॥ ॥
xxxxx
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
லாங்கூலசாலநமதஸ்சரணாவபாதம்
பூமௌ நிபத்ய வதனோதரதர்சனம் ச
ஸ்வாபிண்டதஸ்ய குருதே கஜபுங்கவஸ்து
தீரம் விலோகயதி சாடுசதைஸ்ச புங்தே- 27
நாய் வாலை ஆட்டும்; எவன் ரொட்டித் துண்டுபோட்டாலும் அவன் காலடியில் விழும். அது கீழே புரண்டு வயிற்றையும் வாயையும் காட்டி மேலும் உணவு பெற முயலும். ஆனால் பெரிய பலம் மிக்க யானையோ இனிமையான வார்த்தைகள் சொல்லி அழைத்தாலும்கூட உணவைப் பற்றி கவலைப்படுவதுமில்லை; அதை ஏற்பதுமில்லை.
लाङ्गूलचालनम् अधश्चरणावपातं
भूमौ निपत्य वदनोदरदर्शनं च ।
श्वा पिण्डदस्य कुरुते गजपुङ्गवस्तु
धीरं विलोकयति चाटुशतैश्च भुङ्क्ते ॥ 27॥
வள்ளவனும் கண்ணனும் புகல்வது யாதெனின்
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள் 595
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596
உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)
ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.
xxxxx subham xxx