Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 8 November 2018
GMT Time uploaded in London –18-30
Post No. 5641
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
கீழேயுள்ள கட்டத்தில் குறைந்தது 22 தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. கண்டு மகிழ்க; தமிழ் வாழ்க
விடை கீழே உளது.
குறுக்கே
1.இது சரியாக இல்லாவிடில் வேலை கிடைக்காது
4.விலையுயர்ந்த பொருள்; பெண்களுகு உயிர்
7.தண்ணீர் இப்படி இருந்தால் தெளிய வேண்டும்
8.கட்டிடம் கட்டத் தேவை
10.கொடி பறக்கத் தேவை
11.சின்ன
- N0.9 ஒன்பதைப் பாருங்கள்
14.தவறு
15.சிவப்புக் குட்டி
16.பறவை
20.நுழை
21.நாயை விரட்ட உதவும்
22.வினவு
கீழே
2.சந்யாசிகள் வரவேற்பில் வழங்கப்படுவது
3.மீனாட்சியின் கண்
4.கால் காசுக்குப் பிரயோஜனம் இல்லை என்பர்
5.தோடி, பூபாளம், இந்தோளம்
6.கெடுதி
8.வெள்ளையுடன் பேசப்படுவது
9.பந்தைப்………… கட்டிப்…………………………….
10.தேங்காய் நாரின் மறு வடிவம்
13.இதற்கு மயங்காதோர் யார்?
16.கடலில் இருந்து வரும்; மழையைத் தரும்
17.காற்றினில் மிதந்து வரும் இனிமை
18.தாழ்ப்பாளின் நண்பன்
19.குடியைக் கெடுக்கும்
- கடவுள் கொடுத்த ஐந்து
21.தேள் கொடுக்கும்
விடை
1.தகுதி
2.கும்பம்
3.கயல்
4.தங்கம்
4.தம்பிடி
5.ராகம்
6.தீங்கு
7.கலங்கல்
8.கறுப்பு
8.கல்
9.பிடி
10.கயிறு
10.கம்பம்
11.குறு
12.பிடி
13.சங்கீதம்
15.செங்கன்று
14.பிழை
16.புள்
16.புயல்
17.கீதம்
18.கைப்பிடி
19.குடி
20.புலன்
20.புகு
21.கல்லடி
21.கடி
22.கேள்
TAGS–தங்கம், குறுக்கெழுத்துப் போட்டி
–subham–
R.Nanjappa (@Nanjundasarma)
/ November 10, 2018தங்கத்தின் விலை பற்றிய அட்டவணை சிந்திக்க வைக்கிறது!
Peter Vidal என்பவர் பழைய Sunday Standard பேப்பரில் ஜோசியப்பகுதி எழுதி வந்தார். 1978/79 வாக்கில் ஒரு இதழில் தங்கத்தின் விலையைப் பற்றி எழுதினார். சுமார் 200-300 வருட காலத்தில், நிலவிய தங்கத்தின் விலையை ஒரு கிராஃப் படத்தில் போட்டால் அடுத்த 25 ஆண்டுகளில் நிலவப்போகும் விலையை அதே படத்தில் காட்டமுடியாது , அது படத்தை விட்டே எகிறிவிடும் – It will jump off the graph என்று எழுதினார்.
அவர் சொன்னது 2000 வருஷ வாக்கில் நிறைவேறியது. ஆனால் அடுத்த பதினான்கு ஆண்டுகளில் அதைப்போல ஆறு மடங்கு விலையேறி விட்டது! இது எங்கு போய் நிற்கும் எனச் சொல்ல முடியாது.
இது உலகில் நிலவி வரும் பண நிர்வாகத்தின் மீது Money and Currency system மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. இன்று எந்த நாட்டிலும் புழங்கும் பணத்திற்கு ஈடாக எத்தகைய பாதுகாப்பும் இல்லை. The currencies are not backed by adequate gold or silver or other tangible assets. They are all fiat money- அரசினரின் செல்வாக்கினால்தான் புழங்குகின்றன. வெற்றுக் காகிதம் தான். நாம் பணத்தைச் சேமித்து வைக்கும் வங்கிகளும் தடுமாறுகின்றன- Financial system faces repeated frauds , crises and constant threat of more such events. இவற்றைத் தடுக்கும் சக்தி எந்த நாட்டிலும் எந்த அரசுக்கும் இல்லை. ஒரு வங்கி தடுமாறுகிறது என்றால், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டுதான் அதை நிமிர்த்தப் பார்க்கிறார்கள். அப்படியும் இந்திய அரசினர் வங்கிகள் தடுமாறிக்கொண்டே இருக்கின்றன!
இன்று உலக அளவில் சீனாவும் அமெரிக்காவும் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றன. இது உலக மார்க்கெட்டில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்ல முடியாது. இப்பொழுது ஒரு பீட்டர் விடால் இருந்தால் தேவலை எனத் தோன்றுகிறது!