பால் பிரண்டனின் மகன் காஞ்சி பரமாசார்யரைத் தரிசித்த அனுபவம்! (Post No. 5664)

Written by S Nagarajan

Date: 15 November 2018

GMT Time uploaded in London –10-37 am
Post No. 5664

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

A SEARCH IN SECRET INDIA

பால் பிரண்டனின் மகன் காஞ்சி பரமாசார்யரைத் தரிசித்த அனுபவம்! (Post No. 5664)

.நாகராஜன்     

பால் பிரண்டன் (Paul Brunton ) பிரிட்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர். அவரது இயற்பெயர்  ராபேல் ஹர்ஸ்ட்  (Raphael Hurst ; பிறப்பு 21-10-1898  மறைவு 27-7-1981)

1898இல் லண்டனில் பிறந்த இவர் 1930ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார். காஞ்சி பரமாசார்யரை தரிசித்த இவருக்கு அதிசய அனுபவம் ஏற்பட்டது. அவரது வழிகாட்டுதலின் பேரில் 1931ஆம் ஆண்டில் ரமண மஹரிஷியைச் சந்தித்தார். மஹரிஷியின் முன்னர் அமர்ந்திருந்த போது பெரும் ஒளி வெள்ளத்தைக் கண்டு ஆனந்தமுற்றார்.

ஆனால் ரமணாசிரமத்தில் அவரால் நெடுங்காலம் தங்க முடியவில்லை. ஆசிரமத்தின் நடைமுறை க் கட்டுப்பாடுகளை மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரரான ஸ்வாமி நிரஞ்சனானந்தா நிர்வகித்து வந்தார்.

ரமணாசிரம நிர்வாகத்திற்கு பிரண்டனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் அங்கிருந்து சென்றார். ஆனால் இறுதி வரை ரமண மஹரிஷியை அவர் மறக்கவில்லை.

அவரது பிரசித்தி பெற்ற புத்தகமான A Search In Secret India என்ற

பால் பிரண்டன் (Paul Brunton ) பிரிட்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர். அவரது இயற்பெயர்  ராபேல் ஹர்ஸ்ட்  (Raphael Hurst ; பிறப்பு 21-10-1898  மறைவு 27-7-1981)

1898 இல் லண்டனில் பிறந்த இவர் 1930ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார். காஞ்சி பரமாசார்யரை தரிசித்த இவருக்கு அதிசய அனுபவம் ஏற்பட்டது. அவரது வழிகாட்டுதலின் பேரில் 1931ஆம் ஆண்டில் ரமண மஹரிஷியைச் சந்தித்தார். மஹரிஷியின் முன்னர் அமர்ந்திருந்த போது பெரும் ஒளி வெள்ளத்தைக் கண்டு ஆனந்தமுற்றார்.

ஆனால் ரமணாசிரமத்தில் அவரால் நெடுங்காலம் தங்க முடியவில்லை. ஆசிரமத்தின் நடைமுறை க் கட்டுப்பாடுகளை மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரரான ஸ்வாமி நிரஞ்சனானந்தா நிர்வகித்து வந்தார்.

ரமணாசிரம நிர்வாகத்திற்கு பிரண்டனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் அங்கிருந்து சென்றார். ஆனால் இறுதி வரை ரமண மஹரிஷியை அவர் மறக்கவில்லை.

அவரது பிரசித்தி

1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இன்று வரை சுமார் இரண்டரை லட்சம் பிரதிகள் இந்தப் புத்தகம் விற்பனை ஆகியுள்ளது.

இந்தப் புத்தகம் மேலை உலகினருக்கு ரமண மஹரிஷியின் அவதார மஹிமையை விளக்கியது.

ரமணாசிரமத்திலிருந்து சென்ற பால் பிரண்டன் மைசூர் மஹாராஜா நான்காம் கிருஷ்ண ராஜா உடையார் அவர்களின் அழைப்பின் பேரில் மைசூர் சென்று சில காலம் வசித்தார். மஹராஜா தேர்ந்த அறிவாளி. பல நூல் கற்ற வித்தகர். ஆன்ம ஞானம் கொண்டவர். கலா ரஸிகர். அவரும் ரமண மஹரிஷியை திருவண்ணாமலை வந்து தரிசனம் செய்து ஆனந்தித்தவர்.

 

மைசூர் ராஜாவின் ராஜ குருவான சுப்ரமண்ய ஐயருடன் பால் பிரண்டன் நெருங்கிய தொடர்பு கொண்டு ஆன்மீக விஷயங்களைப் பற்றி விவாதித்து வந்தார்.

தன் வாழ்நாளில் பல புத்தகங்களை பிரண்டன் வெளியிட்டார். தனக்குத் தோன்றிய ஆன்மீகக் குறிப்புகளை உடனடியாக கையில் கிடைக்கும் பேப்பரில் எழுதி வைக்கும் பழக்கம் பிரண்டனுக்கு இருந்தது. இந்தக் குறிப்புகளை பொருள்வாரியாகப் பின்னர் கட்டுரைகளாகப் படைப்பது அவர் வழக்கம்.

தனது 83 வருட வாழ்க்கையில் அவர் சுமார் இருபதினாயிரம் பக்கங்களை எழுதியுள்ளார் எனில் அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும், எவ்வளவு சிந்தித்திருக்க வேண்டும் என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.

அவர் தனது சிந்தனைப் போக்குக்குத் தக தனியாக ஒரு cult ஆரம்பிக்க விரும்பவில்லை; ஆரம்பிக்கவும் இல்லை.

இன்று நம்மிடையே அவரது 13 புத்தகங்கள் உள்ளன.

பல ஆன்மீக மகான்களைத் தரிசித்து பின்னர் அவர் இங்கிலாந்து திரும்பினார். மூன்றாவது உலக மகாயுத்தம் ஒன்று வரப் போகிறது என்று அவர் நம்பினார். தன் வசிப்பிடத்தை ஸ்விட்ஸர்லாந்தாக மாற்றிக் கொண்டார். இருபது ஆண்டுக் காலம் அங்கு வசித்து வந்த அவர் அங்குள்ள வெவே என்னுமிடத்தில் மறைந்தார்.

பால் பிரண்டனின் மகனான கென்னத் தர்ஸ்டன் ஹர்ஸ்ட் தனது தந்தையின் வழியில் புத்தகம் பிரசுரமான ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 1984இல் இந்தியா வந்தார். முதலில் ரமணாசிரமம் சென்ற அவர் அங்கு  தனது தந்தை தங்கியிருந்த சிறு பங்களாவைப் பார்த்தார். ரமணாசிரமத்தைப் பார்த்து ஆனந்தித்த பின்னர் காஞ்சி பரமாசார்யரை தரிசிக்க ஆவல் கொண்டார். அப்போது ஆசார்யருக்கு வயது 91.

நேராக அவர் அப்போது தங்கியிருந்த ஊருக்குச் சென்றார். அங்கு தரிசிக்க முடியுமோ முடியாதோ என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அவரிடம் ஒரு பக்தர் அவரது கார்டை ஆசார்யரிடம் சமர்ப்பிக்குமாறு கூறினார். அதன் படியே செய்த அவருக்கு வியப்பு காத்திருந்தது.

ஆசார்யர் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவிலின் பின்புறத்திற்கு வருமாறு அருளினார்.

தான் பால் பிரண்டனின் மகன் என்று அவர் ஆசார்யரிடம் தெரிவித்த போது, அது அவருக்குத் தெரியும். உங்களைப் பார்க்கத் தான் காத்துக் கொண்டிருக்கிறார் என்று மொழிபெயர்ப்பாளரிடமிருந்து பதில் வந்தது. அவருக்கு எப்படித் தனது வருகை தெரியும் என்பதை எண்ணி ஆச்சரியமுற்றார் கென்னத். ஆசாரியர் 38 வயதாக இருந்த போது எடுத்த போட்டோவைப் பிரசுரித்திருந்த புத்தகத்தை கென்னத் அவரிடம் காட்டிய போது, எனக்குத் தெரியும் என்ற பதில் வந்தது.

உலகின் இன்றைய நிலை பற்றிப் பல்வேறு கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்த கென்னத் உள்ளம் நெகிழ்ந்தார். அவருக்கு ஒன்றுமே கேட்கத் தோன்றவில்லை. சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்கரித்தார்.

ஆசார்யர் அவருக்கு ஆசி கூறி சந்தனத்தால் ஆன ஒரு ருத்ராட்ச மாலையையும் அவரது கழுத்தில் அணிவித்தார். அதை வாழ்நாள் முழுவதும் போட்டு வர ஆரம்பித்தார் பால் பிரண்டனின் மகனான கென்னத்.

அவர் பால் பிரண்டனைப் பற்றி எழுதிய குறிப்பையும் ஆசார்யருடனான சந்திப்பையும் பற்றி அவரே எழுதிய ஆங்கில மூலக் கட்டுரைகளைக் கீழே படிக்கலாம்.

 

A PERSONAL NOTE

Dr. Paul Brunton died July 27, 1981, in Vevey, Switzerland. Born in London in 1898, he authored thirteen books from “A Search in Secret India” published in 1934 to “The Spiritual Crisis of Man” in 1952. Dr. Brunton is generally recognized as having introduced yoga and meditation to the West, and for presenting their philosophical background in non-technical language.

His mode of writing was to jot down paragraphs as inspira- tion occurred. Often these were penned on the backs of envelopes or along margins of newspapers as he strolled amid the flower gardens bordering Lac Leman. They later were typed and classified by subject. He then would edit and meld these paragraphs into a coherent narrative.

Paul Brunton had lived in Switzerland for twenty years. He liked the mild climate and majestic mountain scenery. Visitors and correspondence came from all over the world. He played an important role in the lives of many.

“P.B.”, as he is known to his followers, was a gentle man. An aura of kindliness emanated from him. His scholarly learning was forged in the crucible of life. His spirituality shone forth like a beacon. But he discouraged attempts to form a cult around him: “You must find your own P.B. within yourselves,” he used to say.

KTH

FOREWORD TO THE REVISED EDITION                            A Search in Secret India was an instant success when published in 1934.It continues to be popular after many reprintings, and has been translated into several languages. Written at  the age of thirty-five, it was my father’s first book. To mark   the occasion, he adopted the pen name of Paul Brunton.

This is the story of his personal odyssey, his search for holy men to guide him on his quest. To this task he brought all his professional journalistic skills coupled with an extensive background in spiritual research.

 

My father was a pathfinder. In this book he introduced the terms yoga and meditation to the Western world. He travelled the length and breadth of the sub-continent interviewing yogis, fakirs, and mystics, exploring a side of India previously unknown to foreigners. His story became a tale of high spiritual adventure.

Fifty years later I retraced my father’s steps and journeyed around India giving “in memoriam” lectures in his honor. I learned that his name is still held in highest esteem. Many Indians told me they discovered their country’s spiritual dimension from this very book. I made a pilgrimage to the same ashram he discovered and offered my obeisance in the meditation hall where Ramana Maharshi had lived. I saw the small bungalow my father had inhabited, and I gazed up at towering Arunachala.

The highlight of my trip was my encounter with His Holiness Shri Shankara Acharya, the Spiritual Head of South India, whom my father describes in Chapter VIII. I had no prior intention of meeting him, but upon leaving the Ramanashram, decided to seek him out. After driving along country roads for three hours and locating the village where he was staying, history seemed to repeat itself as I was told there was no chance of my being granted an audience with him. However, a friendly disciple agreed to submit my card and returned with the news that His Holiness would received me at the rear of the temple, to avoid the crowds milling in front. His slight figure, clad in a saffron robe, reflected his ninety-one years. I told him I was the son of Paul Brunton. He replied briefly. The interpreter informed me, “He knows!” His Holiness spoke again. “He has been waiting for you! He has been expecting you,” said the interpreter. But how did he even know of me? How did he know I was in India, I wondered to myself? I held out a copy of this book and showed him his photograph, taken when he was thirty-eight. “I know!” was his comment.

At this point I had hoped to elicit his views on the world situation as had my father previously. But suddenly all questions melted, as I felt an onrush of peace and love. All I could do was prostrate myself in the time-honored tradition at the feet of His Holiness as he gave me his blessing. He then put around my neck a sacred mala, a garland fashioned from fragrant sandalwood. I wear it daily.

Thus the wheel came full circle half a century later.

Kenneth Thurston Hurst August, 1985

Leave a comment

4 Comments

 1. பால் பிரன்டனின் புத்தகம் A Search In Secret India தான் வெளிநாட்டினருக்கும், நம் நாட்டிலேயே ஆங்கிலம் தெரிந்த பலருக்கும் பகவான் ரமணரை அறிமுகம் செய்து வைத்தது.
  அவர் பகவானது பேச்சுக்களைக் குறிப்பெடுத்துக் கொள்வார்- பின்னர் அவற்றை வைத்து எழுதி ஆசிரமத்திற்குக் காட்டாமல் வெளியிடுவார். இது ஆசிரம சர்வாதிகாரியான நிரஞ்சனானந்தருக்குப் பிடிக்கவில்லை.அதனால் அவர் பிரன்டன் குறிப்புகள் எடுப்பதைத் தடுத்தார். [இது சர்வாதிகாரியின் பொதுக்கொள்கை. ஸ்ரீமதி சூரி நாகம்மாவின் கடிதங்களையும் அவரிடமிருந்து ‘பிடுங்கி’ தன்வசம் வைத்துக்கொண்டார். Talks , Day By Day With Bhagavan எழுதிய முனகால வெங்கட்ராமையாவும், தேவராஜ முதலியாரும். சர்வாதிகாரியின் அனுமதி பெற்றே எழுதத் தொடங்கினர். இவற்றை ஆசிரமமே வெளியிட்டது. பகவானைப் பற்றி வரும் பிரசுரங்கள் ஆசிரமத்தின் அனுமதிபெற்றே எழுதப்படவேண்டும் என்பது அவர் கருத்து.[ ஸ்ரீ முருகனார் எழுதிய “ரமண சந்நிதி முறை” யின் முதல் பதிப்பும் (1933) குருவாசகக்கோவையின் முதல்பதிப்பும் [1939] ஆசிரமத்தின் வெளியீடாக வரவில்லை. இவற்றை ரமண பாதானந்தர் என்ற ஒரு முருகனாரின் பக்தர் வெளியிட்டார்.] ஒரு விதத்தில் இது சரியான அணுகுமுறைதான். ஏனெனில், கருத்துக்கள் சரியானவையா என்பதை யாராவது விஷயம் தெரிந்தவர்கள் பார்வையிட வேண்டும் கத்தோலிக்க மதத்தில் இப்படி அவர்கள் மத சம்பந்தமான புத்தகங்களை ஒருவர் பார்வையிட்டு “Imprimatur” என்ற முத்திரையுடன் தான் அவை வெளிவரும். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் வெளி நாட்டினருக்கு எழுத வசதி செய்து கொடுத்தும் அவர் அவதூறாகவே எழுதினார். ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திலும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.]

  பிரன்டனின் செய்கையை- பகவானின் கருத்துக்களக் குறித்துக்கொள்வது, பிறகு அவற்றை வைத்து எழுதி தன் பெயரில் வெளியிடுவது- ஒரு விதத்தில் Plagiarism எனக்கருதலாம்.. இறுதிவரை ஆசிரமத்திலேயே இருந்த மேஜர் சாட்விக் ( சாது அருணாசலா) இப்படித்தான் தன் நினைவுக்குறிப்பில் எழுதியிருக்கிறார்.[ “Plagiarist of the first waters”]

  நான் அனேகமாக பிரன்டனின் எல்லா நூல்களையும் படித்திருக்கிறேன். A Search In Secret India is an outstanding book. பிற எந்தப் புத்தகமும் அந்த நிலைக்கு உயரவில்லை A Hermit In The Himalayas, A Message From Arunachala ஓரளவுக்கு ரமணரின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும். The Secret Path சில வழிகளில் வேறுபடுகிறது. அதற்குப்பிறகு வந்த புத்தகங்கள் அனைத்தும் பகவானின் வழியிலிருந்து முற்றும் மாறுபட்டவை. இவர் காவ்யகண்ட கணபதி முனிவர் வழி போலும்! பகவானின் வழி தெரிந்திருந்தாலும், அவர்மீது மதிப்பு இருந்தாலும், அதை முற்றும் ஏற்கவில்லை!
  1970 களில் மீண்டும் ஆசிரமத்துடனர் தொடர்பு ஏற்பட்டதுபோல் இருக்கிறது.

  அவர் மகன் கென்னத் ஹர்ஸ்ட் இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்தார். தன் தந்தை இந்தியாவுடன், மஹரிஷியுடன் கொண்ட தொடர்பால் பல ஆன்மீக நன்மைகள் அடைந்தார் என்று நம்பினார். அதனால் இந்தியாவுக்கு பிரதி உபகாரம் செய்ய விழைந்தார். இவர் அமெரிக்காவின் Prentice Hall புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் உயர் நிலையில் இருந்தபோது அவர்களின் வெளியீடுகளை இந்திய மாணவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் வெளியிட முடிவுசெய்தார். Prentice Hall India [PHI] என்ற பெயரில் அவை இன்னமும் வெளிவருகின்றன!

 2. Muralidaran Sethu

   /  November 18, 2018

  நமஸ்காரம். A Search in Secret India புத்தகம் எங்கே கிடைக்கும்.இதன்
  தமிழாக்கம் உள்ளதா தயவுசெய்து தெரிவிக்கவும்.நன்றி.முரளிதரன்.

 3. MuralidaranSethu. This book was published by Rider, London in their “MInd and Matter’ series in the 50s. In the 60s and 70s this book and others of Paul Brunton were published by BI Publications in India. Currently, only the edition published by Random House [RHUK] is available from Amazon. I am mentioning the other editions so that you might try the used book market on line. But mind the price- the current price on Amazon is Rs.487, original marked price being Rs.599. I do not know about Tamil translation. But it is better to read the original English version.. That language is inspired, especially the last portion beginning “Man is grandly related and a greater being suckled him than his mother… and so on.
  On Flipkart, the price is Rs.467 + 52 delivery.

 4. Santhanam Nagarajan

   /  November 19, 2018

  dear Muralidharn sethu

  you can download the book (free) from this site
  https://www.theosophy.world/resource/ebooks/search-secret-india-paul-brunton
  thanks
  nagarajan

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: