கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்! (Post No.5723)
Written by S Nagarajan

Date: 2 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 10 am


Post No. 5723

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஆங்கில இலக்கியம்


கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்!


ச.நாகராஜன்
கடற்கரைக்கு ஒரு நாள் சென்றிருந்தேன். கடற்கரை மணல் பரப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
அதில் என் பெயரையும் தேதியையும் எழுதினேன். மகிழ்ச்சியுடன் நடந்தேன்.
சற்று தூரம் நடந்த பின்னர் திரும்பிப் பார்த்தேன். அடடா! பெரிய அலை ஒன்று வந்தது.
நான் எழுதிய அனைத்தையும் அடித்துக் கொண்டு போனது!
சரி, போனது போகட்டும், அது இப்படி எனது ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்க முடியாதல்லவா?
நிலை நின்று இருக்கப் போகும் அடையாளக் குறிகளை நான் விட்டுச் செல்ல மாட்டேனா, என்ன?


அற்புதமான கருத்தை, மனதைத் தொடும் சொற்களால் சொல்கிறார் பெண் கவிஞர்  
ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட்.
ஒரு பெண்ணின் மனதும்  
இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது.
அவர் எழுதியதை – ஆற்றிய செயல்களை – வெளி உலகம் அழிக்க முயல்கிறது.
பெண் தொடர்கிறார், செயலாற்றுகிறார், நிறைய அடையாளங்களை உலகில் நிரப்புகிறார். Every Mark-ஐயும்
அது அழித்துக் கொண்டே இருக்க முடியாதல்லவா! Lasting Record Stands!
கவிதையைப் பார்ப்போம் வாருங்கள்!A Name in the Sand
By Hannah Flaff Gould (1789-1865)


[Born in Lancaster, Mass., 1789. Died at Newburyport, Mass., 1865.]
ALONE I walked the ocean strand;    

                                                              
A pearly shell was in my hand:

                                                              
I stooped and wrote upon the sand    

                      
                                        
My name—the year—the day.

                                                              
As onward from the spot I passed,  
5
                                                              
One lingering look behind I cast;    

                                                              
A wave came rolling high and fast,    

                                                             
 
And washed my lines away. 

    

                                                              
And so, me thought,’twill shortly be   

                                                              
With every mark on earth from me:  
10
                           
                                   
A wave of dark oblivion’s sea

                                                              
Will sweep across the place   

                                                              
Where I have trod the sandy shore  

  
                                                            
Of time, and been, to be no more,   

                                                              
Of me—my day—the name I bore, 
15
                                                              
To leave nor track nor trace.  

    

                                                              
And yet, with Him who counts the sands   

                                                              
And holds the waters in his hands,

                           
                                   
I know a lasting record stands

                                                              
Inscribed against my name,   
20
                                                              
Of all this mortal part has wrought, 

                                                              
Of all this thinking soul has thought,  

                                                              
And from these fleeting moments caught  

                                                 
             
For glory or for shame.

ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட் (பிறப்பு 3-7-1789 மறைவு 5-9-1865) அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் லங்காஸ்டரில் பிறந்தவர்.
அவரது தந்தை அமெரிக்க புரட்சிப் போரில் போர்வீரராக இருந்தார். சிறு சிறு கவிதைகளை அவர் எழுத ஆரம்பித்தார். பல பத்திரிகைகள் அவரது கவிதைகளை பிரசுரித்தன.


எப்போதும் சிறிய விஷயமாக ஆரம்பிப்பார். அது பின்னால் பிரம்மாண்டமாகி ஒரு பெரிய கருத்தை வலியுறுத்தும். கடற்கரை மணலில் அவர் எழுதியது ஒரு அலையால் அழிந்து போனது. அவ்வளவு தான், ஒரு சின்ன விஷயம்! ஆனால் அதையே உலகியல் அரங்கிற்கு அவர் பின்னால் கொண்டு வருகிறார்.
என்ன அநியாயம், செய்யும் ஒவ்வொரு செயலையும் – ஒரு பெண்ணின் மனம் நோக, உலகம் அழிக்கிறது.
கடற்கரை மணலில் மேலாக எழுதப்பட்ட பெயரை அலை அடித்துக் கொண்டு போனாலும் கீழே இருக்கும் கிளிஞ்சல் உள்ளிட்டவை இருக்கிறது.
வெளி உலகில் அவர் செய்தவற்றை அழிக்க முயன்றாலும் அத்துடன் அழியாத பல குறியீடுகள் நிலையாக இருக்கும்.
இதற்கெல்லாம் கவலைப்படலாமா, என்ன? செய்கின்ற நல்ல காரியங்களை ஆற்றிக் கொண்டே இருப்போம்!


ஹன்னா தனது கவிதைகளை மூன்று தொகுதிகளாக ‘Poems’ என்ற எளிய தலைப்பில் வெளியிட்டார். பின்னால் தனது எழுத்துப் படைப்புகளையும் Gathered Leaves என்ற தலைப்பில் வெளியிட்டார்.
பள்ளி செல்லும் மாணவ, மாணவியரை இவரது படைப்புகள் பெரிதும் கவர்ந்தன. ‘எ நேம் இன் தி சேண்ட்’ என்ற இந்தக் கவிதை அவரது படைப்புகளில் சிறந்த ஒன்று.
நம்மை பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்ள விடாமல் கால வெள்ளத்தில் அனைத்தும் அடிபட்டுப் போகும் என்பதைச் சொன்னாலும் சரி, அல்லது அந்தக் கால வெள்ளத்தில் நிலை நிறுத்தும் செயல்களைச் செய் என உத்வேகம் மூட்டினாலும் சரி, நமது Lasting Record Stands!


 TAGS- ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட்., கடற்கரை மணல்


****
Leave a comment

2 Comments

 1. Writing upon the sand – this reminds of the following famous lines of Longfellow:

  Lives of great men all remind us
  We can make our lives sublime,
  And, departing, leave behind us
  Footprints on the sands of time ;

  Footprints, that perhaps another,
  Sailing o’er life’s solemn main,
  A forlorn and shipwrecked brother,
  Seeing, shall take heart again.

  This matter of writing leads to some random thoughts.

  The waves may wash away what we write- but how we lead our life is also a statement, though not in letters. This is permanent, nothing erases it! Mystics call it the “Akashic records”, something like what Hindus say Chitragupta keeping account of our deeds.

  Omar Khayyam wrote:

  “The Moving- Finger writes and having- writ,
  Moves on; nor all your piety nor wit
  Shall lure it back to cancel half a line,
  Nor all your tears blot out a word of it.”

  Here, he is referring to the writing of the hands of Fate. But he is wrong about not a word of it being erasable. It is the belief of devotees that divine grace cancels the dictates of fate. As Arunagirinatha says:

  வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
  கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

 2. Santhanam Nagarajan

   /  December 2, 2018

  அடுத்து நான் எழுத நினைத்த கவிதைகளையும் கட்டுரைக்கான பொருளையும் சுட்டிக் காட்டி விட்டீர்கள். நன்றி! எட்கர் கேஸின் ஆகாஷிக் ரிகார்ட் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன் – நிறைய! ஆனால் அவர் பற்றி இன்னும் எழுத வேண்டியிருக்கிறது.நாள் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடுங்கூற்று என் செயும்? குமரேசன் இரு தாள் இருக்கையில்!
  நாகராஜன் (முகாம் : சான்பிரான்ஸிஸ்கோ)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: