யுரேனிய அதிசயம்- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை (Post No.5728)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 3 December 2018


GMT Time uploaded in London – 11-38 AM

Post No. 5728


Pictures shown here are taken from various sources including google, Wikipedia,Facebook friends and newspapers. This is a non- commercial blog.

உலகை, ஏன் பிரபஞ்சத்தையே உருவாக்கிய மூலகங்கள் 118. அவைகளில் மூன்று தனிச் சிறப்புமிக்கவை. எளிதில் பிளவு பட்டு(fissile)  பிரம்மாண்டமனான சக்தியை வெளியிடும். மின் சக்தியையும் உண்டாக்கல்லாம். அணு குண்டு போட்டு உலகையும் அழிக்கலாம்.அந்த மூன்று

1.தோரியம்- இந்தியாவில் அதிகம் கிடைக்கிறது

2.ப்ளூடோனிஉயம்

3.யுரேனியம்.

இந்த மூன்றில்  ‘கில்லாடி’  யுரேனியம்தான். அதிகம் கிடைப்பது- அமெரிக்கா, ஆஸ்திரேலியா,கனடா.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது- என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.யுரேனியம் தேய்ந்து ஈயம் ஆகி விடும் ஆனால் இது இயற்காஇயில் நடக்க ’‘நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டகாலலலலம்ம்ம்ம்ம்ம்’’ ஆகும்.

தானாக அணுசக்தியை வெளியிட்டு பிரியவல்ல, மூன்று கதிரியக்க மூலகங்களில் மிகவும் அபகீர்த்தி வாய்ந்தது யுரேனியம்தான். இதைக் கொண்டு உருவாக்கிய இரண்டு அணுகுண்டுகள்தான் உலக வரலாற்றை மாற்றின. அதாவது இரண்டாவது உலக மஹா யுத்தத்தை முடிக்க ஜப்பானின் தலையில்  அமெரிக்கா போட்ட யுரேனியம் அணுகுண்டுகள்.

இதில் முதல் குண்டுக்கு வைத்த பெயர் சி’ன்னப் பையன்’ (little boy) .அதை 1945-ம் ஆண்டில் ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசியது. ‘சின்னப்பையன்’ அடுத்த நொடியில் 50,000 கட்டிடங்களை தரை மட்டம் ஆக்கினான். 75,000 பேரைக் கொன்றான். இது நடந்தது ஆகஸ்ட் 6. அதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் நாகசாகி நகர் மீது மற்றொரு குண்டு போட்டு அதை நாஸசாஹியாக மாற்றியது அமெரிக்கா. அதன் பிறகு ஜப்பான் சரண் அடைந்தது. உலகின் கதையும் மாறியது.

வரலாற்றை நிறுத்திவிட்டு விஞ்ஞானத்துக்கு வருகிறேன். இந்த யுரேனியத்தில் இருந்து கதிரியக்கம் (radiation) வரும். அது புற்று நோயை(cancer)  உண்டாக்கும். மனிதனின் மரபணுக்களைச் சிதைத்து ஊனமுள்ள குழந்தைகளை உருவாக்கும்.

கிரேக்க புராணத்தில் வானத்தின் தேவதை யுரேனஸ் (Uranus). ஒளிவீசும்இந்த உலோகத்துக்கு, இதைக் கண்டுபிடித்தவர், இதற்கும் அந்த தேவதையின் பெயரைச் சூட்டிநாமகரணம் செய்தார்.

யுரேனியத்துக்கு எவ்வளவு கெட்ட பெயர் உண்டோ அவ்வளவு நல்ல பெயரும் உண்டு. இது  பிரியும்போது ஏற்படும் வெப்ப சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கலாம். இந்தியா உள்பட உலகம் முழுதும் அணு சக்தி மின்சக்தி நிலையங்கள் இருக்கின்றன. இதனால் நிலக்கரி சுரங்கங்கள் செயலிழந்து போயின. ஒரு கிலோ யுரேனியம் உலோகம், 1500 டன் நிலக்கரி எரிக்கும் சக்தியை உருவாக்கும்.

ஆனால் இதிலும் பிரச்சனைகள் உண்டு. நிலக்கரி எரிவதை நிறுத்தினால் புறச்சூழல் மாசு குறையும் என்று சந்தோஷப்பட்டோம். யுரேனிய எரிப்பினால் வரும் கழிவுப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. ஒன்று கதிரியக்கம் பல்லாயிரம் ஆண்டுகள் நீடிக்கும் ஆகவே அதைப் பெட்டிப்பாம்பாகக் கட்டிப்போட வேண்டும். அதாவது கதிரியக்கம் வெளியே வராதபடி  கடலுக்கு அடியில்  ஈயப் பெட்டிக்குள் புதைக்க வேண்டும். இரண்டாவது பிரச்சனை இந்த அணு மின்சக்தி ஆலைகளில் பயன்படுதப்பட்ட யுரேனியக் கழிவைக் கொண்டு அணுகுண்டு செய்யலாம். இந்தியா வெடித்த அணுகுண்டுகளும் இப்படி செய்யப்பட்டவைதான். பல நாடுகள் யுரேனியத்தைக் கடத்தி அணுகுண்டுகளைச் செய்கின்றன. என்ன செய்வது?

கத்தியைக் கண்டு பிடித்தோம். சமையல் அறையில் காய்கறி வெட்டவும்பயன்படுத்துகிறோம். எங்கள் லண்டனில் வாரத்துக்கு ஒருவர் வீதம் கத்திக் குத்தில் சாகவும்பயன்படுகிறது. எதுவானாலும் இறுதி முடிவு மனிதன் கையில்தான்.

யுரேனியத்தின் அணு எண் 92

கொதி நிலை 1132 DEGREE C

உருகு நிலை  3754 DEGREE C

அரக்கனாகவும் தேவனாகவும் செயல்படும் இந்த யுரேனியம் காட்சிக்கு இனியன். பார்த்தால் அப்பாவி! வெள்ளி நிற உலோகம், தங்கம் போல தட்டிக் கொட்டலாம்.

யுரேனியம் மூன்று வகையில் அவதாரம் எடுக்கும்; இதை வேதி இயல் விஞ்ஞானிகள் ஐஸ்டோப்புகள் (Isotopes) என்பர்;

யுரேனியம்- 234

யுரேனியம்- 235

யுரேனியம்- 238

யுரேனியம்- 235 இரண்டாகப் பிரியும் காலத்தில், ஏராளமான வகை மூலகங்களாக அது மாறிக்கொண்டே வந்து இறுதியில் ஈயமாக மாறி நின்று விடும். பிரியாடிக் டேபிள் (Periodic Table) எனப்படும் மூலக அட்டவணையில் கிரிப்டான் முதல் யூரோபியம் வரையுள்ள மூலகங்களாக வாய்ப்பு உண்டு.

அணு மின்சார நிலையங்களில் (Nuclear Reactors)  யுரேனியம்- 235 பயன்படுகிறது. இது வெளியிடும் மூலகஐஸ்டோப்புகளில், மிகவும் ஆபத்தானவை ஸ்ட் ரா ன்ஷியம்-90, அயோடின் -131 ஐஸ்டோப்புகள்ஆகும். ஏனெனில் மனித உடல் இவைகளை எளிதில் கிரஹிக்கும். அவற்றின் கதிரியக்கம் புற்றுநோய் முதலான நோய்களை உண்டாக்கும்.

பிரிட்டனில் செல்லாபீல்ட், ரஷ்யாவில் (உக்ரைன்) செர்னோபிள் ஆகிய இடங்களில் அணு உலை விபத்து நடந்தபோது பெரும் பிரச்சனை ஏற்பட்டது அயோடின்-131 ஐசடோப்பால்தான்.

யுரேனியத்தைக் கண்டுபிடித்தவர் பெர்லின் (ஜெர்மனி) நகரைச் சேர்ந்த கிளாப்ராத் என்பவர். 1789ம் ஆண்டில் இது நடந்தது. அவர்தான் ‘யுரான்’ என்று நாமகரணம் செய்தார். ஆனால் இதன் மஹிமை/தீமை தெரியாமல் இதை கண்ணாடிகளுக்கு கலர் ஊட்டப் பயன்படுத்தினர்.

1896ல் தான் இதன் கதிரியக்க குணம் கண்டுபிடிக்கப்பட்டது. பாரிஸ் நகரில் ஹென்றி பெக்கரல் என்பவர் டேபிள் டிராயரில் வைத்திருந்த போட்டோ பிலிமில் ஒளிக்கசிவு ஏற்பட்ட தடயம் கிடைத்தது. எப்படி இருட்டறையில் இது நடக்க முடியும் என்று  பெக்கரல் வியந்தார். பின்னர்தான் தெரிந்தது அதே இடத்தில் வைத்திருந்த யுரேனிய உப்புதான் இந்த விஷமத்தைச் செய்தது என்று. பின்னர் இதன் விஷமத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு செய்யும் புது வரலாறு உருவானது.

யுரேனியம் பற்றிய மேலும் சில சுவையான செய்திகள்

மனித உடலில் 0.1 மில்லிகிராம் யுரேனியம் உள்ளது

சில வகைத் தாவரங்கள் நிறைய அளவு யுரேனியத்தைச் சேகரித்து வைக்கின்றன.என்னகாரணம் என்று தெரியவில்லை. ஆனல் அதிசயத்திலும் அதிசயம் அவை அதனால் பாதிக்கப் படுவதில்லை.

பாசியைவிட சற்று உயர்ந்த நிலையில் வைக்கப்படும் லைகன்ஸ் இவ்வாறு சேகரித்து வைக்கின்றன. ட் ர பீலியா இன்வல்யூடா (trapelia involuta) என்ற லைகன்(lichens) இப்படிச் செய்கிறது.

சிட் ரோ பாக்டர் என்ற பக்டீரியாவும் இப்படிச் செய்கிறது.

ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழகத்தினர் 2000 ஆண்டுப் பழமையான  ரோமானிய கண்ணாடிகளை ஆராய்ந்ததில்  அவர்களும் அந்தக் காலத்தில் கண்ணாடிக்கு நிறம் ஏற்ற யுரேனியம் ஆக்ஸைடைப் பயன்படுத்தியது தெரிய வந்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் அது கலர் ஊட்டும் ஒரு உப்பு. யுரேனியம் என்று தெரியாது.

இப்படி பல சுவையான செய்தி உடைய யுரேனியத்தின் விலை மிகவும் அதிகம்.அணுகுண்டு செய்யலாமே!!!

Tags- 
யுரேனியம், கதிரியக்கம்,
அணுகுண்டு

–சுபம்–

Leave a comment

Leave a comment