
Written by S Nagarajan
Date: 11 DECEMBER 2018
GMT Time uploaded in London –4- 50 am
Post No. 5765
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாரதியும் வானசாத்திரமும்! – 1
ச.நாகராஜன்
பாரதியார் பிறந்த நாள். அவரை வணங்கிப் போற்றுவோம்.
புண்ணியன் பிறந்த நாள்
பூவுலகம் சிறந்த நாள்
எண்ணிநின் றேத்து வோம்
இனியநாடு போற்று வோம்
நன்னிதிப் பாடல் கள்
நவின்றநா வாணி நா
உன்னியவை ஏற்று வோம்
உயிர்கலந்து பாடு வோம்
ச.நாகராஜன்
***
பாரதியாரைப் பலவிதமாக ஆராய்ந்து பார்த்து உவகை அடையலாம்.
அவரை வானசாத்திரத்தின் மூலமாகப் பார்க்கும் பார்வையே இந்தக்
குறுந் தொடர்.
பாரதியார் வானக் காட்சிகளைக் கண்டு ரசித்து மயங்கி அவ்வண்ணங்களைக் கவிதைத் தேனெனப் பொழிந்திருக்கிறார். வசன நடையிலும் எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் பற்பல இடங்களிலிருந்து எடுத்துத் தொகுத்துப் பார்த்துள்ள ஒரு மாலையே இது.
*
பாரத தேசம் என்ற கவிதையில் ..

மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
விநாயகர் நான்மணி மாலை (விருத்தம்)
வையந்தனையும் வெளியினையும்
வானத்தையுமுன் படைத்தவனே
விநாயகர் நான்மணி மாலை (விருத்தம்)
படர்வான் வெளியிற் பலகோடி
கோடி கோடிப் பலகோடி
இடறா தோடும் அண்டங்கள்
இசைத்தாய் வாழி, இறையவனே!
இறைவா, இறைவா!
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள் இறைவா, இறைவா, இறைவா
சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வண்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்
மஹாசக்தி வெண்பா
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் – பண்ணியதோர்
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு
மஹாசக்தி
சந்திரனொளியில் அவளைக் கண்டேன்
சரண மென்று புகுந்து கொண்டேன்;
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசிநிற்கும் வளியைச் செய்தாள்
வான்கணுள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்
காளி ஸ்தோத்திரம்
வான கத்தி னொளியைக் – கண்டே – மனம கிழ்ச்சி பொங்கி
யானெ தற்கும் அஞ்சேன் – ஆகி – எந்த நாளும் வாழ்வேன்
ஞான மொத்த தம்மா – உவமை – நானு ரைக்கொ ணாதாம்!
வான கத்தி னொளியின் – அழகை – வாழ்த்து மாறி யாதோ?
ஞாயி றென்ற கோளம் – தருமோர் – நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை – எவரே – தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா! – அழகாம் – மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத் தால் – ஆங்கே – நெஞ்சி ளக்க மெய்தும்
மஹாசக்தி பஞ்சகம்

எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்,
யாவுமாம் நின்றனைப் போற்றி
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
மயங்கிலேன்
மஹாசக்தி வாழ்த்து
விண்டு ரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண் டலத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே!நினைக் காளியென் றேத்துவேன்.
கோடி யண்டம் இயக்கி யளிக்கும்நின்
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திரளெனச் செல்லுவை,
காலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை,
வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளியருள் செய்குவை
கோமதி மகிமை
நக்க பிரானருளால் — இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்;
தொக்கன அண்டங்கள் — வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவரறிவார்? புவி
எத்தனை யுளதென்ப தியார றிவார்?
நக்க பிரானறிவான்; — மற்று
நானறி யேன், பிற நர றியார்;
தொக்க பேரண்டங்கள் — கொண்ட
தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள்; — ஒளி
தருகின்ற வானமொர் கடல்போலாம்;
அக்கட லதனுக்கே — எங்கும்
அக்கரை இக்கரை யொன்றில்லையாம்
இக்கட லதனகத்தே — அங்கங்
கிடையிடை தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள்; — திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடும்;
மிக்கதொர் வியப்புடைத்தாம் — இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்;
மெய்க்கலை முனிவர்களே! — இதன்
மெய்ப்பொருள் பரசிவன் சக்தி, — கண்டீர்.
எல்லையுண்டோ இலையோ – இங்கு
யாவர் கண்டார்திசை வெளியினுக்கே?
சொல்லுமோர் வரம்பிட்டால் – அதை
………………….
(இது முற்றுப் பெறவில்லை)

அல்லா அல்லா
பல்லவி
அல்லா,அல்லா,அல்லா!
சரணங்கள்
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே!
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லா லும்மனத்தாலுந்தொடரொணாதபெருஞ் சோதி! (அல்லா அல்லா)
நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
புதிய ஆத்திசூடி
வானநூற் பயிற்சி கொள்
*** தொடரும்
tags– பாரதி, வானசாத்திரம்