வாழ்க்கையில் முன்னேற மநு தரும் 4 டிப்ஸ்! (Post No.5859)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 December 2018
GMT Time uploaded in London –18-37
Post No. 5859


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மநு நீதி நூல்- பகுதி 37

மனு தர்ம சாஸ்திரத்தின்  ஏழாவது அத்தியாயத்தில் 99 ஸ்லோகங்களைக் கண்டோம். இன்று 160 வரை காண்போம். முதலில் இணைப்பைப் படிப்பதற்கு முன்னால் சுவையான விஷயங்களை புல்லட் பாய்ண்டு bullet points களில் தந்து விடுகிறேன்.

மநுவை உலக மஹா ஜீனியஸ் genius என்று புகழ்வதற்குக் காரணம் அவர் இங்கே கூறும் நிர்வாக அமைப்பு, உளவாளி விஷயம், தூதர் விஷயம், அரசனின் அன்றாட ஆலோசனை, வரிவிதிப்பு விஷயம் ஆகியன ஆகும்.

மநுவின் மஹா மேதவித் தனத்துக்கு சர்டிபிகேட் கொடுப்பவர் தமிழ் வேத மஹா முனிவர் திருவள்ளுவ நாயனார் ஆவார். மநு சொல்லும் எல்லா விஷயங்களையும் அவர் அரசியலில் சொல்லி  விடுகிறார். சில மநு ஸ்லோகங்களை வள்ளுவர் அப்படியே தருகிறார்.இதை நானும் தனிக் கட்டுரைகளில் தந்துள்ளேன். அந்தக் காலத்தில் பேராசிரியர் V R . ராமச்சந்திர தீட்சிதர் முதல் தற்காலப்  பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி வரை அனைவரும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டனர்.

அழகான அட்வைஸ் Advice

ஸ்லோகம் 7-99 முதல் 7-102 வரை மன்னர்களுக்கு புத்திமதி சொல்கிறார். அந்த 4 புத்திமதிகளும் அரசியல், நிதித் துறையில் வெற்றி அடைய விரும்புவோருக்கும் பொருந்தும்.

ஸ்லோகம் 102, 105, 110 முதலியவற்றின் எதிரொலியைத் திருக்குறளிலும் காணலாம்.

ஆமையும் கொக்கும்

ஆமை போல அடக்கம்- இது பகவத் கீதை முதல் திருமூலர் வரை கையாளும் இந்து உவமை; கொக்கு போலக் காத்திரு என்பதும் பர்த்ருஹரி முதல் வள்ளுவன் வரை காணலாம்.இதற்கெல்லாம் ஆதி மூல காரணம் மநு ஐயாதான்.

மநுவைப் படிக்கும் ஆங்கிலேயர்கள், வெள்ளைத்தோல் அறிஞர்கள் , அனைவரும் ஒரு விஷயத்தை மனமுவந்து அளிகின்றனர். மநு சொல்லும் தெய்வங்களனைவரும் வேத காலக் கடவுளர்.ஆகையால் அவர் வேத காலத்தை ஒட்டியவர் என்று தெளிவு  பெற்றனர்.அண்மைக்கால ஸரஸ்வதி நதி ஆய்வும் மநுவை கி.மு 2000 க்கு முன்னர் தள்ளிவிட்டதை முன்னரே பார்த்தோம்.ஆயினும் ‘சூத்ராள்’ பற்றிப் பல விஷயங்களை சுங்க வம்ஸ மன்னர்கள் சேர்த்துள்ளனர் அல்லது அவர்கள் பிராஹ்மண அரசர்களென்பதால் எவரோ துணிச்சலாகக் ‘கை வைத்திருக்கலாம்’. அவர் சொல்லும் ஒட்டு மொத்த விஷயங்களையும்   பார்க்கையில் இவை பிற் சேர்க்கைஎன்பது வெள்ளிடைமலை என விளங்கும்.

அட்டை போல உறிஞ்சு, கன்று போல பால் குடி, தேனீ போல தேன் எடு (sloka 129)

இது அவர் வரிவிதிப்புக்குக் கொடுத்த அட்வைஸ். இதற்கு முன்னர் ஆமை, கொக்கு, ஓநாய்,சிங்கம் முதலிய உவமைகள் வருகின்றன.இந்த மூன்று பிராணிகள்  பற்றி   மநு சொன்னதை ஒன்பது உரைகாரர்களும் ‘சிக்’கெனப்பிடித்து அழகாக விளக்கினர்.

பணக்காரர்களாக இருந்தால் எங்கள் பிரிட்டனைப்போல 60% வரி; ட்டை போல உறிஞ்சு.இங்கு 60000 க்கு மேல் சம்பளம் இருந்தால் அட்டை (leech), இரத்தத்தை உறிஞ்சுவது போல உறிஞ்சிவிடுவர் (கடுமையான வரிவிதிப்பு).

என்னைப்போ ல ஏழைப் பங்காளர்-மிடில் கிளாஸ் middle class – என்றால் கன்று(calf)  போல வரி விதிப்பு! பாதி உனக்கு, பாதி எனக்கு.

மிக ஏழை என்றால் தேனீ (bee)  தேன் எடுப்பது போல வரிவிதிப்பு. அதாவது மலருக்கு ஒரு தீங்கும் இல்லை. மலருக்கு மகரந்தச் சேர்க்கை மூலம் பலன் வேறு! அதுவும் மலருக்குத் தேவை இல்லாத தேன். இப்படி அற்புதமான வரி விதிப்பு முறையை மநு கூறுகிறான்  ஸ்லோகம் 129

சங்க இலக்கியத்திலும் ஸம்ஸ்க்ருத இலக்கியம் நெடுகிலும், விளைச்சல்,உற்பத்திப் பொருட்களுக்கு  ஆறில் ஒரு பங்கு  வரி விதிப்பு பேசப்படுகிறது.இதற்கும் மூல புருஷன் ஐயா மநு தான்.

எங்கள் பிரிட்டனிலும் VAT 17.5 சதவிகிதம்தான்! ஆறிலொரு பங்குதான்! மநு சொன்னதை இன்றுவரை பிரிட்டன் பினபற்றுகிறது.

மநு சொன்ன விஷயங்களில் சூத்ராள் எதிர்ப்புப்  பிற்சேர்க்கை ஸ்லோகங்களைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டால் அதிசய விஷயங்களைக் காணலாம். ஆனால் அப்படி எறிந்தால், பாவம் மார்கஸீயங்களும் திராவிடங்களும் பேசுவதற்கு எதுவுமின்றித் தவியாய்த் தவிப்பார்கள்!!

ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்!!

ஸ்லோகம் 7-135 முதல்  வேத பண்டிதர்களுக்கு வரி போடாதே என்கிறார். வள்ளுவரும் பசுக்கள் பால் தராது, பிராஹ்மணர்கள் வேதத்தை மர்றந்து விடுவர்- அரசன் நேர்மையான ஆட்சி செய்யவிடில்  என்று கடும் எச்சரிக்கை விடுக்கிறான்.(காண்க ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் — குறள்

தஸ்யூ யார்?

ஸ்லோகம் 7-143ல் தஸ்யூ என்றால் திருடன் என்று சொல்கிறார். பத்தாவது அத்தியாயத்தில் மேலும் பிரஸ்தாபிக்கிறார். அதையும் பின்னர் காண்போம். உலகிலுள்ள எல்லா சமுதாயத்திலும் நல்லோரும் தீயோரும் உண்டு . நாடாள வந்த அயோக்கியர்களும், மதத்தைப் பரப்ப வந்த கிராதகர்களும் தஸ்யூ என்றால் திராவிடர்கள், பழங்குடி மக்கள் என்று பொய் மூட்டை கட்டி விட்டனர். தத்துப்பித்து திராவிடங்களுக்கும், மார்கஸீய விஷமங்களுக்கும் ‘கோதுமை அல்வா’ போட்டது போல ஆயிற்று. சாகுந்தலத்திலும் கூட தஸ்யூ என்றால்  கொள்ளைக்காரன் என்று காளி தாஸன் விளம்புவான். நம் நாட்டைக் கொள்ளையிட்ட பிரிட்டானியர்கள் நம்மைப் பொறுத்த ட்டில் தஸ்யூக்கள்!

பெண்கள் ஜாக்கிரதை

மன்னர்கள் ரஹஸிய ஆலோசனைக் கூட்டத்தில் பெண்கள், கிளிகள், மைனாக்கள் போன்றவை இருந்தால் ஆபத்து என்கிறான்– மநு ஸ்லோகம் 7-150

அண்மையில் பிரிட்டனில்கூட ஒரு கள்ளக் காதலி வருகையை மைனா சொல்லிக் கொடுத்து பத்திரிக்கைகளில் பெரிய செய்தி வெளியானது. பெண்கள் பற்றி மஹாபாரதம் முதல் கம்ப ராமாயணம் வரை இப்படி ஒரு ரஹஸியம் காக்க முடியாத செய்தி உளது

பெண்கள் வேலைசெய்வது பற்றியும் சொல்லுவதால், மநுவின் காலத்தில் பெண்கள் வேலை செய்தததும் தெரிகிறது –ஸ்லோகம் 125

சம்பள விகிதாசாரம் 126 முதல்

அம்சமான organization ஆர்கனைசேஷன்

மநு 7-110 முதல் 7-10 வரை நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதை அழகாகச் செப்புகிறான்

ஸ்லோகம் 7-153 முதல் தூதர்கள்,உளவாளிகளமைப்பு பற்றிப் பேசுகிறான். ராமாயண, மஹாபரதத்தில் தூதர், உளவாளிகள் பற்றிப் படிக்கிறோம். உலகில் நாகரீக முதிர்ச்சி அடைந்த நாடுகளில் மட்டுமே இது இருக்கும். எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க நாகரீகங்களில் இப்படி விரிவானதொரு நீதி நூல் இல்லாமையால் நாம்தான் உலகிற்குக் கொடிகள், சின்னங்கள், தூதர் முறை, உளவாளி அமைப்பு என்பதை எல்லாம் கற்றுத தந்தோம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி எனவிளங்கும்.

நான்  மேலே பிரஸ்தாபித்த பெரும்பாலான விஷயங்கள் ஒன்பது உரைகாரர்களின் வியாக்யானங்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக காமாந்தகியின் நீதி சாரம் என்னும் நூல் எடுத்தாளப்படுகிறது.

மரண தண்டனை ஜிந்தாபாத்

வள்ளுவன் மரணதண்டனை ஆதரவாளன். கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல்– என்ற குறளில் கொலைகாரர்களை களை எடுப்பது போலப் பிடுங்கி எறி என்பான் வள்ளுவந்0– இது மநு ஸ்லோகத்தின்  மொழி பெயர்ப்பு

கருமிகளைக் கண்டால் கையை முறுக்கி தாடையில் ஒரு குத்து விட்டுக் காசைப் பறி என்பான் வள்ளுவன் (காண்க- கயமை அதிகாரம்1077, 1078, 550, 1224).

இதுவும் மநு சொன்னதே. மன்னர்கள் ,வன்செயலைப்– பலவந்தத்தைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது என்பான் மநு.

காண்க ஸ்லோகம் 99-160

பாபிலோனிய ஹம்முராபியின் 282 சட்ட விதிகளில் பக்கத்துக்குப் பக்கம் ‘கொல், கொல், கொல்’ என்று கொக்கரிக்கிறான்.ஆனால் மநுவில் அளவோடு தண்டனைகள் பேசப்படுகின்றன.

7-99. Let him strive to gain what he has not yet gained; 
what he has gained let him carefully preserve; 
let him augment what he preserves, and 
what he has augmented let him bestow on worthy men.

100. Let him know that these are the four means for securing the aims of human (existence); let him, without ever tiring, properly employ them.

101. What he has not yet gained, let him seek to gain by his army; what he has gained, let him protect by careful attention; what he has protected, let him augment by various modes of increasing it; and what he has augmented, let him liberally bestow on worthy men.

7-102. Let him be ever ready to strike, 
his prowess constantly displayed, and 
his secrets constantly concealed, and 
let him constantly explore the weaknesses of his foe.

tags-மநு நீதி நூல்- பகுதி 37

–தொடரும்

Leave a comment

Leave a comment