மிட்டன்னி மர்மம் நீடிக்கிறது- இந்துக்கள் உடனே செயல்படவேண்டும் (Post No.6006)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 30 JANUARY 2019
GMT Time uploaded in London –7-05 am
Post No. 6006
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மிட்டன்னி மர்மம் நீடிக்கிறது- இந்துக்கள் உடனே செயல்படவேண்டும் (Post No.6006)

தசரதன்பிரதர்தனன் என்ற வைஷ்ணவ பெயர்களுடன் கி.மு1400-ல் சிரியாவையும்,துருக்கியையும் ஆண்ட மன்னர்கள் பற்றி  இன்னும் பழைய தகவல்களே உள. ஏன்ஏன்?

அதிசயத்திலும் அதிசயம், சிரியா-துருக்கி பகுதியை 3600 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட மிட்டனி (Mitanni Civilization or Dynasty) நாகரீகம் பற்றி லண்டன் பல்கலைக் காக லைப்ரரியில் கூட ஓரிரு புத்தகங்கள் தான் கிடைத்தன. எந்த கலைக் களஞ்சியத்தை எடுத்தாலும் இரண்டு பக்க கட்டுரைதான் உளது! காரணம்   இந்து மன்னர்களின் பெயர்கள்! அதுவும் தூய ஸம்ஸ்க்ருதத்தில்! இது பற்றி 2014-ம் ஆண்டு  நான் எழுதிய கட்டுரைகளின் இணைப்பு முகவரிகளை  இறுதியில் சேர்த்துள்ளேன்.

முதலில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தேம்ஸ் & ஹட்ஸன் நிறுவனத்தின் இரண்டு பக்க மிட்டனி விஷயங்களை சுருக்கித் தருகிறேன். கட்டுரை இப்படி துவங்குகிறது:-

“மிட்டனி வரலாற்றை சரியாக வரிசைக் கிரமத்தில் அமைப்பது இன்னும் மிகவும் கடினமாகவே இருக்கிறது.”

அடுத்தாற் போல அதே பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியைக் (Box Item) கட்டம்போட்டு வெளியிட்டுள்ளனர். அதில் சொல்வதாவது:-

ஹுர்ரியன் மொழி இப்போது வழக்கொழிந்துபோன ஹுர்ரோ-உரர்தியன் (Hurro-Urartian) குடும்பத்தைச் சேர்ந்தது. பாபிலோனை கி.மு16ம் நூற்றாண்டிலிருந்து ஆண்ட காஸைட் (Kassites) பேசிய மொழியுள்ள கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. ஆயினும் அக்கடியந் காஸைட் அகராதி மூலம் 200 சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை வர்ணம், தேரின் பாககங்கள், சில தாவரங்கள், பாசனம், ஆட்களின் பெயர்கள் பற்றியவை. இப்போது நமக்குத் தெரிந்த எந்த மொழியுடனும் தொடர்புடையதல்ல.

மிடனியர்கள் யார் என்று தெரியவில்லை. ஒருவேளை காகஸஸ் பகுத்திக்கு அப்பாலிலிருந்து வந்த ஹுரியன்களின் ஒரு பிரிவாக இருக்கலாம்; ஹுரியன்கள் பற்றி கி.மு-3000 முதல் குறிப்புகள் உள.

எனது கருத்துக்கள்

காஸைட்- ஹிட்டைட் ஆகியோருக்கும் சிந்து-ஸரஸ்வதி நாகரீக மொழிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். ஏனெனில் இருவரும் ஏறத்தாழ சம காலத்தவர்கள். காஸைட் பேசிய மொழியில் 200 சொற்கள் வரை கிடைத்துள்ளதால் இதை ஆராய்தல் அவசியம். இந்தத் துறையில் தமிழ் படித்தவர்களும், ஸம்ஸ்க்ருதம் கற்றவர்களும் ஆராய்ந்தால் பல புதிய உண்மைகள் கிடைக்கும். 60,000 க்கும் மேலான களிமண் கல்வெட்டுகள் முதலியன கியூனிபார்ம் லிபியில்  அக்கடியன், சுமேரியன் மொழிகளில் இருக்கின்றன.

இது வரை கிடைத்த சுவையான தகவல்களை மீண்டும் சொல்கிறேன். உலகம் முழுதுமுள்ள கலைகளஞ்சியங்களிலும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொற்பொழிவிலும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட விஷயங்கள் நமது பாட திட்டத்திலேயே இல்லாதபோது மற்றவர்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.சுமேரிய- அஸீரிய பாடங்களைக் கற்கவும் ஒப்பிடவும் முறையான  நிதி ஒதுக்கீடு செய்து ஆராய்தல் நலம்பயக்கும்.

ஆர்ய தரங்கிணி என்ற பெயரில் இரண்டு வால்யூம்களில் ஆங்கிலத்தில் நூல் வெளியிட்டுள்ள கல்யாணராமன் போன்றோர்  இந்தத் துறையில் வழிகாட்ட முடியும்.

நான் முன்னர் எழுதிய விஷயங்களின் தொகுப்பு;

இவை உலகிலுள்ள எல்லோராலும்  100 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கப்பட்ட விஷயங்கள்:-

1.மிட்டனி நாகரீகப் பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் (எ.கா. தசரத, பிரதர்தன); நாமும் ராமாயணம்,விஷ்ணு ஸஹஸ்ர நாமம் முதலியவற்றில் காண்கிறோம்.

2. துருக்கியில் கிடைத்த குதிரை சாஸ்திர நூலில் ஸம்ஸ்க்ருத்க் கட்டளைகள் உள. இது கி.மு1300-க்கு முந்தையது.

3.தஸரதன் எழுதிய கடிதங்கள் அக்கடியன் மொழியில் கியூனிபார்ம் லிபியில் எகிப்திலுள்ள  அமர்ணா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பொழுது அமர்னா கடிதங்கள் உலக மியூஸியங்களை அலங்கரிக்கின்றன.

3. கிமு.1400 வாக்கில் துருக்கி-சிரியாவில் இரண்டு மன்னர்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கையில் வேத கால தெய்வங்கள் நால்வர் பெயரில் ஸத்தியப் பிரமாணம் எடுத்துள்ளனர். இதில் ரிக் வேதத்தில் கடவுளரின் உள்ள அதே வரிசையில் பெயர்கள் இருப்பதை சிந்து சமவெளி நிபுணர் அஸ்கோ பர்போலா சுட்டிக்காடியுள்ளார். இதனால் மாக்ஸ்முல்லர் முதலியோர் வேததுக்கு முதலில் சொன்ன காலம்  தவிடு பொடியாகிறது.

4.காஸைட்,ஹிட்டைட், மிட்டன்னியர் பற்றி அதிகம் தெரியவில்லை. அவர்கள் இந்தோ- ஐரோப்பிய (சம்ஸ்க்ருத) மொழித் தொடர்புடையோராக இருக்கலாம்.

உலகமே ஏற்றுக் கொண்ட இந்த விஷயங்கள்  பற்றி எனது கருத்துக்கள்

1.துரகம்/ குதிரை தொடர்பான மிகப் பழைய நூல் கிடைத்த நாட்டை இன்றும் நாம் துருக்கி என்று சம்ஸ்க்ருதத்திலேயே அழைக்கிறோம்.

சூரியனையே முதல் தெய்வமாகக் கொண்ட பாபிலோனியர் ஆண்ட சிரியா என்பது சூர்யா என்பதிலிருந்தே வந்தது.

அஸீரிய மன்னர்கள் அனைவரும் அசுர என்ற பெயர் வைத்திருப்பதால் அது அசுரர் நாடு.ரிக்வேதத்தின் பழைய பகுதிகளில்  அசுர என்றால் பலம் வாய்ந்தவர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது .இந்திரன் அக்னி முதல்யோரும்  அசுரர்  எனப்பட்டனர். பின்னர் பாரஸீகத்துக்கு குடியேறின சொராஸ்டர் வருணனுக்கு மட்டும் அசுர என்ற அடை மொழி கொடுத்தார். ஆகவே இதில் இனப் பொருள் (No Racial connotation)  இல்லை

இரான் (பாரஸீகம்) என்பது ஆர்ய என்ற சொல்லில் இருந்து பிறந்ததே.

ஒருமொழி பேசுவோர்,  காலத்தாலும் தூரத்தாலும் எவ்வளவு தள்ளிப் போகிறார்களோ அந்த அளவுக்கு அந்த மொழிப் பெயர்கள் சிதைவுறும். மேலும் மாற்று மொழி பேசுவோர் அதை உச்சரிக்க முடியாமல் திருத்தியும் எழுதுவர். நம்மூர்ப் பெயர்களை  வெள்ளைக்கார்களும் கிரேக்கர்களும் வாய்க்கு வந்தபடி எழுதி புது ஸ்பெல்லிங் கொடுத்ததை நாம் இன்றும் படிக்கிறோம். இந்துப் பெயர்களும்  சடங்குகளும் இலங்கை,மலேசியா, பாலி/இந்தோநேஷியா,தென் ஆப்ரிக்கா, பிஜி, கயானா, மோரீஸ், ஷெஷல்ஸ் தீவுகளில் எந்த அளவுக்கு திரிந்து போயுள்ளன என்பதை நாம்  இப்போது அறிகிறோம்.

சங்க காலத்திலேயே காமாட்சி என்பதை காமக் கண்ணியார் என்றும் சுலோசனா என்பதை நக்கண்ணையார் என்றும், சிலப்பதிகாரத்தில் கோபாலன் என்பதை கோவலன் என்றும் எழுதுவதை நாம் கண்டோம். ஆக மொழி மாற்றத்தை மனதில் கொண்டு  ஆராய்ந்தால் தமிழ்-ஸம்ஸ்க்ருதம் கற்றோர்,  சுமேரியாவில் அரிய பெரிய உண்மைகளைக் காணலாம். லண்டன் போன்ற இடங்களில் வசிக்கும் என்னைப் போன்றோருக்கு பல்கலைக் கழக லைப்ரரிகளிலும், பிரிட்டிஷ் லைப்ரரியிலும் மஹத்தான பொக்கிஷங்கள் வேறு கிடைக்கும். ஆக இந்து, இந்திய பாட திட்டத்தில் இதை உடனே சேர்க்க வேண்டும்.

 மிட்டன்னி என்பது மித்ர என்ற வேத கால தெய்வத்தின் பெயரில் இருந்தும், அவர்களுடைய தலைநகரான வசு கன்னி என்பது வசு, கன்யா என்ற வேத கால தெய்வத்தின் பெயர்களில் இருந்தும் தோன்றியிருக்கலாம்

காஸைட் என்பதை காசி ராஜா வம்சம், ஹிட்டைட் என்பது க்ஷத்ரிய வம்சம், ஹுர்ரியன் என்பது ஆர்ய என்று படிக்க முடியும். ஆயினும் ஊகத்தின் பேரில் அல்லாது முறையான ஆராய்ச்சி மூலம் இவற்றை நிரூபிக்க வேண்டும். அதற்கு நாம் அந்த மொழிகளைக் கற்க வேண்டும்.

இறுதியாக ஒரு விஷயம்; பாபிலோனியா பகுதியில் 3000க்கும் மேலான தெய்வங்கள் இருந்தன. பல மொழிகள் பேசப்பட்டன;பல இன மக்கள் தொடர்ந்து குடியேறிப் போரிட்டனர்.ஆகையால் குழம்பாமலிருக்க அந்த வரளாறு பற்றி முழுதும் தெரிந்திருக்க வேண்டும்.

Tags — மிட்டன்னி, மர்மம், அக்கடியன், சுமேரியன்

–சுபம்–

மிட்டன்னி | Tamil and Vedas

 – 

Research paper written by London Swaminathan Research article No.1342; Dated 12th October 2014. சிரியாவும் துருக்கியும் இப்போது முஸ்லீம் நாடுகள். ஆனால் 4000 …

ஒரே நாளில் விவாகரத்து செய்த ராணி …2 Apr 2017 – இவள் ஒரு இந்து அரசனின் புதல்வி. தற்போது துருக்கி- சிரியா என்ற பெயரிலுள்ள துலுக்க நாடுகள் முன்னர் மிட்டன்னி (MITANNI) வம்ச …

சிரியா, துருக்கியில் இந்துக்கள் ஆட்சி …12 Oct 2014 – மிகவும் அதிகம் அடிபடக்கூடியமிட்டன்னிய மன்னன் தசரதன் என்பவன் ஆவான். அவன் தனது மகள் ததுஹிபாவை (தத்த சிவா) எகிப்திய …

அனுமன் ராமனைக் கொன்றான் …swamiindology.blogspot.com/2014/05/blog-post.html

1 May 2014 – … இராக்-துருக்கி-சிரியா பகுதியை ஆண்ட மிட்டன்னி நாகரீக மன்னர்கள் பிரதர்தனன், தசரதன் ஆகியோர் பெயர்களும் மறுக்கமுடியாத …

சம்ஸ்கிருதம் | Tamil and Vedas1.      

 (for old articles go to tamilandvedas.com ORswamiindology.blogspot.com) …… 1400ல் மிட்டன்னிராஜாக்களின் உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.

******

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: