இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! – 9 (Post no.6011)

Written by S Nagarajan


Date: 31 JANUARY 2019


GMT Time uploaded in London – 6-04 am


Post No. 6011

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

உலகின் எந்த நாட்டிலும் எந்த ஒரு சண்டையிலும் காணாத அற்புதமான பெருந்தன்மையை ஹிந்து சேனை ஒன்று மட்டுமே கொண்டிருப்பதை பல வரலாற்றுச் சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. இதில் ஒரு விசேஷ அம்சம் என்னவெனில் இதை அந்த ஹிந்து சேனையை எதிர்த்தவர்களே கண்டு அயர்ந்து வியந்து பாராட்டி இருப்பது தான். இது அந்தக் காலத்தில் மட்டுமல்ல, சமீபத்திய உலகப் போர்களிலும் காணப்பட்டது. அதை பல குறிப்பேடுகள் விவரிக்கின்றன. அதைத் தொகுத்துக் கலைக்களஞ்சியமாக்கத் தான் ஆளில்லை. பெரும் பணியான இது ஒரு தனிமனிதனால் செய்ய முடியாது. அரசு அல்லது பெரும் நிறுவனங்கள் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டிய பணி இது. நாம் தான் செகுலர் ஆயிற்றே. அரசு என்ற முறையிலும் செய்ய மாட்டோம்; அறப்பணியில் ஈடுபட்டு முன்வரும் நிறுவனங்களையும் செகுலர் என்ற பெயரால் செய்ய விட மாட்டோம்; இது தான் இன்றைய நிலை. இது மாறுமா; மாற்ற நாம் முன் வருவோமா – சற்று சிந்திக்க வேண்டும்!

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! – 9

ச.நாகராஜன்

லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தனர்; என்றாலும் கூட  பெயரளவுக்குத் தலைவராக இருந்த ஒருவருக்கே இந்த சுதந்திரம் பெற்ற பெருமைப் போய்ச் சேர்வதாக இருக்கிறது.

ஏன் நமது முன்னோர்கள் ஒரு  எதிர்ப்பையும் செய்யவில்லை? ஏன் நாம் இவ்வளவு மிக மோசமாக கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறோம், கொலை செய்யப்பட்டிருக்கிறோம்? இந்தக் கேள்விகள் நிச்சயம் நம்மை நமது பண்பாட்டு வேர் மற்றும் புராதனம், நமது வரலாறு, பாரம்பரியங்கள், நமது தேசத்திற்கான சொந்தம் கொண்டாடும் தன்மை ஆகிய நீரோட்டத்திலிருந்து மாறுபடச் செய்கின்றன.

நமது வரலாற்றின் அடிவேரைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவே தான்! ஜெய் ஹிந்த்! (www.myindiamyglory.com/ 2018/11/21).

****

இத்துடன் கட்டுரை முடிகிறது. தொடர்ந்து ட்ரூத் ஆங்கில வார இதழ் இந்தக் கட்டுரையை ஒட்டிய தனது கருத்தைத் தருகிறது. அதில் மேலும் பல விஷயங்கள் இருப்பதால் அதையும் படித்து உணர வேண்டியது அவசியமாகிறது. அதையும் கீழே தருகிறோம்.

***

1. இந்தியாவில் நாடு எங்கணும் பல்வேறு இடங்களில் யுத்தங்கள் நடந்தன. ஆயின் மிகுந்த வீரம் கொண்ட ராஜஸ்தானின் ராஜபுத்திர வம்சம் எப்போதுமே போர்க்களத்தில் அசாத்திய வீரத்துடன் போரிடும். ஒரு ரத வீரன் ஒரு பொழுதும் காலாட்படை வீரரைத் தாக்க மாட்டான்.ஒரு குதிரை வீரன் ஒரு பொழுதும் காலாட்படை வீரரைத் தாக்க மாட்டான். ராஜபுத்திரர்களுக்கு எப்போதுமே சரிக்குச் சமமான வீரர்களுடன் மட்டுமே தான் போர்!

சாகும் வரை போர் என்று தீர்மானித்து விட்ட தருணங்களில் அந்த வீரர்கள் ஜரத் காபர்வாலா என்று சொல்லப்படும் மஞ்சள் ஆடையை அணிவர்.  ஜோத்பூர் ராணாவுக்கும் சிந்தியா வீரர்களுக்கும் இடையே மார்டாவில் நடந்த போரைப் பற்றி  சிந்தியாக்களுடன் சேர்ந்து போரிட்ட ஒரு பிரிட்டிஷ் வீரன் போரைப் பற்றி இப்படி குறித்து வைத்துள்ளான்:

“ஜரத் காபர்வாலாக்களின் வீரத்தையும் தைரியத்தையும் விளக்க வார்த்தைகளே இல்லை. சேனை விரட்டப்பட்ட போதும் அவர்களை விட ஒரு படி மேலான நிலையை அடைந்த போதும் கூட சிந்தியாக்களின் மிகப்பெரிய சேனையுடன் மீதமுள்ள 15-20 போர்வீரர்கள் போரிட்டுக் கொண்டே இருந்தனர். ஒரு ராஜபுத்திர வீரன் கூட இறுதி மூச்சு வரை போர்க்களத்தை விட்டு அகலவில்லை. ஒவ்வொரு ராஜபுத்திர போர்வீரனும் பல சிந்தியா வீரர்களை இறக்கும் முன்னர் கொன்று குவித்தான்.”

ஜேம்ஸ் ஸ்கின்னர் என்ற ஐரோப்பிய தளகர்த்தன்  கி.பி. 1800ஆம் ஆண்டு மால்பூரில் நடந்த போர் பற்றிய தனது போர்க்கள விவரணத்தில் ராஜபுத்திர வீரர்கள் வீரத்துடன் அதிக தீரத்துடனும் பீரங்கிப் படை குண்டுமாரி பொழியும் போது சற்றும் பயமின்றி எதிர்த்ததைக் குறிப்பிடுகிறார். நூற்றுக் கணக்கான ராஜபுத்திர வீரர்களை துளைக்கும் பைனட்டோ அல்லது பீரங்கி குண்டு மழையோ கொன்ற போதும் சற்றும் அஞ்சாது  மீதியுள்ள சேனை மேகக் கூட்டம் போல அதி பயங்கர ஆரவாரத்தைச் செய்து எதிரிகளின் மீது ஏறியது.

கி.பி.1750ஆம் ஆண்டு மார்டா போர்க்களத்தின் அருகில் நடந்த ஒரு சம்பவம் விசேஷமாகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். டெல்லியைச் சேர்ந்த சலாவத் கானால் ராஜா ராம் சிங்கின் சேனை தாக்கப்பட்டது. நான்கு மணி நேரம் நடந்த அதி பயங்கர சண்டைக்குப் பின்னர் சலாவத் கானின் சேனை தளர்ச்சியுற்று அதி பயங்கர பாலைவன சூரிய வெப்பத்தில் வெப்பத்தாலும் தாகத்தாலும் செத்துக் கொண்டிருந்தது. அந்தக் கணத்தில் எல்லா நீர்நிலைகளும் ராஜபுத்திரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. நெடுநேரம் தண்ணீருக்காக வீணே அலைந்து தேடிய பின்னர் எதிரிகளான ராஜபுத்திரர்களின் முகாமிலிருந்து நீரைக் கேட்டு அவர்கள் பெற்றனர்.

மிக்க தீரத்துடனும் தயாள மனப்பான்மையுடன் இருந்த ராஜபுத்திர வீரர்கள் எதிரிகளை நீரைக் கையில் ஏந்திக் கொண்டு வரவேற்றனர். அது அவர்களுக்கும் அவர்கள் குதிரைகளுக்கும் போதுமானதாக இருந்தது. இந்த அசாதாரணமான பெருந்தன்மையால் தங்கள் சக்தியையும் பலத்தையும் மீண்டும் முகலாய சேனை பெற்றவுடன் சண்டை மீண்டும் தொடங்கியது.

****

மேலே கண்ட தமிழாக்கத்தின் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது :

Lakhs of freedom fighters sacrificed their lives for the freedom we enjoy today yet this freedom is attributed to one namesake leader.

Why did our ancestors not offer any resistance? Why were we always so easily looted and plundered? These questions are bound to drift us from our rich cultural roots and ancestry, from our historicity and traditions, from our belongingness to the nation.

It is time we know our true historical roots. Jai Hind! (www.myindiamyglory.com/ 2018/11/21).

1. In India, battles have taken place across the country. But the gallant Rajput clan of Rajasthan would always fight their battle with bravery and chivalry. A charioteer would never attack a foot soldier; a cavalier would never challenge a footman. For the Rajputs, war would always be among equals.

On occasions when the Rajputs would prepare to fight till they die, they would wear a yellow dressing and be known as Zarad Kaparwala. An account of the battle of Marta that occurred between the soldiers of Jodhpur Rana and the soldiers of Scindhia, narrated by a British soldier who was part of the Scindhia soldiers reads as this :

“No words can express the level of courage and gallantry of the Zarad Kaparwalas. Even after being dispersed and overtaken, the remaining 15-20 soldiers kept fighting the much bigger army of Scindhias and not a single of the Rajputs left the war until the last breath. Each Rajput warrior had killed many of the opponent Scindhia contingents before he had breathed his last.”

James Skinner, a European general, in his narrative of the Battle of Malpur 1800 AD, had described the Rajput army to be valiant and overwhelming, that remained undeterred in the face of artillery shower. Completely fearless of the piercing bayonet or the artillery shower that killed hundreds of Rajput fighters, the rest of the army mounted on their opponent creating a terrific din much akin to a cloud burst.

One incident that occurred in year 1750 AD near the battlefield of Marta needs special mention. The army of Rajah Ram Singh had been attacked by Salavat Khan of Delhi. After a tremendous battle continuing over four hours, the army of Salavat Khan grew restless and were dying out of heat and thirst in the scorching desert sun. All the sources of water were under the control of the Rajputs at that moment. After a long futile search for water, the Muslim army sought water from their opponent Rajput camps.

The chivalrous and broad-hearted Rajput clan welcomed their enemies with water, sufficient enough for the cavalry and their horses. When the Muslim army had restored their energy and vigor by this tremendous show of generosity of the Rajput clan, the battle resumed.

***

நன்றி: ட்ரூத் ஆங்கில வார இதழ் – தொகுதி -86- இதழ் 35 ; 28-12-2018 இதழ்

Soruce Truth, Kolkata weekly vol 86 issue 35 dated 28-12-2018

***

Leave a comment

2 Comments

  1. இது மிக முக்கியமான கட்டுரைத் தொடர். இன்றைய கல்விமுறையில் படித்த 60 வயதுக்கு உடபட்டவர்களுக்கு இந்த விஷயங்கள் அனேகமாக ஒன்றுமே தெரிய வாய்ப்பில்லை. நம் மீது படையெடுத்து வந்து நம்மைக் கொள்ளையடித்த கும்பல்களின் செயல்களையே இந்திய சரித்திரமென திணித்துவிட்டார்கள். நிற்க.
    நாம் ஏன் சுதந்திரத்தை இழந்தோம்? 1909ல் காந்திஜி எழுதிய “ஹிந்த் ஸ்வராஜ்” புத்தகத்தில் இந்தக் கேள்வியை எழுப்பி பதிலும் சொல்கிறார்.ஆங்கிலேயர் நம்மை வெற்றிகொள்ளவில்ல, நாமே சுதந்திரத்தை இழந்தோம், ஏனெனில் நமது பாரம்பரியத்தைவிட்டு அந்நிய முறைகளைப் பின்பற்றினோம், அதனால் ஸ்வராஜ்யத்தை இழந்தோம் என்றார். வக்கீல்கள், டாக்டர்கள், ரயில்வண்டி, ஆகியோர்./ஆகியவை நம்மை அடிமைப் படுத்தி விட்டன என்றார். இதிலிருந்து நம்மை மீட்டு விப்பதே தமது லக்ஷியமென்றார். [ My swaraj is to keep intact the genius of our civilization ] ஆனால் புத்தகத்தின் கடைசியில் அவரே பல்டி அடித்தார்: இது தமது இறுதி லக்ஷியம், பார்லிமென்டரி முறையில் அரசு அமைப்பதே தன் உடனடி லக்ஷியம் என்றார். பல பிரச்சினைகளில் ஈடுபட்டு, பல செயல்களில் ஈடுபட்ட அவரால் எதையும் முழுதும் சாதிக்க இயலவில்லை.

    ஸ்வாமி விவேகானந்தரும் ஸ்ரீ அரவிந்தரும் மேலும் நுண்மையாகக் கண்டனர். இந்தியா தன் உண்மையான க்ஷத்ரிய பலத்தை இழந்துவிட்டது, இதற்கு புத்தமதமும், ஆதி சங்கரரின் மாயாவாதமும் காரணம் என்று சொன்னார்கள். ஸ்ரீ அரவிந்தர் இதைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்.

    ஆங்கிலேயர்களை முறியடிப்பதில் ஸ்ரீ அரவிந்தர் காட்டிய அறிவு பூர்வமான அணுகுமுறையால் ஆங்கில அரசினர் ஆட்டம்கண்டனர். He is the most dangerous person we have to deal with now என்று வைசிராய் மின்டோ பிரபு எழுதினார், மூன்று முறை பகீரதப் பிரயத்தனம் செய்தும் ஸ்ரீ அரவிந்தரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரே 1910ல் அரசியலைவிட்டு நீங்கினார். ஆனால் 1905லேயே சுதந்திரத்தீற்கு வேண்டிய பலமான அஸ்திவாரத்தை அமைத்தார். அவர் செயல் திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:

    -முழுமையான சுதந்திரம் Complete Swaraj, not dominion status
    -அன்னியப் பொருள் பகிஷ்காரம் Boycott of foreign things
    -ஒத்துழையாமை Passive Resistance, non-cooperation
    -தேசீயக் கல்வி System of national education
    -ஆங்கிலேயர் அமைத்த கோர்ட்டுக்களை நாடாதிருத்தல் Boycott of English courts
    -தேசீயத் தொழில்களுக்கு ஆதரவு support for native industries
    ஏழை, எளியவர்களின் முன்னேற்றம் Uplift of the downtrodden

    கவனித்துப் பார்த்தால் காந்திஜி பின்னாளில் இவற்றையே பின்பற்றினார் ! ஆனால் இவை ஸ்ரீ அரவிந்தர் வகுத்த வழி என்று ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்லவில்லை! ஸ்ரீ அரவிந்தர் 1905ல் எழுப்பிய சுயராஜ்ய கோரிக்கையை காந்திஜியின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் 1929ல் தான் லாகூர் கங்கிரசில் ஏற்றுக்கொண்டது!
    காந்திஜி வருவதற்கு முன் ‘ வந்தே மாதரம்” கோஷம் வானைப்பிளந்தது; காந்திஜி வந்தபிறகு ‘காந்திஜிக்கு ஜே ஆயிற்று ! பாரத மாதா நினைவிலிருந்து அகன்றார்!
    அவருக்குப்பின் தனி நபர் வழிபாடு நமது அரசியல் மதமாகிவிட்டது, இன்றளவும் தொடர்கிறது! அரசியல் கட்சிகள் குடும்பச் சொத்தாகிவிட்டன!
    சுதந்திரப் போராட்டத்தில் சற்றும் ஈடுபடாத, சுதந்திரத்தை எதிர்த்த கும்பல்கள் இன்று ஆட்சி நடத்துகின்றன!

    ஆங்கிலேயர் வகுத்த கல்விமுறை இன்னமும் தீவிரமாகத் தொடர்கிறது. அன்னியப் பொருள்கள் தங்கு தடையில்லாமல் வரலாம். ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்த நிறுவிய கோர்ட்டு -கச்சேரிகளும், சட்டமுறைகளும், நிர்வாக இயந்திரமும் முறைகளும் அதே போக்கில் செயல்படுகின்றன. IMF. World Bank. WTO ஆகிய அமைப்புகளுக்கு அடிபணிந்து நமது பொருளாதார சுதந்திரத்தை இழந்துவிட்டோம்! இப்படி ஆங்கிலேய முறைகள் சுதந்திரத்திற்குப்பின் நீடிக்கின்றன! அடிமையின் மோகம் மடியவில்லை!

    நவீன பொருளாதாரத்தின் தந்தை எனப்படும் Adam Smith 1776ல் எழுதிய உலகப் புகழ்பெற்ற The Wealth of Nations நூலில் ஆங்கிலக் கம்பெனியார் சொந்த லாபத்திற்காக இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள், அவர்கள் சுரண்டுவார்கள், இந்தியாவின் நலன் அவர்களது நோக்கம் இல்லை என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார். 1757ல் பிளாசி சண்டைக்குப் பிறகு ஆங்கிலக் கம்பெனி ஆட்சி ஏற்பட்ட 20 ஆண்டுகளுக்குள் இதைச் சொல்லிவிட்டார் ஆடம் ஸ்மித்! ஆனால் இதைப் புரிந்து கொள்ளும் சக்தி நம்மவர்களுக்கு இல்லை! படித்த வர்கத்தினரே அவர்களுக்குச் சலாம் போட்டனர். இன்றும் மேலைப் பொருள்களின் மோகம் நீடிக்கிறது. படித்த வர்கத்தினரே இதன் பாதுகாவலர்கள்!

    நமது உண்மையான சரித்திரம் மறைக்கப்பட்டு விட்டது. நமது இளைஞர்கள் போலி வரலாற்றைக் கற்கிறார்கள்.
    ” Those who do not learn from the past are condemned to repeat it” [This is also stated as: Those who do not learn history are doomed to repeat it.] என்று அமெரிக்க தத்துவ அறிஞர் ஜார்ஜ் சான்டயானா GEorge Santayana சொன்னர். அவர் சொன்னது சரி என்பதை நாம் நிரூபித்து வருகிறோம் !

  2. Santhanam Nagarajan

     /  February 1, 2019

    சூப்பர்!
    திரு நஞ்சப்பா அவர்கள் தனது கருத்துக்களை அழகிய நடையில் ஆணித்தரமாகக் கொடுத்திருக்கிறார். நன்றி. ஒவ்வொரு வார்த்தையும் ஊன்றிப் படிக்க வேண்டும். மிக அருமையான கருத்துக் களஞ்சியத்தைத் தந்துள்ள திரு நஞ்சப்பா அவர்களுக்கு உளமார்ந்த நன்றி!
    படிக்கப் படிக்கத் தேனாக இனிக்கிறது. நாகராஜன் – பெங்களூர்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: