பணம் இரட்டிப்பாகும் காலம் ! (Post No.6041)

Written by S Nagarajan


Date: 7 February 2019


GMT Time uploaded in London – 5-49 am


Post No. 6041

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சென்னையிலிருந்து வெளியாகும் மாத இதழ் கோகுலம் கதிர். பிப்ரவரி 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

பணம் இரட்டிப்பாகும் காலம் !

ச.நாகராஜன்

r = வட்டி விகிதம்

     நிதி சம்பந்தமாக நமக்கு உடனடியாக மனக்கணக்காக ஒரு வரும்படியைக் கணக்கிட ஒரு எளிய சூத்திரம் உண்டு.

அது தான் சூத்திரம் 72.The Rule of 72 என்று இதை ஆங்கிலத்தில் கூறுவர்.

சூத்திரம் 72 என்பது மனதினால் போடக்கூடிய ஒரு எளிய வழியாகும்.

எடுத்துக்காட்டாக ஒரு கணக்கு:

6 சதவிகிதம் வட்டி தரப்படுகிறது.அப்படியானால் நான் போட்ட பணம் எப்போது இரு மடங்காகும்.

இங்கே தான் சூத்திரம் 72 நமக்கு உதவுகிறது

இரு மடங்காகும் வருடங்கள் =  72 / வட்டி விகிதம்

இங்கு 6 % வட்டி விகிதம் என்பதால் 72 / 6 = 12 வருடங்கள்.

இதே வட்டிவிகிதம் 12 சதவிகிதம் என்றால் விடை இதோ : 72 / 12 = 6 வருடங்கள்!

சரி எனக்கு நான்  போட்ட பணம் பத்து வருடங்களில் இரட்டிப்பாக ஆக வேண்டும்.

அப்போது இந்த சூத்திரம் உதவுமா? உதவும்.

72 / 10 = 7.2 %  அதாவது 7.2 % என வட்டி விகிதம் தரப்பட்டால் பத்து வருடங்களில் போட்ட பணம் இரட்டிப்பாகும்!

தேசத்தின் GDP (Gross Domestic Product) பற்றி ஒரு உத்தேச மதிப்பீடு போட வேண்டும்.

தேசத்தின் வளர்ச்சி விகிதம் 4 % ஆக இருந்தால் தேசத்தின் GDP எப்போது இரு மடங்காக உயரும்.

72 / 4 = 12 வருடங்கள் . 12 வருடங்களில் தேசத்தின் GDP இரு மடங்காக உயரும்.

இந்த வளர்ச்சி 4 % -லிருந்து 8 ஆக உயர்ந்தால் ஒன்பது வருடங்களிலேயே தேசத்தின் வளர்ச்சி இரு மடங்காகும். இது 4 %-லிருந்து 2 ஆகக் குறைந்தால் பதினெட்டு வருடங்கள் ஆகும் – தேசத்தின் வளர்ச்சி இரு மடங்காக!

விலைவாசி ஏறிக் கொண்டே இருக்கிறது. நம் கையில் உள்ள பணத்தின் மதிப்பு என்னவாகும்? இருக்கவே இருக்கிறது சூத்திரம் 72!

2 %லிருந்து 3 % ஆக விலைவாசி ஏறி விட்டது என்றால் 36 வருடங்களில் பாதியாக ஆகப் போகும் உங்கள் பணம், 24 வருடங்களிலேயே அந்த இழப்பை எட்டி விடும்!

கல்லூரியில் உங்கள் பையனோ அல்லது பெண்ணோ படிக்கும் போது பணம் கட்ட வேண்டி இருக்கிறது. வருடத்திற்கு 5 % என்ற விகிதத்தில் இது அதிகரிக்கிறது என்று உங்களுக்குத் தெரிய வருகிறது.

அப்போது 72 / 5 = 14.4 . அதாவது 14.4 வருடங்களில் கல்லூரிக் கட்டணம் இரு மடங்காகி விடும்!

ஒரு தேசத்தின் வளர்ச்சி திட்டத்தில் அங்கு பெருகி வரும் ஜனத்தொகையினால் என்ன ஏற்படும் என்று கண்டுபிடிக்கக்  கூட இந்த சூத்திரம் உதவும்.

சாதாரணமாக 2 % என்ற அளவில் உயரும் ஜனத்தொகை 3 % என்று ஆகி விட்டால் 36 வருடங்களில் நீங்கள் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை 24 வருடங்களிலேயே நிறைவேற்ற வேண்டி வரும்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எல்லாம் ஒரு மனக்கணக்கு தான்! உங்கள் குடும்பத்தில், நண்பர்கள் வட்டாரத்தில் இதைச் சற்று அமுல் படுத்திப் பாருங்கள். நீங்கள்  ஒரு ‘Financial Wizard’ என்று பெயர் வாங்கி விட முடியும்!

இதைப் பற்றி இன்னும் சிக்கலான கணித விஷயங்கள் உண்டு. அதை கணித மேதைகளுக்கு விட்டு விடுவோம். இதன் பயனை நாம் அனுபவிப்போம்!

****

Leave a comment

2 Comments

 1. சூத்திரம் 72 நல்ல, எளிய யுக்தி. இதை சிலர் அறிந்தே இருக்கிறோம். ஆனால் பணவிஷயத்தில் நாம் ஏமாந்து போகிறோம்! இந்த சூத்திரப்படி, குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட காலத்தில் பணம் இரட்டிப் பாகிறது என்பது உண்மைதான். ஆனால் இதே கால கட்டத்தில் பண விக்கத்தினால் Inflation பணத்தின் மதிப்பும் குறைந்தே வருகிறது. எனவே, பணத்தின் உண்மையான மதிப்பு இரட்டிப்பாவதில்லை. பணத்தின் மதிப்பு குறையாமல் இருக்கவேண்டுமானால் அதை எடுத்துக்கொண்ட ஆரம்ப வருஷத்தின் மதிப்புடன் இணைக்கவேண்டும், அதன் அடிப்படையில் இரட்டிப்பாவதைக் கணக்கிடவேண்டும். இதை Indexing for Inflation எனலாம். ஆனால் நமது நிதி மந்திரிகள் இதைச் செய்வதில்லை. மேலேழுந்த வாரியாக எண்ணின் அடிப்படையில் கணக்கிடுகிறார்கள்.
  இதில் மேலும் ஒரு ஏமாற்றுவித்தை அடங்கியிருக்கிறது, நம் பணத்திற்கு வரும் வட்டியை வருமானம் எனக்கணக்கிடுகிறார்கள். அதற்கு வரி விதிக்கிறார்கள். ஆனால் பணவீக்கத்தால் குறையும் மதிப்பை கணக்கிடுவதில்லை, அதற்கான எந்த சலுகையும் தருவதில்லை.அதை ஈடுசெய்வதுமில்லை. இப்படி நமது நிதி மந்திரிகளே பொது மக்களைக் கொள்ளையடிக்கிறார்கள்! Open highway robbery in broad daylight! குதிரை ஆளைக் கீழே தள்ளியதுடன் குழியும் பறித்த கதை!
  நமது நிதி மந்திரிகளுக்கு பொருளாதார அறிவோ, அடிப்படையோ இல்லை; நியாய, தார்மீக உணர்ச்சியும் இல்லை! அவர்கள் வரும் அரசியல் கட்சிகளின் நிலையும் இதுதான்!
  GDP யின் கதை/நிலை இன்னும் மோசமானது.விலைவாசிகள், சம்பளம்-கூலி ஆகியவை உயரும்போது GDPயும் தானே உயரும்! ஆகவே இதுவும் பணவீக்கத்தினால் பாதிக்கப்படுகிறது. National Income Accounting/GDP கருத்தை முதலில் செயல்படுத்திய Simon Kuznets என்னும் பொருளாதார அறிஞர், இது ஒரு தோராயமான எண்ணே தவிர ஒரு நாட்டின் பொருளாதார வளப்பத்தைக் காட்டும் உண்மையான கருவியல்ல என்று எச்சரித்தார்.
  …the welfare of a nation [can] scarcely be inferred from a measure of national income… (Kuznets 1934).
  Distinctions must be kept in mind between quantity and quality of growth, between costs and returns, and between the short and long run. Goals for more growth should specify more growth of what and for what (Kuznets 1962).

  ஆனால் இதை யாரும் பொருட்படுத்துவதில்லை- GDP அரைகுறை பொருளாதாரவாதிகளின், அரசியல் வாதிகளின் தாரக மந்திரமாகிவிட்டது! இன்று மேலை நாடுகளில் GDP யை அவ்வளவு முக்கியமானதாக அறிஞர்கள் கருதுவதில்லை! காப்பியடிப்பவர்களுக்கு என்ன கவலை?

 2. Santhanam Nagarajan

   /  February 7, 2019

  கருத்துக்களுக்கு நன்றி. முக்கியமான பாயிண்ட்ஸ்! இதில் இன்னும் சில சிக்கலான விஷயங்கள் உள்ளன.ஐம்பது வருடங்களுக்கு முன் நம்மிடம் இருந்த பத்தாயிரம் ரூபாயைக் கொண்டு அன்று வாங்கியவற்றை (பவுன் என்று வைத்துக் கொள்வோமே) இன்று வாங்க முடியவில்லை. இன்ஃப்ளேஷன் என்கிறோம். ஒவ்வொரு பொருளின் விலையையும் இப்படிப் பார்க்க முடியாத நிலையில் விலைவாசிக் குறியீட்டு எண் என ஒன்று வருகிறது. இதற்கு ஒப்ப சம்பளம் மிடில் க்ளாஸுக்கு ஏறுகிறதா? இல்லை. டாக்ஸ் சலுகை இதன் படியிலாவது ஒத்திருக்கிறதா, இல்லை. அது சரி, எட்டு மணி நேரம் உழைப்பைத் தரும் ஒருவன் இன்று 900 ரூபாய் பெறுகிறான். ஆனால் அதே நேரம் தரும் இன்னொரு சாஃப்ட்வேர் எஞ்சினியர் 4000 ரூபாய் பெறுகிறான். திறமை, படிப்பு என்பதெல்லாம் வருகிறது. நல்ல கம்பெனிகள், முதலாளியின் பகிர்ந்து கொள்ளூம் மனப்பான்மை இன்ன பிற…. ஆக தனி நபரின் வருமானம், செலவு, சேமிப்பு எல்லாமே ஒரு ரிலேடிவ் கணக்கீடு தான்! அப்படியெனில் ஒரு நாட்டிற்கான வரவு செலவு – அரசியல்வாதிகள் கொள்ளை அடித்தது போக….. தலை சுற்றுகிறது!
  நன்றி!! ச.நாகராஜன் பங்களூரு

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: