
Written by S.Nagarajan
swami_48@yahoo.com
Date: 4 March 2019
GMT Time uploaded in London – 6-56 am
Post No. 6148
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
இன்று 4-3-19 சிவராத்திரி. அவனது பொருள் பொதிந்த திருவிளையாடலை பனி மலை அருகே நேரடியாக அனுபவிக்கும் கால கட்டம் இது!
அவனைப் போற்றுவோம்; துதிப்போம்!
இமயத்தில் சிவனது திருவிளையாடல்!
ச.நாகராஜன்

திருத்தமாய் ஒருத்தன் செவிப்புலன் கேட்பச்
சிவ சிவ என்றிடில் பனைமேல்
இருத்திய இடி போல் எரிந்திடும் பாவம்;
இறப்பொடு பிறப்பெல்லாம் இரியும்:
ஒருத்தன் வாயாரச் சிவ என முக்கால்
உரைத்திடில் ஓருரை அதற்குக்
கருத்தன் வாழ் பதத்தில் இருத்திடும்; இரண்டும்
கடவுள் மேல் கடன்களாய் நிற்கும்.
விருத்தாசல புராணத்தில் வரும் அழகான பாடல் இது.
சிவ நாம ம்ஹிமையை இதற்கு மேல் சிறப்புடன் யாராலும் உரைக்க முடியாது.
சிவ் சிவ என்று சொன்னால் பாவம் எல்லாம் இடியானது பனை மேல் விழுந்தது போல எரிந்து போகும். இறப்பும் பிறப்பும் – ஜென்ம மரணச் சுழற்சி – நீங்கும்.
சிவ என்று மூன்று தரம் சொன்னாலோ முதல் சிவ நாமத்திற்கு கடவுள் பதத்தில் இருக்கும் பேறு கிடைக்கும்.
மற்ற இரண்டு சிவ நாமம் சிவனிடம் கடன்களாய் நிற்கும்.
தேவையான நேரத்தில் சிவன் அருள் பாலிப்பார்.
சிவனுடைய 108 நாமங்களின் விளக்கம் அற்புதமானவை.
அதில் 70வது நாமம் : ஓம் ப்ரமதாதிபாய நம: என்பதாகும்.
சிவ பிரான் ப்ரமதர்களுக்குத் தலைவன்.

வைதிகம் அல்லாத அவைதிகர்களை அழிப்பதால் சிவனது சபையில் உள்ளவர்கள் ப்ரமதர்கள் என அழைக்கபப்டுகின்றனர்.
மஹா பாரதத்தில் வரும் விளக்கம் இது:
“ம்னதாலும் வாக்காலும் கர்மாவினாலும், பக்தர்களைப் புத்திரர் போல ரக்ஷிப்பவர் ப்ரமதர்.பிரும்ம த்வேஷிகளது ரத்த மாமிசங்களை கோபத்துடன் சிவ ப்ரமதர் பக்ஷிப்பார்.”
சிவபிரான் தானே களத்தில் இறங்கி 64 விளையாடல்களை நடத்தியதைக் கூறுவது திருவிளையாடல் புராணம்.
அவன் பிறப்பிலன்; இறப்பிலன்; என்றும் உளன்!
நேரே அவ்வப்பொழுது திருவிளையாடல்களைச் செய்வது ம்டட்டுமன்றி ப்ரமதர்களைக் கொண்டு துஷ்டர்களை சிக்ஷித்து பக்தர்களுக்கு அருளி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவன் அவன்.
35வது நாம இது : ஓம் கைலாஸ வாஸிநே நம:
கைலாஸத்தில் வசிப்ப்வன் அவன்.
கேலி அதாவது விளையாட்டு – அதன் கூட்டம் கைலம். அது உள்ள இடம் கைலாஸம். அதாவது சிவாலயம்.
கைலாஸம் என்றால் சிவனின் திருவிளையாடல் நடக்கும் என்று பொருள்.
இமயமலை,
மேரு மலை
வைகுண்டத்திற்கு மேல் உள்ள ஓரிடம்
என இப்படி மூன்று இடங்கள் உள்ளன.
இங்கு சென்றவர் புண்ணியம் கழிந்த பின்னர் பூமிக்குத் திரும்புவர்.
முதல் இடமான இமயமலை அருகே அவன் தனது திருவிளையாடலை இப்போது நடத்துகிறான் – துஷ்டர்களை ஒழித்துக் கட்டி பக்தர்களைப் பாதுகாக்க! ப்ரமதர்கள் அங்கு இறங்கி விட்டனர் போலும்!
இந்தத் திருவிளையாடலின் ஒரு அங்கமாக ஆவோமாக!
சிவ சிவ சிவ என்று சொல்லி துஷ்டர்களை ஒழிக்கும் பணியில் அவனது கருவியாக ஆவோமாக!
வந்தே மாதரம்.
பாரத் மாதா கீ ஜெய்!

***

Rama Nanjappa
/ March 4, 20191962லிருந்து இமயமலைப் பகுதி துஷ்டர்களின் நடமாட்டத்தைச் சகித்து வருகிறது. இதைத்தவிற, வேறு இருவகை பாதிப்புகள் நிகழ்ந்துவருகின்றன.
1. முன்னேற்றம் என்ற பெயரில் நடந்துவரும் பல செயல்/பொருள்களால் உலக அளவில் ஏற்பட்டுள்ள வெப்ப அதிகரிப்பால் இமயத்திலுள்ள பனிப்பாறைகள் பின்னோக்கிப் போகின்றன. பனியின் அளவும் குறைந்துவருகிறது,, இருக்கும் பனியும் விரைவில் உருகிவருகிறது. இதனால் இன்னும் 50 ஆண்டுகளில் கங்கைகூட வறண்டுவிடும் அபாயம் தோன்றியிருக்கிறது. ( இது தவிர, சீனாக்காரர்கள் திபெத் பகுதியில் நதிகளில் கட்டிவரும் அணைகளால் பிரம்மபுத்திராகூட பாதிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.) இது எத்தகைய ஆபத்து என்பதை இன்னும் நமது அரசோ, பிறரோ புரிந்துகொள்ளவில்லை. இதைத் தடுப்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை.
2. இமயமலைப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதுடன், அங்குள்ளோரின் வாழ்க்கைமுறையும் வெகுவாக மாறி வருவதால் நிலம், நீர் ஆகியவற்றின் பயன்பாடுகள் மாறிவருகின்றன, தொழிற்சாலைகளும் பெருகிவருகின்றன. பொல்யூஷன்தான், காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதைத்தடுக்கும் சக்தி நமக்கு இருந்தும் அரசியல் காரணங்களால் இவை தடுக்கப்படவில்லை. மாறாக தீவிரப்பட்டே வருகின்றன.
இந்த நிலையில், அங்கு யாரை துஷ்டர்கள் என்பது? பலவகை துஷ்டத்தனங்கள் நடக்கின்றன. நாமும் ஒருவகை துஷ்டர்கள் தான்.
ஒரு பொருளை, இடத்தை அதன் சிறந்த உபயோகத்திற்கு விடுவதுதான் விவேகம். இமயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது ஆன்மீக வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. “அசையாப் பொருள்களில் நான் இமயம்” (ஸ்தாவராணாம் ஹிமாலய: )என்று கீதையில் பகவான் சொல்கிறார். (10.25) அது சிவபிரானின் இருப்பிடம் என்றும் சொல்கிறோம். ஆனால் பலவகையிலும் அதன் புனிதத்திற்கு ஊறுவிளைவித்து வருகிறோம்.
இமயப் பகுதி உண்மையிலேயே புனிதமானதுதானா? இதைப்பற்றிய ஒருவிளக்கம் 1970ம் ஆண்டில் நான் டில்லியில் ஒரு ராமாயண உபன்யாசத்தில் கேட்டது. அந்த உபன்யாசகர் வட இந்தியாவில் பல புனிதத் தலங்களுக்கும் சென்றார். எல்லாம் வியாபாரமய மாகிவிட்டதைக் கண்டார். ஒவ்வொரு இடத்திலும் புனிதத்தைக்கெடுக்கும் பல நிழச்சிகள். கடைசியில் ரிஷிகேசத்திற்கு வந்து ஸ்வாமி சிவானந்தரைப் பார்த்தார். தான் சென்ற இடங்களின் அனுபவத்தையெல்லால் சொல்லி, ” எங்கும் இப்படி அக்ரமம் தான் நடக்கிறது, இவற்றை எப்படி புனிதம் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?
மஹான்கள், தபஸ்விக்கள் இங்கெல்லாம் இன்னமும் இருக்கிறார்கள் என்பதை எப்படி நம்புவது” என்று கேட்டாராம். ஸ்வாமி சிவானந்தர் உடனே, ‘ நீ என்னடா சொல்கிறாய் ” என்று சொல்லி அவர் தலைமேல் உள்ளங்கையை வைத்தாராம். “இப்போது இமயமலையைப் பார்” என்று சொன்னாராம். அந்தப் பக்கம் திரும்பிய உபன்யாசகர் அசந்துபோனாராம். மலைச் சரிவிலும் மரங்களின் அடியிலும், மரக்கிளைகளிலும், நதிக்கரையிலும், நதியில் நின்றும், நின்றுகொண்டும், ஒற்றைக்காலில் நின்றும், ஒரு கையைத் தூக்கி நின்றும் இன்னும் பல நிலைகளிலும் தபஸில் ஈடுபட்டிருந்த பலரைக் கண்டாராம். இமயம் உண்மையிலேயே புனிதமானதுதான். இது தபஸ்விக்களின் புகலிடம்தான். நமது கண்ணுக்குத் தெரியவில்லை என்றாராம் இமயஜோதி சிவானந்தர்.
இந்தப் புனித்தைப் புரிந்துகொண்டு அதைக் கெடுக்காமல் இருக்கும் புத்தியும் வழியும் நமக்குத் தெரியவில்லை! பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் இமயத்தையும் மட்டம் தட்டி விடுவோம்!
Santhanam Nagarajan
/ March 4, 2019I agree.
I would like to recommend to all the readers a beautiful book – Through the Valley of Gods – Travels in the Central Himalayas! by Man Mohan Sharma. First Published 1977 Vision books p ltd, 36-C Connaught Place New Delhi 110001 279 pages
Pl read this inspiring book.
Santhanam Nagarajan
/ March 4, 2019277 pages