இராவணன் சிறப்பு- கம்பர் பாடலின் இரு வடிவங்கள்! – அவன் தரும் அரிய செய்தி!

Written by S.Nagarajan
swami_48@yahoo.com


Date: 13 March 2019


GMT Time uploaded in London – 8-25 am am


Post No. 6188

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தவிர வேறொன்று இப்படிப்பட்ட ஆற்றலைத் தருமா, என்ன? (தராது என்று பொருள்)

Leave a comment

2 Comments

 1. Rama Nanjappa

   /  March 13, 2019

  இந்தப் பாடல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பில் (முதல் பதிப்பு-1955; மூன்றாம் பதிப்பு 2010 ) கீழ்கண்டவாறு இருக்கிறது:

  தேவ ரென்பவர் யாருமித் திரு நகர்க் கிறைவற்
  கேவல் செய்பவர் செய்கிலா தவரெவ ரென்னின்
  மூவர் தம்முளு மொருவனங் குழையனா முயலும்
  தாவின் மாதவ மல்லது பிறிதொன்று தகுமோ.

  அவர்கள் கொடுத்துள்ள விளக்கம்:
  இத்திரு நகர்க்கிறைவற்கு, தேவர் என்பவர் யாரும் ஏவல் செய்பவர் என்னின்,
  செய்கிலாதவர் எவர்? என இயைத்துரைக்க.
  மூவர் தம்முளும் ஒருவன் – மும்மூர்த்திகளுள் ஒருவனான பிரமன்
  உழையனா முயலும்- ஏவலனாய்ப் பணிசெய்வான்.
  (அங்ஙனமாயின்) தாவின் மாதவ மல்லது பிறிதொன்று தகுமோ- குற்றமில்லாத சிறந்த தவத்தை இயற்றுதலின்றி வேறொன்றை ஒருவன் செய்வது தக்கதாகுமோ (ஆகாது).

  இங்கு பிரம்மனை மட்டும் குறிப்பிட்ட பாடலைத் தேர்ந்தெடுத்தது

  இந்தப் பதிப்பு ஒரு குழுவினரின் கைவண்ணம். ( குழு அமைத்து குதிரை உருவாக்கிய கதை நமக்குத் தெரியும்). இங்கு பிரம்மனை மட்டும் குறிப்பிட்ட பாடலைத் தேர்ந்தெடுத்தது, இக்குழுவில் இருந்தவர்கள் சைவர்கள்/வைணவர்கள் என்பதால் போலும்! பிரம்மாவுக்குதான் பக்தர் படை இல்லையே!

  இதில் பாடபேதங்களையும் அவை இடம்பெற்ற மூலச் சுவடிகளையும் விரிவாகக் கொடுத்திருக்கிறார்கள். இவை மூலத்தைப் போல் ஒரு மடங்கு ஆகும். (ஆனால் அவை வறட்டுப் பண்டிதர்களுக்குத்தான் ஆகும் எனக்கருதி நான் புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டேன். அதனால் பாடபேதங்களைப் பற்றிச் சொல்ல இயலவில்லை.)

  இந்தப் பாடல் பற்றி டி.கே.சி. அவர்கள் ஏதாவது எழுதியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.

 2. Santhanam Nagarajan

   /  March 13, 2019

  பதிவிற்கு நன்றி! ‘குழு அமைத்து குதிரை உருவாக்கிய கதை’ என்று நீங்களே சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள். பல குழுக்கள் இப்படி பாரதி வரை அனைவரது பாடல்களையும் ‘பாழ்’ செய்திருப்பதை நாம் அறிவோம். மர்ரே கம்பெனி வெளியிட்ட பதிப்பில் உ.வே.சாமிநாதையர் பதிப்பைப் பின்பற்றியுள்ளனர். பாடல்:
  தேவர் என்பவர் யாரும், இத் திரு நகர் வீரர்க்கு
  ஏவல் செய்பவர்; செய்கிலாதவர் எவர் என்னின்
  மூவர் தம்முளும் இருவர்; என்றால், இனி முயலின்
  தா இல் மா தவம் அல்லது, பிறிது ஒன்று தகுமோ?
  ஆக சம்பந்தமில்லாத ஒரு சொல்லை வலிய நுழைத்துள்ளனர் ‘குழுவினர்’.
  டி.கே.சி மனம் போன படி பாடபேதங்களைத் தம் விருப்பத்திற்கு ஏற்றவாறு எடுப்பவர் எனப் பொங்கினார் பாரதிதாசன். “யாரடா இந்தக் கொம்பன்” என்ற அவரது பாடலைப் பார்க்கவும்.
  உ.வே.சா பதிப்பு அல்லது வை.மு.கோ. பதிப்பு நம்பகமானது. அவற்றைப் பின்பற்றுவதே சாலச் சிறந்தது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: