
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 8 April 2019
British Summer Time uploaded in London – 8519 AM
Post No. 6239
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
உத்தரமேரூர் கோவிலுக்குச் சென்று திரும்பிய பின்னர் அது பற்றிய அருமையான புத்தகம் கிடைத்தது. அடக் கடவுளே! இந்தப் புத்தகம் முன்னரே கிடைத்திருந்தால் ஒரு நாள் முழுதும் உத்தரமேரூருக்கு ஒதுக்கியிருக்கலாமே என்று வருத்தப் பட்டேன்.
உத்தரமேரூர் , செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கிறது. சென்னையிலிருந்து இரண்டரை மணி நேர்த்தில் செல்லலாம்.
சென்னையிலிருந்து லண்டனுக்குப் புறப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற தொல்பொருட்துறை நிபுணர் டக்டர் இரா. நாகசாமியைச் சந்தித்து (2-4-2019) ஆசிபெற்றேன். அவர் எழுதிய உத்தரமேரூர் என்ற புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அளித்தார். அத்துடன் மேலும் பல புத்தககங்களையும் அன்புடன் வாரி வழங்கினார். 2 கிலோ 3 கிலோ எடையுள்ள புஸ்தகங்களை அடுத்த முறை எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு ஐந்தாறு புஸ்தகங்களுடன் விமானம் ஏறினேன்.
அவர் புஸ்தகத்தில் எழுதிய விஷயங்களைவிட வேறு எவரும் எழுத முடியாது. ஆகையால் அந்தப் புத்தகத்தின் தலைப்புகளை மட்டும் தருகிறேன். அடுத்த முறை உத்தரமேரூருக்குச் செல்லுகையில் அதைப் படித்துவிட்டுச் செல்ல வேண்டும்.
உலகிலேயே ஜன நாயகம் பற்றிய முதல் குறிப்பு ரிக்வேதத்தில் சபை பற்றிய குறிப்பில் வருகிறது. இன்றுவரை அந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லை தமிழிலிலும் (அவை) இந்தியிலும் (லோக் சபா, ராஜ்ய சபா) பயன்படுத்தி வருகிறோம்.
இதற்கு அடுத்தபடியாக தேர்தல் பற்றிய தெளிவான, விரிவான ஜனநாயக முறை– குடவோலை முறை– சோழர் காலத்தியது. ஆயிரம் ஆண்டுப் பழமையான அக் கல்வெட்டு உத்தர மேரூர் கோவிலில் உளது. அதனால் அது நாடு முழுதும் புகழ் பெறுவிட்டது. யார் தேர்தலில் நிற்கலாம், நிற்கக்கூடாது என்ற முழுத் தகவலையும் டாக்டர் நாகசாமி விரிவாக எழுதியுள்ளார்.
ஊர்ச்சபா மண்டபத்தில் தேர்தல் கல்வெட்டு இருக்கிறது இப்பொழுது அது வைகுண்டப்பெருமாள் கோவிலுடன் சேர்ந்துவிட்டது
நந்தி வர்மன் (கி.பி 750) காலம் முதல் தற்காலம் வரை 100 கல்வெட்டுகளுக்கு மேல் கிடைக்கின்றன.
ஆண்டுதோறும் இங்கே மஹபாரதம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது
உத்தரமேர்ரூரில் உள்ள முக்கியக் கோவில்கள்
சுந்தரவரதர் கோவில்
வைகுண்டப் பெருமாள் கோவில்
கைலாசநாதர் கோவில்
கேதாரீஸ்வரர் கோவில்
பாலசுப்ரமண்யர் கோவில்
எல்லாக் கோவில்களிலும் கல்வெட்டுகள் உள்ளன.
1300 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்பட்ட கிராமம் இது. ஆயினும் அதற்கு முன்னரே கிராமம் மக்கள் வாழும் இடமாக இருந்தது.
டாக்டர் நாகசாமி புத்தகத்தில் உள்ள விவரங்களின் தலைப்புகள்:-
பத்துக்கும் மேலான கோவில் விவரங்கள்
தேர்தல் பற்றிய முழு கல்வெட்டு
பாபுக்கடி மருந்து கல்வெட்டு
ஆகம சாத்திர கல்வெட்டு
பேராசிரியர் நியமன கல்வெட்டுக
இலக்கணப் பள்ளிகள்
வேதப் பள்ளிகள்
வைரமேக தடாகம்
திருப்புலிவனம்
நிறைய படங்கள்
சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில் மூன்று தளங்களில் அமைந்துள்ளது. எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் அடித்தளத்தில் உள.
பாலசுப்ரமண்யர் கோவில்- எட்டாம் நூற்றாண்டு – அருணகிரிநதரால் பாடப்பெற்றது.
கைலாசநாதர் கோவில், சப்தமாதர் கோவில், கேதாரேச்வரர் கோவில்களிலும் கல்வெட்டுகள் உள.
அருமையான அப்சரஸ் ஓவியத்தின் வண்ணப்படமும் புத்தகத்தில் உள்ளது.
















–SUBHAM–