ஒரே கல்லில் 4 மாங்காய்! காஞ்சியில் கிடைக்கும்!! (Post No.6253)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 11 April 2019


British Summer Time uploaded in London – 13-39

Post No. 6253

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஒரு காரியம் செய்யப்போய் இரண்டாவது காரியமும் இனிதே நிறைவேறினாலோ ஒன்றை எதிர்பார்த்துப் போய் மற்றொன்றும் கிடைத்தாலோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லுவது தமிழ் வழக்கு.

காஞ்சிபுரம் சென்றால் ஒரே கல்லில் 4 மாங்காய் அடிக்கலாம். அதாவது ஒரு கோவிலுக்குள் நுழைந்தால் 4 திவ்ய தேச தலங்களைத் தரிசிக்கலாம். காஞ்சிபுரத்தை வலம் வந்தாலோ 14 திவ்ய தேசங்களைத் தரிசித்துவிடலாம்.

பெரிய காஞ்சிபுரம், பகுதியில் உலகலந்த பெருமாள் கோவில் உள்ளது. அதில் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் என்ற 4 பாடல் பெற்ற தலங்கள் அடக்கம்.

1.திருநீரகம்

மூலவர் இல்லை. உத்சவர்- ஜகதீஸ்வரர்; நின்ற திருக்கோலம்.

தாயார்- நிலமங்கைவல்லி

இருப்பிடம்- உலகளந்தப்பெருமாள் கோவிலின் வடபுறத்துப் பிரகாரம்.

பாடிய ஆழ்வார்- திருமங்கை ஆழ்வார்.

இரண்டாவது பிரகாரத்தில் அழகான 16 கால் மண்டபத்துக்குப் பின்னால் இருப்பது நீரகம் என்னும் தலம்.

2.திரு ஊரகம்

பெரிய காஞ்சிபுரத்தில் பஸ் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது.

மூலவர்- த்ரிவிக்ரமன்  – உலகளந்த பெருமாள்; நின்ற திருக்கோலம்.

உத்சவர்- பேரகத்தான்

தாயார்- அமுதவல்லி

பாடியவர் – திருமழிசை ஆழ்வார்

வாமன உருவம் த்ரிவிக்ரமனாக வளர்ந்து ஓங்கி உலகளந்தபோது, மஹாபலிச் சக்ரவர்த்தி, விஷ்ணுவின் காலடியில் கிடந்ததால் தரிசிக்க முடியவில்லை. அவரது வேண்டுகோளின்படி இறைவன் உலகளந்தவனாகக் காட்சிகொடுத்ததே இக்கோவில்.

உலகளந்த பெருமாளின் உயரம் 35 அடி. முழு அழகையும் காண அருகில் செல்ல வேண்டும். அர்ச்சகரும் விளக்கொளி மூலம் நமக்குக் காட்டி விளக்கமும் தருகிறார்.

3. திருக்காரகம்

மூன்றாவது பிரகாரத்தில் காரகம் என்னும் தலம் உளது

பெருமாளின் பெயர்- கருணாகரப் பெருமாள்; நின்ற திருக்கோலம்

தாயார்- பத்மாமணி நாச்சியார்.

பாடியவர்- திருமங்கை

4.திருக்கார்வானம்

கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் உளது.

மூலவர்- கார்வானர்; நின்ற திருக்கோலம்

தாயார்- தாமரையாள் (கமலவல்லி)

பாடியவர்- திருமங்கை

83 காஞ்சிபுரம் கோவில்கள்


Sri Ulakalantha Perumal Temple, Kanchipuram
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: