

WRITTEN by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 29 April 2019
British Summer Time uploaded in London – 13-09
Post No. 6324
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
நீதி, க்யாதி, ஜோதி – தேகாபிமானம், தேஷாபிமானம், தெய்வாபிமானம் – பாபாவின் உரை!
ச.நாகராஜன்
இடம் புட்டபர்த்தி -பிரசாந்தி நிலையம்.
21-7-2002 அன்று ஆரம்பிக்கவிருந்த பன்னாட்டு சேவா மாநாடுகளின் ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தன.
அதைத் தொடக்கி வைக்க வேண்டியவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா.
ஆனால் அவரால் பேச முடியாதபடி அவரது தாடைகள் வீங்கி இருந்தன. உணவு உண்ண முடியாது, பேசவும் முடியாது.
நிகழ்ச்சியின் பொறுப்பாளரான திரு சீனிவாசனுக்கு பெரும் கவலை வந்து விட்டது.
ஆனால் பாபாவோ மாநாடு ஏற்பாட்டைத் தொடருமாறு கூறி விட்டார்.
மாநாட்டில் அவரது உரை பிரமாதமாக அமைந்தது. அதில் இறுதியில் என்ன நடந்தது என்பதை அவர் விளக்கிக் கூறினார்.
கழுத்து வீக்கத்தினால் ஒரு சிறுவன் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். தாங்க முடியாத வலி. டாக்டரோ அது தீர குறைந்த பட்சம் 20 முதல் 25 நாட்கள் ஆகும் என்று கூறி விட்டார்.
அவனை அழைத்த பாபா, ‘சாயி உன்னுடன் இருக்கையில் நீ ஏன் அழுகிறாய்’ என்று கூறி விட்டு ஒரு இனிப்பை தன் அங்கை அசைவினால் வரவழைத்தார். அதை அந்தப் பையன் வாங்கி உண்டான்.
வலியை பாபா ஏற்றுக் கொண்டார்.
சீனிவாசன் பாபாவை எப்படி நீங்கள் உரை ஆற்றப் போகிறீர்கள் என்று கேட்ட போது “இது உடல் என்ற உணர்வு இருந்தால் தானே வலியை நான் உணரப் போகிறேன். இது உனது உடல். அனைத்து உடல்களுமே என்னுடையவையே” என்று அருளினார்.
அவரது உரையின் ஒரு பகுதி இதோ:
திரு சீனிவாசனை நோக்கி அவர் கூறியது :“I feel the pain if I think that this is My body. But this is not My body, it is yours.”
பின்னர் மாநாட்டில் கலந்து கொண்டோரை நோக்கி அவர் கூறினார்:
“All your Bodies are mine. Hence I take your suffering upon Myself. That is My duty. THIS is not My body, so I do not care for it. Not only now, at any point of time, I do not care for any suffering. I practise whatever I preach. That is why I say, My Life is My message. It is not possible for all to understand and realise My Divinity. I do not want to say it in public. I do not indulge in advertisement. All that is Mine is yours and vice-versa. I have no desires at all. All My desires are meant to give you happiness. Greatness does not lie in preaching, it lies in practice. A true acharya (preceptor) is one who practises and then preaches. That is what I am doing.”
பாபாவின் இந்தச் சொற்களிலிருந்து அவரது தெய்வீகத் தன்மையை நன்கு புரிந்து கொள்ளலாம்.

அன்று அவர் ஆற்றிய சொற்பொழிவில் கருத்துக்கள் சொல் ஜாலத்துடன் வெளி வந்தன; அனைவரையும் மகிழ்வித்தன.
“ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உடல் உண்டு. இயற்கை ஒரு கண்ணாடி. நீங்கள் இதில் பார்ப்பது உங்களது பிரதிபலிப்பையே அன்றி வேறல்ல. இன்று மனிதன் சுயநலத்துடனும் சுய தேவையுடனும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான். சுயநலம் சமூகத்தில் முற்றிலுமாகப் பரவி விட்டது. தேஹாபிமானம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தேஷாபிமானம் குறைந்து கொண்டே வருகிறது. தேஹாபிமானத்தை ஒருவன் விடும் வரையில் அவன் தெய்வாபிமானத்தை விருத்தி செய்து கொள்ள முடியாது.” என்றார் அவர்.
உரையின் ஆரம்பத்தில் பாபா மனித வாழ்க்கையின் அஸ்திவாரங்களை விளக்கினார்.
“மனித வாழ்க்கையானது சமதா (Samata -Euality),
சமைக்யதா(Samaikyata – Unity),
சௌப்ரத்ருத்வம் (Saubhratrutvam – Fraternity),
சௌஜன்யம் (Saujanyam – Nobility)
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வாழ்க்கை என்னும் மாளிகைக்கு இவையே அஸ்திவாரங்களாக அமைகின்றன. இதில் எந்த ஒன்று இல்லாத போனாலும் கூட வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். ஆகவே ஒவ்வொருவரும் இவற்றை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் மனிதத் தன்மை என்றால் என்ன என்பதை ஒரு மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும்.
சத்யம் நீதியை போஷிக்கிறது (Truth fosters Neethi – Morality)
தர்மம் க்யாதியைத் தருகிறது (Righteousness confers Kyati – Reputation)
தியாகமே ஜோதி ஆகிறது (Thyaga (sacrifice) is the Jyothi)
மானவ ஜாதி இந்த மூன்றின் சேர்க்கையாக இருக்கிறது. (Mana jathi – human race- is the combination of these three – neetim kyathi and Jyoti.”
தொடர்ந்து தனது உரையில் மனிதன் இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சேவாதள மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான சேவாதளத் தொண்டர்கள் பரவசமடைந்தனர்; பாபாவைத் தொழுதனர்.
நிகழ்ச்சி பெரும் வெற்றியுடன் முடிந்தது.
***
முழு உரையையும் ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் SATHYA SAI SPEAKS – Volume 35 உரை எண் 11ஐப் படிக்கலாம்.
நூல் கிடைக்குமிடம் : Sri Sathya Sai Books & Publications Trust Prasanthi Nilayam – 515 134, Ananthapuram District, Andhra Pradesh, India
xxxx

R.Nanjappa (@Nanjundasarma)
/ April 29, 2019பாபாவின் பேச்சு மிக எளிமையாக இருக்கும், சுந்தரத் தெலுங்கில் மிக இனிமையாக ஒலிக்கும். என்ன இருந்தாலும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கும்போது மூலத்தின் மஹிமை சிறிது குறைந்துதான் போய்விடுகிறது. ஆனாலும் அவர் உரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மிகக்குறைந்த விலையில் புத்தகமாக விற்றார்கள்- multiple volumes of Satya Sai Speaks.
இவர் உரைகளில் சில ‘ஈக்வேஷன்’ போல வார்த்தைப் பிரயோகம் இருக்கும். இங்கு நீதி, க்யாதி, ஜோதி, தேஹாபிமானம், தேசாபிமானம் போன்றவை அத்தகையவை. சுலமாக நினைவில் இருக்கும்.
ஒரு சமயம் ஒரு பெண்கள் கல்லூரியில் உரையாற்றினார். அப்போது ஒவ்வொரு இந்தியனுக்கும் நான்கு மாதாக்கள் உண்டு- சொந்த மாதா, கோ மாதா, பாரத மாதா, வேத மாதா என நான்கு மாதாக்கள். இங்கு கல்லூரியில் படிக்கும் அனைவரும் பின்னர் வாழ்க்கையில் மாதா என்ற நிலையை அடைவர். அதுதான் அவர்களுக்கான உன்னத நிலை. அதற்கேற்ற தகுதியைப் பெறும் முறையில் அவர்கள் கல்வி பயிலவேண்டும் என்று சொன்னார். இப்படி பெண்கள் கல்லூரியில் பெண்களிடையே துணிந்து பேசிய ஆச்சார்யர் பாபா ஒருவராகத்தான் இருக்கவேண்டும். இப்போது பெண்கள் தர்மம் என்பது பற்றி யாரும் அனேகமாகப் பேசுவதில்லை.
பாபாவின் ஜீவித காலத்தில் பலர் பல விதத்தில் அவர் மஹிமையை நேரடியாக உணர்ந்தனர். என்னுடன் ஹைதராபாதில் வேலை செய்தவன் (1996) ஒருவன் பம்பாய்க்காரன். பிள்ளைகள் படிப்பிற்காக குடும்பம் பம்பாயிலேயே இருந்தது. இவனுக்கு பம்பாய்க்கு மாற்றல் கிடைக்கவில்லை. லீவில் புட்டப்பருத்தி போனான், தரிசனத்திற்காக பந்தலில் கூட்டத்துடன் அமர்ந்திருந்தான். கையில் இட மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய சீட்டு வைத்திருந்தான். அங்கு மெல்ல நடந்துவந்த பாபா எல்லோரையும் பார்த்தவாறே இவன் இருந்த இடத்தைத் தாண்டிச் சென்றுவிட்டார். சிறிது தூரம் சென்றவர் , மெல்லத் திரும்பி வந்து, இவனுக்கு எதிரில் வந்து நின்றார். இவன் பின்னால் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தான். இவனைக் கை நீட்டி அழைத்து, ” நீ உன் ஊருக்குப் போவாய், ஏன் கவலைப் படுகிறாய்” என்று மராத்தியிலேயே சொன்னார். விபூதியும் தருவித்துக் கொடுத்தார். அவன் திரும்பிவந்து எனக்கும் அந்த விபூதியைக் கொடுத்தான். இது நடந்த ஓரிரு வாரங்களுக்குள் அவனுக்கு பம்பாய்க்கு மாற்றலாகிவிட்டது! சாதாரணமாக இத்தகைய மாற்றம் வர இன்னும் இரண்டு வருஷமாவது ஆகியிருக்கும். அதுவும் பம்பாய்க்கே எனச் சொல்ல முடியாது. இது சிறிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் அன்று கஷ்டத்தில் இருந்தவர்களுக்குத்தான் இதன் உண்மை நிலை புரியும்.
பாபாவின் அடிபணிந்து அருள் பெற்றவர்கள் பாக்யசாலிகள்.
Santhanam Nagarajan
/ April 30, 2019yes true. only those who have experienced his leelas only could UNDERSTAND Him. i am very fortunate enough to have his dharsan in 1965 itself. Then I become Seva dal convenor. I got first prize from His Divine Hands at Abbotsbury Madras. (Oratorial contest – statewide – first prize). Those days are golden days. marakka mudiyathai thirumbi varathavai
thanks for your additional information. s nagarajan