
WRITTEN by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 1 May 2019
British Summer Time uploaded in London – 8-28 AM
Post No. 6330
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரன் ஒரு பாண்டிய மன்னனே!
ச.நாகராஜன்
ஆதிமூலமே என்று கஜேந்திரன் அழைக்க அந்த கஜராஜனை முதலையின் வாயிலிருந்து பகவான் விஷ்ணு விடுவித்த கதை நாடறிந்த ஒன்று.
ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம் அப்படி அலறிய கஜராஜன் ஒரு பாண்டிய மன்னனே என்பதைத் தான்.
பாகவதத்தில் வரும் ஒரு சுவையான வரலாறு இது:
இந்திரத்யும்னன் என்பவன் பாண்டிய தேசத்து அரசனாக இருந்து செங்கோலோச்சிக் கொண்டிருந்தான்.
அவன் சிறந்த விஷ்ணு பக்தன். மிகுந்த புகழ் பெற்றவன்.
பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து வந்த அவன் ஒரு சமயம் மலைய பர்வதத்தில் தவம் செய்து கொண்டிருந்தான். ஆத்ம ஞானியான அவன் யாருடனும் பேசாமல் மௌன விரதத்தை மேற்கொண்டிருந்து பகவானைத் தியானித்துக் கொண்டிருந்தான்.
ஒரு சமயம் அகஸ்தியர் தன் சீடர் குழாமோடு அவன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
பெரிய முனிவரான அவரை வரவேற்காமல் இந்திரத்யும்னன் தன் தவத்தில் இருந்தான். அர்க்யபாத்திராதிகளால் அவரை பூஜிக்கவில்லை.
இதனால் கோபம் கொண்டார் அகஸ்தியர்.
“பெரியோர்களை வணங்காத இந்த அரசன் பிராம்மணனை அவமதித்து கஜம் போல இருந்தமையால் இவன் ஒரு கஜம் ஆகக் கடவது” என்று சபித்து விட்டார்.
அந்த அரசனே மறு ஜென்மத்தில் கஜேந்திரனாய்ப் பிறந்து முதலையால் பிடிக்கப்பட்டு விஷ்ணு பக்தி மேலிட ஹரியை தோத்திரம் செய்து அவரு அழைத்து, அவரால் காப்பாற்றப்பட்டான்.
விஷ்ணுவின் அருளால் அவன் மோட்சத்தையும் அடைந்தான்.
ஆக கஜேந்திர மோட்சம் என்று நாம் கேட்டு வரும் கதையில் வரும் கஜேந்திரன் இந்திரத்யும்னன் என்ற பாண்டிய ராஜனே!
பாண்டிய நாட்டிற்கும் இந்த வரலாறுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பது ஒரு சுவையான செய்தி தானே!
இந்த வரலாறு இன்னும் ஒரு அதிசய செய்தியைக் காலம் காலமாக வழங்கி வருகிறது.
அது பற்றிய ஒரு சுவையான வரலாறும் உண்டு.
ஒரு அரசன், விஷ்ணு நம்மிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என அறிஞர்களைக் கேட்க அவர்கள் சரியான விடை தெரியாமல் விழித்தனர்.
ஒவ்வொருவரும் ஒரு தூரத்தை உத்தேசமாகக் கணக்கிட்டுக் கூறினர். வானியல் அறிந்தோர் அந்த வானவியல் கணக்கையும் சொல்லிப் பார்த்தனர்.
மன்னன் திருப்தியுறவில்லை.
கடைசியில் பக்திமானான ஒரு சிறுவன் அரசனிடம் வந்தான். தனக்கு அந்தக் கேள்விக்கு விடை தெரியும் என்றான்.
அரசன் அவனைச் சொல்லச் சொல்லவே அவன் கூறினான்-
“பகவான் இருக்குமிடம் கூப்பிடு தூரமே!”
“ஆதிமூலமே என்று கஜேந்திரன் கூப்பிட்டவுடன் அவன் ஓடி வரவில்லையா? ஆகவே உள்ளன்புடன் பக்தியுடன் அவனை கூப்பிட்டால் அவன் அதைக் கேட்டு ஓடோடி வருவான். அவன் இருப்பது கூப்பிடு தூரத்தில் தான்”, என்றான் சிறுவன்.
இந்த பதிலால் மன்னனும் அவையினரும் திருப்தி அடைந்தனர்.
காலம் காலமாக ஒரு பெரிய உண்மையைச் சொல்லும் புண்ய கதை கஜேந்திர மோக்ஷம் ஆகும்!
****
Gajendra Moksha in Africa !! | Tamil and Vedas
https://tamilandvedas.com/2012/08/02/gajendra-moksha-in-africa/
2 Aug 2012 – Believe it or not it happened in Africa very recently. … The meaning of the word Gajendra Moksha is Gaja=elephant, Indra= the leader or the …

R.Nanjappa (@Nanjundasarma)
/ May 1, 2019இந்த கஜேந்த்ர மோக்ஷம் பற்றி இரு சிறிய செய்திகள்;
1. ஸ்ரீ த்யாகராஜஸ்வாமிகள் “க்ஷீர ஸாகர சயன” என்ற கீர்த்தனையில் ( தேவகாந்தாரி ராகம்) இந்த நிகழ்ச்ச்சியைச் சொல்கிறார்.
வாரண ராஜுனி ப்ரோவனு வேகமே
வச்சினதி வின்னானுரா.
யானையின் தலைவனை காப்பதற்காக நீ வேகமாக ஓடிவந்ததை நான் அறிவேன்.
இது பக்தர்களைக் காக்க பகவான் காட்டும் கருணையின் வேகத்தைக் குறிக்கிறது. ( நரசிம்ம அவதாரத்திலும் பகவான் சட்டென்று வந்துவிட்டார்,)
2. கஜேந்திரன் “ஆதிமூலமே” என்று ஒரே ஒருமுறைதான் கூப்பிட்டது. பகவான் ஓடிவந்துவிட்டார். இதை அருணகிரி நாதர் அருமையாகச் சொகிறார்:
மதசிகரி கதறிமுது முதலை கவர் தர நெடிய
மடு நடுவில் வெருவி ஒருவிசை ஆதி மூலமென
வரு கருணை வரதன்.
[சீர்பாத வகுப்பு ]
Tamil and Vedas
/ May 1, 2019You are an encyclopedia!
Santhanam Nagarajan
/ May 1, 2019comments are better than oirginal article. thanks nagarajan