
WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com
Date: 1 May 2019
British Summer Time uploaded in London – 6-59 am
Post No. 6329
Pictures shown here are taken by london swaminathan
This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நெரூருக்குச் சென்று சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. அது மார்ச் 27ம் தேதி (2019) நிறைவேறியது.
1957ல் வெளியான ‘ஜகத்குரு திவ்ய சரித்திரம்’ புத்தகத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் நடத்திய அற்புதங்களைப் படித்ததும், மாதம் தோறும் லண்டனில் நடக்கும் பஜனையில் சதாசிவரின் அற்புதமான பாடல்களைக் கேட்பதும் இதற்குக் காரணமாகும்.
நெருர் என்னும் கிராமம் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் ஒரு சிவன் கோவில், அதனருகில் பிரம்மேந்திராளின் ஜீவ சமாதி. அதாவது சமாதியின் கீழ் அவர் இன்னும் அப்படியே இருந்து அருள் புரிகிறார் என்பது பொருள்; ஏனெனில் உயிருடன் இருக்கும்போதே உடல் சமாதியில் இறக்கப்பட்டு மேலே அதிஷ்டானம் எழுப்பப்படும்.
அங்கே நாங்கள் காலை 11 மணி வாக்கில் சென்றதால் பூஜையையும் காண முடிந்தது. எனது சகோதரர் பேராசிரியர் சூரிய நாராயணன் உள்பட சுமார் 25 பேர் இருந்தோம். சமாதியை அடுத்த சிவன் கோவிலும் சிறியதுதான். இறுதியில் சர்க்கரைப் பொங்கல் விநியோகம்.
அங்குள்ள சிறிய கடையில் புஸ்தகங்கள், பாடல் தகடுகள் (CDs), படங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. இது வரை சதாசிவரின் அற்புதங்களை அறியாதோர் அறிய அவை உதவும்.
சதாசிவ பிரம்மேந்திரரின் ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் மிகவும் சிறியவை. பல கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் இடம்பெறுகின்றன. அவரது பாடல்கள் (பரம)ஹம்ஸ என்ற முத்திரையுடன் முடியும்.
சதாசிவ பிரம்மேந்திராள்
சதாசிவ பிரம்மேந்திராள் பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை இணைப்பையும் காஞ்சி பரமாசார்யாளின் விஜய இணைப்பையும் கீழே காண்க.
நீங்களும் அவருடைய பாடல்களைக் கச்சேரியிலோ பஜனைகளிலோ கேட்டிருப்பீர்கள்: இதோ சில முதல் வரிகள்:
பஜரே கோபாலம், மானஸ…………..
ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….
ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..
மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….
க்ரீடதி வனமாலி கோஷ்டே………….
பஜரே யதுநாதம் மானஸ…………..
ப்ரதிவாரம் மானஸ…………..
பிபரே ராம ரஸம்…………………
சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..
ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே
காயதி வனமாலி மதுரம்………………..
இன்னும் பல. இவைகள் அடங்கிய புஸ்தகங்கள் அதிஷ்டானத்தில் கிடைக்கும்




முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த …
https://tamilandvedas.com/…/முஸ்லீம்-பக்தருக்…
3 Mar 2014 – சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் … பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் …
6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/6-நாட்களில்-30-கோவ…
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.
–subham–







முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த …
https://tamilandvedas.com/…/முஸ்லீம்-பக்தருக்…
3 Mar 2014 – சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் … பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் …
6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/6-நாட்களில்-30-கோவ…
1.
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.









R.Nanjappa (@Nanjundasarma)
/ May 1, 2019ஸ்ரீ ஸ்ரீ ஸத்குரு சதாசிவ ப்ரஹ்மேந்த்ரரை நினைப்பதே பெரும் பாக்யமாகும். அந்த நினைவே நமது சித்தத்தை சுத்திசெய்யும், ஜீவிதத்தைப் புனிதமாக்கும்.
50 களில் இவரின் ஆராதனை மிகவும் பயபக்தியுடன் கொண்டாடப்படும். ஆராதனைக் கமிட்டியினர் ஊர் ஊராகச் சென்று நிதி வசூலிப்பர், மிகவும் சிறிய தொகையானாலும் ஏற்றுக்கொள்வர். அப்போது நெரூரில் அக்ரஹாரம் சிறந்திருந்தது. அகண்ட காவேரிக்கரை. மிகவும் சிரத்தையுடன் பரஹ்மேந்திரர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபடுவர். தமிழ் நாட்டில் 60களில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களினால் இந்த ஆராதனையையும் சரியாகக் கொண்டாட இயலாத ஒரு சூழ்நிலை உருவாகியது. அக்ரஹாரமும் நலிந்தது. அவர் சமாதியிலிருக்கும் பில்வ மரமும் பட்டுப்போய்விட்டது.
சதாசிவ ப்ரஹ்மேந்திரர் பற்றிப் பல நிகழ்ச்சிகள் செவிவழியாக வழங்கிவந்தன. .இவர் சரிதம் முதன்முதலாக ‘சதாசிவப் ப்ரமேந்திர சபை’ யோரால் எழுதி 1950 வருஷம் வெளியிடப்பட்டது. இன்று வரும் பல சிறு புத்தகங்களுக்கும் இதுதான் ஆதாரம்.
ஸ்ரீ சதாசிவப் ப்ரஹ்மேந்திரர் பரமஹம்ஸ நிலையிலிருந்த பரம ஞானி, உடல், உலக நினைவுகள் இல்லாமல் இருந்தவர். சில விஷயங்களில் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் இவரைப் போலவே சஞ்சரித்தார்! ப்ரஹ்மேந்திரரின் கீர்த்தனைகள் அத்வைத ஞானத்துடன் தெய்வ பக்தியையும் போற்றுவதாக இருக்கும். இவை சம்ப்ரதாய பஜனைகளில் தவராமல் இடம்பெறும். இவற்றில் சாமா ராகத்தில் அமைந்த “மானஸ சஞ்சரரே” பாடலும் சுருட்டி ராகத்தில் அமைந்த “ப்ருஹி முகுந்தேதி” பாடலும் மிகவும் ப்ரசித்தமானவை. ( இதை குறிஞ்சி ராகம் என்பவர்களும் உண்டு). இந்தப்பாடல் “சாவித்ரி” திரைப்படத்தில் எம்.எஸ். ஸுப்புலக்ஷ்மி பாடி மிகவும் பிரபலமானது. ( நாரதர் பாடுவதாக வரும்)
இந்தப் பாடலின் பின் ஒரு ரசமான நிகழ்ச்சியைச் சொல்வார்கள். பாடசாலையில் படிக்கும் நாட்களில் சதாசிவப் ப்ரம்மேந்திரர் சிவராமக்ருஷ்ணன் என்ற பெயர் தாங்கியிருந்தார். ஸ்ரீதர ஐயாவாள் எனப் புகழ்பெற்ற பெரியவரும் இவருடன் படித்தவரே. சிவராமக்ருஷ்ணனுக்கு தர்க்கத்தில் அதிக ஈடுபாடு, குருவின் இடத்திற்கு வருபவர்களையெல்லாம் தர்க்க வாதத்திற்கு இழுத்து பேசிக்கொண்டே இருப்பார். ஒரு நாள் குரு சற்றுப் பொறுமை இழந்து , ‘சிவராம க்ருஷ்ணா, நீ பேசமலே இருக்கமாட்டாயா’ என்றாராம். இந்த வார்த்தைகள் சட்டென்று உறைத்தன, அன்றிலிருந்து மௌனம் பூண்டார். பிறகு வித்யாப்பியாசம் எல்லாம் முடிந்து துறவியாகிச் சஞ்சரித்துவந்தார். ஒருமுறை சொந்த வூருருக்கு வந்தார். அங்கு பழைய சகபாடி ஸ்ரீதர ஐயாவாளையும் சந்தித்தார், ஆனால் ஏதும் பேசவில்லை. ” உன்னை வீண்பேச்சு பேசவேண்டாம் என்றுதானே குரு சொன்னார், நீ ஏன் தெய்வவிஷயமாகப் பேசக்கூடாது, அதை யார் தடைசெய்தது” என்று ஐயாவாள் கேட்டாராம். இதன் நியாயத்தை உணர்ந்த சதாசிவர் உடனே “ப்ரூஹி முகுந்தேதி, ரசனே ப்ரூஹி முகுந்தேதி” [ முகுந்தனே என்று சொல்,
நாவே, முகுந்தனே என்று சொல்” எனத் தொடங்கிப்பாடினார். பின்னர் வேறு பல கீர்த்தனங்களையும் பாடினார். பரம ஞானியின் அனுபவத்தில் எழுந்த கீர்த்தனைகளாதலால்] Where words come out from the depth of Truth] இவை விசேஷ சக்தியுடன் அமைந்திருக்கின்றன.பாடுபவர்களுக்கும் ஶ்ரேயஸ், கேட்பவர்களுக்கும் ஆனந்தம்.
ஸ்ரீ ப்ரஹ்மேந்த்ரர் இயற்றிய சிவ மானஸிக பூஜா கீர்த்தனங்களும் ஆத்ம வித்யா விலாசம் என்னும் 65 ஶ்லோகங்கள் கொண்ட சிறு நூலும் ஆஸ்திகர்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்றவை, இவற்றை 1958ம் வருஷம் காஞ்சி மடத்தில் ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்டது. பின்னர் பிற பதிப்புக்கள் பற்றித் தெரியவில்லை. சம்ஸ்க்ருதத்தில் இருப்பதாலும் சில க்ரந்த அக்ஷரங்களைக் கொண்டிருப்பதாலும் இவற்றைப் புரிந்துகொள்ள சரியான விளக்கம் தேவைப்படுகிறது. ஆனால் இவருடைய கீர்த்தனங்கள் எளியவையே. பக்தியும் ஞானமும் சங்கமித்தவை.
மஹான்களை நினைப்பதே சத்சங்கமாகும். அந்த நினைவில் தோய்ந்திருப்பதே கங்கா ஸ்னானமாகும். [த்யானமே வரமைன கங்கா ஸ்னானமுரா- ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள்.] தீபாவளியன்று அதிகாலையில் ஸ்ரீ சதசிவப் ப்ரஹ்மேந்திரரை நினைப்பது மிகவும் புண்யம் தரும் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மஹான்களின் மஹிமைக்கு எல்லையில்லை.
Tamil and Vedas
/ May 1, 2019Thanks for adding more interesting anecdotes and information.