
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 25 May 2019
British Summer Time uploaded in London – 7-39 AM
Post No. 6440
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
மநு நீதி நூல் – பகுதி 41
பிராமணனுக்கு கூடுதல் அபராதம்; ஏனையோருக்கு குறைந்த அபராதம்- மநு புரட்சி
மானவ தர்ம சாஸ்திரம் என்று அழக்கப்படும் மநு ஸ்ம்ருதியின் எட்டாவது அத்தியாயத்தை இன்று முடித்து விடுவோம். முதலில் மநு சொன்ன புரட்சிகர கருத்துக்களைப் (IN BULLET POINTS) ‘புல்லட் பாயிண்டு’களில் சொல்லி விடுகிறேன்
போன தடவை 8-300 ஸ்லோகம் வரை பார்த்தோம் 8-301 முதல் தொடர்வோம்.
1.மக்கள் செய்யும் நல்லது, கெட்டதுகளில் ஆறில் ஒரு பங்கு அரசனையே சாரும் 8-304
2.நாஸ்தீகம் பேசும் அரசனும், வரியை மட்டும் வாங்கிக்கொண்டு மக்களுக்கு பாதுகாப்பு தராத அரசனும் நரகத்தில் விழுவார்கள் 8-307, 8-309
3. சிறுவர்களையும் வயதானவர்களையும் மன்னிக்கும் அரசன் சுவர்க்கத்துக்குச் செல்வான் – 8-13
4. தப்பு நடந்த பின்னர் யார்- யார் மீது பழி போடுவார்கள்? 8-317
5. ரத்தினம் முதலிய விலையுயர்ந்த பொருட்களைத் திருடுபவனுக்கு மரணதண்டனை கொடு (கோவலனை ரத்தினம் திருடினான் என்று தவறாக எண்ணி பாண்டியன் மரணதண்டனை அளித்ததை சிலப்பதிகாரத்தில் காண்க) 8-321
6.பிராமணர்கள் நன்கு படித்த பின்னரும் தப்பு செய்தால் அவனுக்கு உச்சபட்ச தண்டனை கொடு. சூத்திரனுக்கு 8 பணம், வைஸ்யனுக்கு 16 பணம், க்ஷத்ரியனுக்கு 32 பணம், பிராமணனுக்கு 64, அல்லது 128 அல்லது அதைப் போல பன்மடங்கு அபராதம் போடு. 8-336, 8-337, 8-338
இந்த 8,16,32, 64 என்பதில் வேறு ஒரு சுவையான தகவலும் உளது. இந்தியாவின் ரூபாய் தசம முறைக்கு மாறும் வரை 4, 8, 16 அணா= 1 ரூபாய் என்றே இருந்தது. சிந்து- ஸரஸ்வதி நதி நாகரீகத்திலும் இதே எண் வரிசையில் எடைக் கற்கள் இருந்தன. இதுவும் ‘ஒரிஜினல்’ மநு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பதைக் காட்டும்
7.பிராஹ்மணர்கள் தங்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லலாம்; காண்க 8-348 to 8-350
8. யார் ஒருவன் கொல்லும் எண்ணத்துடன் வந்தாலும் அவனைக் கொல்வதில் தவறு இல்லை; 8-351
9. மாற்றான் மனைவியுடன் படுப்போனுக்கு கடும் தண்டனை கொடு 8-359. இசைவு கொடுக்கும் பெண்ணை நாய்க்கு இரையாகப் போடு.8-359, 8-371
10. அரசன், பிராஹ்மணர்களைக் கொல்லக்கூடாது. இது பாவங்களில் மிகப் பெரியது.
11. குருடர்கள், 70 வயதைத் தாண்டியவர்கள், அறிவு வாளர்ச்சி பெறாதோருக்கு வரி விலக்கு கொடு. 8-394
12. இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்; 8-402, 8-403
13.யோகிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இலவச படகுப் பயனம் கொடு; ஓடக்காசு வாங்காதே 8-407
14.அடிமைகளில் 7 வகை – –415
இவைகள் ஆங்கிலத்திலும் உளது. முழு விவரம் வேண்டுவோர் இணைப்புகளைப் படிக்கவும்
எட்டாவது அத்தியாயம் நிறைவு அடைகிறது.


















