
WRITTEN BY London Swaminathan
swami_48@yahoo.com
Date: 19 JULY 2019
British Summer Time uploaded in London – 8-04 am
Post No. 6650
Pictures are taken from various sources including Facebook, google,
Wikipedia. This is a non- commercial blog. ((posted by
swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

























–subham–
R.Nanjappa (@Nanjundasarma)
/ July 19, 2019மார்க்ஸீயவாதிகள், திராவிடங்கள், வெள்ளைக்கார விஷமிகள் -இவர்களை ரவுடிகள், அயோக்யர்கள் என்பது மிகவும் பொருத்தமே. அதற்கும் மேலே போய், இவர்களை தேசத்தின் துரோகிகள் எனலாம். எந்தவிஷயத்தையும் சரியாகப் படிக்காமல், முழு விஷயத்தையும் அறியாமல், உள்ளதை உள்ளபடி சொல்லாமல் சில சொல் அல்லது பகுதிகளை அவற்றின் சந்தர்ப்பத்தை மறைத்து, திரித்தும், குறைத்தும் பேசுகின்றனர். மேடைப்பேச்சில் வல்ல இவர்கள் பத்திரிகைகள், சினிமாத்துறை, டி.வி.சானல்கள் ஆகியவற்றையும் ஆக்ரமித்திருப்பதால், பொய்யையே திருப்பித் திருப்பிச் சொல்லி மெய்யென நம்பவைத்து விடுகின்றனர்.
பொதுவாக நம் மக்களுக்கு சாஸ்திர அறிவு குறைவு. படித்தவர்கள், பண்பாட்டை மதிப்பவர்கள் என்று சொல்பவர்களிலும் உள்ளபடி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. [ சோ ஒரு தொடரில் சில சம்ஸ்கிருத வாக்கியங்களை எழுதி, அவை சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் என்று சரடுவிட்டு, நம்மை எல்லாம் முட்டாளாக்கினார்! அது அர்த்தசாஸ்திரமல்ல என்று இங்கு யாருக்கும் தெரியவில்லை! யாரும் படித்ததில்லை, படித்தவர்களும் ஒப்பு நோக்கிப் பார்க்கவில்லை!] மரபு வழியில் வரும் முன்னணிப் பத்திரிகைகளும் இந்தமாதிரி விஷயங்களில் ஒரு தெளிவோ, விளக்கமோ தரும் வகையில் எதுவும் எழுதவில்லை. புராண உபன்யாஸகர்களோ, மதப் பேச்சாளர்களோகூட இந்த விஷயத்தில் எதுவும் பேசியதாகத் தெரியவில்லை.
இன்று மநுவின் பெயரில் வழங்கும் நூல் உண்மையான ஆதி நூல் அல்ல. இது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சில வங்காள பண்டிதர்களின் கைவரிசையினால் உருவானது. சமூகத்தில் பிளவுகளை வளர்த்து தங்கள் ஆட்சிக்கு வலுசேர்க்கும் சரக்காக இதை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர். அவர்களுக்குமுன் தேசீய சமஸ்தானங்களில் இது பரவலாக அறியப்படவில்லை. உண்மையான மநு நீதி நூல் பற்றி ஸ்ரீ க்ருபானந்த வாரியார் திருப்புகழ் விளக்க உரையில் ஆங்காங்கே சொல்லியிருக்கிறார்.
ஹிந்து மதத்தில் பெண்களுக்கு என்றுமே உயர்ந்த இடம் தான் இருந்திருக்கிறது. இது வேதத்திலும் உபனிஷத்திலும் தெளிவாகவே தெரிகிறது.. பால விவாகம் இல்லை, பெண்களும் வேதம் கற்கலாம் [ வேத ரிஷிகளில் சுமார் 30 பேர் பெண்கள்] , க்ஷத்திரியப் பெண்கள் சுயம்வரம் மூலம் மணம் புரிந்தனர், பிறருக்கும் தாங்கள் இஷ்டப்படியே மணமகனைத் தேர்வுசெய்யும் உரிமை இருந்தது போன்ற விஷயங்களை வேதத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். காலப்போக்கில் அன்னியர் படையெடுப்பினாலும் அதனால் தோன்றிய சமூக மாற்றங்களாலும் நமது தர்ம சாஸ்திரங்கள் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தன; காலப்போக்கில் இவை கட்டுமீறிப் போய்விட்டன. இது மநுவின் தவறல்ல.
இன்று பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாத நிலை உலகெங்கிலும் உருவாகிவிட்டது. ஆனால் எங்கும் பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பு இல்லை. கற்பழிப்பு, டீன் ஏஜிலேயே குழந்தை பெறுதல், திருமணமாகாத நிலையில் சேர்ந்து வாழ்தல், சௌகரியத்திற்கு சேர்தல் பிரிதல்- போன்றவை அமெரிக்காவிலிருந்து தொடங்கி உலகெங்கிலும் பரவி, பெருகி குடும்ப வாழ்க்கை என்பதே அருகிவருகிறது. இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் மநு பெண்களின் பாதுகாப்பு பற்றிச் சொன்னது பெண்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கே நன்மை பயப்பது என்பது தெரியவரும். இது தீர்க்க தரிசனம்.
50 வருஷங்களுக்குமுன் சகுந்தலா ராவ் சாஸ்திரி என்ற பெண் அறிஞர் நமது சாஸ்திரங்களில் காணும் பெண்களின் உண்மையான உயர்ந்த நிலையை விளக்கி ஆங்கிலத்தில் இரு புத்தகங்கள் எழுதினார். இவை மும்பை Bharatiya Vidya Bhavan னின் வெளியீடாக வந்தன. [Women In The Vedic Age, Women in The Sacred Laws]. இவை இன்று கிடைப்பதில்லை. இவற்றின் தமிழாக்கம் வந்ததாகத் தெரியவில்லை. இதைப்போன்ற பிற தமிழ்ப் புத்தகம் வந்ததாகவும் தெரியவில்லை.
இருட்டை நொந்து என்ன பயன்? விளக்கேற்ற வேண்டும் . இதை உங்கள் கட்டுரை செய்கிறது. நன்றி.
Tamil and Vedas
/ July 20, 2019THANKS FOR VERY USEFUL INFORMATION ABOUT TWO BOOKS. I WILL GET THEM FROM LIBRARIES IN LONDON. BHARATIYA VIDHYA BAHAVAN, LONDON KENDRA ALSO HAS A LIBRARY.