
Compiled by
London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 JULY 2019
British Summer Time uploaded in London – 17-41
Post No. 6703
Pictures are taken from various sources ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
விடாமுயற்சி, உற்சாகம் ,உழைப்பு பற்றிய 31 பொன்மொழிகள் இந்த மாதக் காலண்டரில் இடம்பெறுகின்றன.
முக்கிய பண்டிகை நாட்கள்- ஆகஸ்ட் 3-ஆடி பதினெட்டு; 4- ஆண்டாள் ஆடிப்பூரம், 5-நாகபஞ்சமி; 7-கருடாழ்வார் ஜெயந்தி; 9-வரலக்ஷ்மி விரதம்; 15-ருக் யஜூர் உபாகர்மா, ரக்ஷா பந்தன், சுதந்திர தினம்; 16-காயத்ரீ ஜபம்; 23- கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, வைகானஸ ஸ்ரீ ஜெயந்தி, 24- பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி
அமாவாசை- ஆகஸ்ட் 30. பௌர்ணமி- 15; ஏகாதஸி விரத நாட்கள்-11, 26

ஆகஸ்ட் 1 – வியாழக் கிழமை
சின்ன விஷயங்களால் பெரிய காரியங்கள் கெட்டுப் போகின்றன-
அல்பஸ்ய ஹேதோஹோ பஹுலஹ ப்ரயாஸஹ
XXX
ஆகஸ்ட் 2 – வெள்ளிக்கிழமை
சிறுகத் துவங்கு அதுவே பெரிதாகும் (சிறுதுளி பெருவெள்ளம்)
அல்பாரம்பஹ க்ஷேமகரஹ
XXX

ஆகஸ்ட் 3 – சனிக்கிழமை
கடும் உழைப்பு இல்லாமல் சரித்திரம் உருவானது இல்லை.
ஆயாஸம்விநேதிஹாஸஸ்ய நிர்மாணம் ந பவந்தி
XXX
ஆகஸ்ட் 4 – ஞாயிற்றுக் கிழமை
சொல் வீரனை செயல்வீரன் வென்றுவிடுகிறான்
உத்தானவீரஹ புருஷோ வாக்வீரானதிதிஷ்டதி
XXX

ஆகஸ்ட் 5 – திங்கட் கிழமை
ஒழிவறு நோயிற் சாவார்
ஊக்கமொன்றறியமாட்டார்- பாரதி பாடல்
ஆகஸ்ட் 6 – செவ்வாய்க் கிழமை
மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்!
தாய்த்திருநாட்டை தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?-பாரதி பாடல்
ஆகஸ்ட் 7 – புதன் கிழமை
அழுது கொன்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் நாங்கள்
அல்லமோ?- உயிர் வெல்லமோ – பாரதி பாடல்
ஆகஸ்ட் 8 – வியாழக் கிழமை
குருமணி!நின்னொரு ஒற்றவாள் கிழிப்ப
விடயறாத் தருமம் மேம்படு தெய்வத்து
இரையென மாய்வன் ஏற்றருள் புரிக- பாரதி பாடல்
ஆகஸ்ட் 9 – வெள்ளிக்கிழமை
எண்ணியதால் மட்டும் எதுவும் நடந்துவிடாது; முயற்சியால்தான் வெற்றி கிட்டும்.
உத்யமேனைவ ஸித்தயந்ஹி கார்யாணி ந மனோரதைஹி- பஞ்ச தந்திரம் 2-135, ஹிதோபதேசம் 1-36
xxx

ஆகஸ்ட் 10 – சனிக்கிழமை
கருமமே கண்ணாயிருத்தலே ஆடவருக்கு அடையாளம்
உத்யோகஹ புருஷலக்ஷணம்- சுபாஷிதரத்ன கண்ட மஞ்சுஷா
xxx
ஆகஸ்ட் 11 – ஞாயிற்றுக் கிழமை
சிங்கம் போன்ற வீரனிடத்திலேதான் லெட்சுமி உறைவாள்
உத்யோகினம் புருஷஸிம்ஹமுபைதி லக்ஷ்மீஹீ – பஞ்ச தந்திரம்1-365, ஹிதோபதேசம் 1-31
ஆகஸ்ட் 12 – திங்கட் கிழமை
சோம்பேறி மனது கலகத்தை உண்டாக்கும்.
கலஹம் குருதே நிருத்யமஹ
XXX
ஆகஸ்ட் 13 – செவ்வாய்க் கிழமை
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உள்ளவன் அடைய முடியாததும் உண்டோ?
கிம்கிம் ஸ்ரத்தாப்ரயத்னாப்யம் ஜகதீஹ ந ஸாத்யதே
XXXX
ஆகஸ்ட் 14 – புதன் கிழமை
சோம்பேறிகளின் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?
கிம் ஜீவிதேன புருஷஸ்ய நிருத்யமஸ்ய – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 3–966
XXX

ஆகஸ்ட் 15 – வியாழக் கிழமை
முயற்சி திருவினை ஆக்கும்- குறள் 616
பொருள்- முயற்சியால் ஒருவனுக்கு செல்வம் கிட்டும்
XXX
ஆகஸ்ட் 16 – வெள்ளிக்கிழமை
பெருமை முயற்சி தரும்- குறள் 611
முயற்சியால் புகழ் வரும்
XXX
ஆகஸ்ட் 17 – சனிக்கிழமை
இன்பம் விழையான் வினைவிழைவான் – குறள் 615
காரியத்தில் கண்ணாக உள்ளவன் இன்பத்தை நாட மாட்டான்
XXX
ஆகஸ்ட் 18 – ஞாயிற்றுக் கிழமை
மடியுளாள் மாமுகடி -குறள் 617
சோம்பல் உள்ளவனிடத்தில் மூதேவி வசிப்பாள்
XXX
ஆகஸ்ட் 19 – திங்கட் கிழமை
மடியிலான் தளுளாள் தாமரையினாள் — குறள் 617
முயற்சி உள்ளவனிடத்தில் லக்ஷ்மி வசிப்பாள்
XXX
ஆகஸ்ட் 20 – செவ்வாய்க் கிழமை
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் -குறள் 619
தெய்வ அருள் கிடைக்காமல் காரியம் வெற்றி அடையாவிட்டாலும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்
XXX
ஆகஸ்ட் 21 – புதன் கிழமை
ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர் -குறள் 620
விடாமுயற்சி உடையோர் விதியையும் விரட்டிவிட்டு வெற்றி காண்பர்
XXX

ஆகஸ்ட் 22 – வியாழக் கிழமை
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு – குறள் 610
வாமனாவதாரம்– த்ரிவிக்ரமானாக மாறி மூவுலகத்தையும் அளந்து திருமால் பெற்ற உலகம் அனைத்தும், சோம்பல் இல்லாத ஆட்சியாளனுக்குக் கிடைக்கும்
XXX
ஆகஸ்ட் 23 – வெள்ளிக்கிழமை
கடமைப்பற்றுள்ளவனுக்கு தொடுவானமும் தொலைவில்லை
கிம்தூரம் வ்யவஸாயினாம் – சாணக்கிய நீதி 3-39, பஞ்ச தந்திரம் 2-56, ஹிதோபதேசம் 2-13
Xxx
அட!மண்ணில் தெரியுது வானம் அது நம் கைவசப்படலாகாதோ?–பாரதி பாடல்
xxx

ஆகஸ்ட் 24 – சனிக்கிழமை
சாகத் துணியிற் சமுத்திரமெம்மட்டு
மாயையே—பாரதி பாடல்
xxx
ஆகஸ்ட் 25 – ஞாயிற்றுக் கிழமை
பொய், கயமை, சினம், சோம்பர், கவலை, மயல்,
வீண்விருப்பம்,புழுக்கம், அச்சம்,
ஐயமெனும்பேயையெல்லாம் ஞானமென்னும்
வாளாலே அறுத்துத் தள்ளி—பாரதி பாடல்
xxxx
ஆகஸ்ட் 26 – திங்கட் கிழமை
விழித்துக்கொண்டவன் பெறுவான்; தூங்கியவன் தாழ்வான்.
ஜாக்ரதா ப்ராப்யதே ஸர்வம் ஸ்வபதா ஹீயதே அகிலம்
xxx
ஆகஸ்ட் 27 – செவ்வாய்க் கிழமை
ஊக்கமுடையோன் அடைய முடியாததையும் அடைகிறான் -கதா சரித் சாகரம்
வ்யவசாயீ ஹி துஷ்ப்ராபம ப்ராப்ரோதி
Xxx
ஆகஸ்ட் 28 – புதன் கிழமை
தாளாளர்க்குண்டோ தவறு- நாலடியார்
முயற்சியுடையாருக்கு தோல்வியும் உண்டோ!
xxx
ஆகஸ்ட் 29 – வியாழக் கிழமை
கைவினை கரவேல்- ஆத்திச்சூடி
கைத்தொழிலை செய்யாமல் இராதே
xxx
ஆகஸ்ட் 30- வெள்ளிக்கிழமை
ஊக்கமுடைமை ஆக்கத்திற்கழகு- கொன்றைவேந்தன்
xxx
ஆகஸ்ட் 31- சனிக்கிழமை
அசையாது நிற்பதாம் ஆண்மை- நாலடியார்
Xxx
Bonus
ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக!-பாரதி பாடல்
