
Written by London Swaminthan
swami_48@yahoo.com
Date: 31 JULY 2019
British Summer Time uploaded in London – 8-30 am
Post No. 6706
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))















கட்டுரை எழுதி முடித்தவுடன் எழுந்த ஞானோதயம்– குருட்டு பக்தி என்பதைவிட குரு பக்தி என்ற வார்த்தையே பொருத்தமுடைத்து!
–xxx–
TAGS– பாதிரியார், சொர்க்கம், வழி, கிறிஸ்தவ ஜாதிகள்
R.Nanjappa (@Nanjundasarma)
/ July 31, 2019கடைசி பத்தியில் ஹிந்துக் கோஷ்டிகளிடையே நிலவும் நிலை நன்கு
விளக்கப்பட்டு விட்டது! இறைமைப் பொருள் ( theology), தத்துவம் (philosophy) புராணம் ஆகிய அடிப்படைகளில் இவர்கள் மோதிக்கொள்கிறார்கள். இதைத்தவிர மடம், குருமார்கள் அவர்கள் சார்ந்த வாதப்பிரதி வாதங்கள் வேறு.
ஆனாலும் ஒன்று. நாயன்மார் பாடல்களில் விஷ்ணு நிந்தை இல்லை. விஷ்ணுவும் பிரம்மாவும் சிவபெருமானின் அடிமுடி தேடிய வரலாறு மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். ஆனால் பிரம்மாவையோ, விஷ்ணுவையோ “மட்டம் தட்டிப்” பேசுவது இல்லை. உ.ம். திருஞான சம்பந்தர் பாடல்களில் இவர்களை மிகவும் கவுரவமாகவே குறிப்பிடுகிறார்:
நாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும்
வெல்பறவைக்கொடி மாலும் மற்றை விரைமலர் மேலயனும்
நெடியான் நீள் தாமரை மேலயனும்
மண்டான் முழுதும் உண்ட மாலும் மலர்மிசை மேலயனும்
ஆற்றலுடைய அரியும் பிரமனும்
திருவின் நாயகனாய மாலொடு செய்ய மாமலர்ச்செல்வன்
மாணாயுலகங்கொண்ட மாலும் மறையோனும்
வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையமுழுதுண்ட மாலும்
வென்றி மாமலரோனும் விரிகடல் துயின்றவன் தானும்
பூமகனும் அவனைப் பயந்த புயலார் நிறத்தானும்
தாருரு தாமரை மேலயனும் தரணி யளந்தானும்……
நன்மையான் நாரணனும் நான்முகனும்….
வரைகுடையா மழை தாங்கினானும் வளர் போதின் கண்
புரைகடிந்தோங்கிய நான்முகத்தான்…..
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லிகொள் தாமரைம் மிசையவன்….
என்று இப்படி திருமால், பிரம்மா ஆகியவர்களுக்கு உரிய பெருமைகளைச் சொல்லியே பாடுகின்றார், திருமாலுக்கு இவர்கொடுக்கும் அடைமொழிகளைக் கொண்டே பாகவதத்தில் வரும் கிருஷ்ணர் பெருமைகளைச் சொல்லிவிடலாம். இத்தகைய பண்பை ஆழ்வார் பாடல்களில் காணமுடியாது.
ஆனால், சைவம், வைணவம், சாக்தம் போன்ற எல்லைகளையும், பலவித தத்துவக் கோட்பாடுகளயும் கடந்து, முருகனை வழிபடு தெய்வமாகக்கொண்டும் பிற தெய்வங்களையும் மதித்துப் போற்றிப் பாடிய அருணகிரி நாதர் ஒரு முன்மாதிரிதான். வேத மந்திர சொரூபா நமோ நமோ என்று முருகனைப் பாடிய அதே வாயால் “சஹஸ்ர நாம கோபாலா” என்று திருமாலைப் பாடிய பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்?