மும்முடிப் பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்! (Post No.6740)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com

n

 Date:7AUGUST 2019  


British Summer Time uploaded in London – 9-46 am

Post No. 6740

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கொங்குமண்டல சதகம்

மும்முடிப் பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்!

ச.நாகராஜன்

சோழர்களில் மூன்றாம் ராஜராஜன் என்பவன் திரிபுவன சக்கரவர்த்தி என்ற விருதுடன் கி.பி.1216ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்தான். பல்லவ வமிசத்தைச் சேர்ந்த பலவானாக அந்தக் காலத்தில் “அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருங்சிங்கன் என்பான் திகழ்ந்தான். இவன் சோழனான மூன்றாம் ராஜராஜனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றான்.

ஸ்ரீரங்கத்திற்கு வடக்கே பத்து மைல் தூரத்தில் உள்ள கண்ணனூர் என்ற ஊரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு காவிரியின் வட பகுதியை அப்போது ஆண்டு வந்த மூன்றாம் ராஜராஜனின் மாமனான போஜள வீரசிம்ம தேவன் என்பவன் கொங்கு நாட்டுப் படைகளையும் திரட்டிச் சென்று கோப்பெருங்சிங்கன் தேசத்தை அழித்து வருக என்று தன் சேனா வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவனது சேனாவீரர்கள் சென்று பல்லவ நாட்டை நாசமாக்கி விட்டு வெற்றிகரமாகத் திரும்பினர். இந்தச் செய்தியை திருவயிந்திபுரத்தில் உள்ள தெய்வநாயகப் பெருமாள் கோவில் பிரகாரத்து மேலைச் சுவரில் எழுதப்பட்டிருக்கும் சிலாசாசனம் தெரிவிக்கிறது.

அந்தச் சேனாவீரர்களில் லிங்கயன் என்பவன் சென்று வெற்றி பெற்றதால் அவனுக்கு மும்முடிப் பல்லவராயன் என்ற விருதுப் பட்டம் வழங்கப்பட்டது. அவன் (சிங்கை) காங்கேயத்தை உறைவிடமாகக் கொண்டான். tamilandvedas.com, swamiindology.blogspot.com

தற்காலத்தில் மும்முடிப் பல்லவராயன் பட்டத்தை வகித்து வரக் கூடியவர் கொங்கு வேளாளர்களில் செங்கண்ணக் குலத் தலைவர் ஆவார். அவர்களுடைய விருதுப் பாட்டுகள் மேலே சொன்ன சரிதத்தை விளக்குகிறது.

“போரிட்ட பல்லவன் றேசத்தை வெட்டியே

    பொன்மகுடம் நீ படைத்தாய்

செங்கதிரிப் பரிதிகுல மகராஜ ராஜனாந்

     திரிபுவன சக்கிரவர்த்தி

சித்தமகிழ்தளகர்த்தர் லிங்கயப்பல்லவன்”

என்ற மேற்கோள் பாட்டால் இது தெரிய வருகிறது.

இந்த சரிதத்தைப் பெருமிதத்துடன் கொங்குமண்டல சதகம் தனது 72ஆம் பாடலில் விளக்குகிறது.

பாடல் இதோ:

திரிபுவ னச்சக்கிர வர்த்தி வளவன்றன் சிந்தைகொளுஞ்

செருவிற் படையைச் செலுத்திச் சயங்கொ டிறலறிந்து

விருதுப் பெயர்மும் முடிப்பல் லவவடல் வீரனென்றே

வருபட்டம் பெற்றவன் வாழ்சிங்கை யுங்கொங்கு மண்டலமேtamilandvedas.com, swamiindology.blogspot.com

பாடலின் பொருள் : திரிபுவனச் சக்கரவர்த்தி என்னும் சோழவேந்தன் மேற்கொண்டுள்ள போரில் சேனாதிபதியாகப் படையைச் செலுத்தி வெற்றி கொண்டு திரும்பியமையால் மும்முடிப் பல்லவன் என்ற பட்டத்தைப் பெற்றவன் வாழ்கின்ற சிங்கை (காங்கேய) நகரமும் கொங்கு மண்டலமே என்பதாம்.

****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: