துலுக்கப் படைகளை விரட்டிய அனுமன் பாடல்! (Post No.6758)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 10 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  17-5
6

Post No. 6758

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

அருணாசலக் கவிராயர் (1711-1779) வாழ்க்கை பல விநோதச் செய்திகள் அடங்கியது. அதில் ஒன்று அவர் அனுமன் மீது பாடல் பாடி தூள் கிளப்பியது ஆகும். இதைக் கேட்ட படையினர், வீராவேசத்துடன் போராடி துலுக்கப் படைகளை விரட்டி அடித்தனர். இதோ 1945ம் ஆண்டில் யோகி சுத்தானாந்த பாரதியார் எழுதிய நூலில் இருந்து ஒரு காட்சி.

இவர் சங்கீத மும்முர்த்திகள் காலத்துக்கும் முந்தியவர். ராமனின் புகழ்பாடும் ராம நாடகக் கீர்த்தனை பாடி ராம பக்தர்களின் இருதயத்தில்  அழியா இடம்பெற்றவர். ஏன் பள்ளி கொண்டீர் ஐயா என்று திருவரங்க நாதன் மீது பாடல் பாடியவர். கம்பனைப் போலவே தன்னுடைய நூலையும் அதே கோவிலில் –ஸ்ரீரங்கம் கோவிலில் –அரங்கேற்றியவர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

தந்தை பெயர்-  நல்ல தம்பிப் பிள்ளை, தாயார் பெயர் வள்ளியம்மை, மனைவி பெயர் மீனாட்சி. பிறப்பிடம் தில்லையாடி, வாழ்ந்த ஆண்டுகள் 67.

Leave a comment

1 Comment

  1. இந்தக் கட்டுரையில் ஒரு பெரிய ரகசியம் அடங்கியிருக்கிறது. பகையை வெல்வதற்கு ஹனுமானைத் துணையாகக் கொள்ளவேண்டும். இது மேலும் இரண்டு சரித்திர நிகழ்ச்சிகளால் தெரியவருகிறது. துலுக்கர் ஆதிக்கமும் அட்டூழியமும் பரவிய 14ம் நூற்றாண்டு வாக்கில் விஜய நகர ஸாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு, துலுக்கர் தென்னாட்டுக்கு வருவது தடுக்கப்பட்டது. அப்போதே நமது புராதன மத ஆசாரங்கள் பெருமளவுக்கு கைவிடப்பட்டன. குறிப்பாக பாமர மக்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. இந்தச் சமயத்தில் ஸ்ரீ வியாச ராயர் தென்னிந்தியா முழுவதும் 732 ஹனுமான் விக்ரஹங்களை நிறுவி மக்களை வழிபடச்செய்தார். இந்த விக்ரஹங்கள் கல்லில் வடித்தவை. இவற்றில் ஹனுமார் வலது கை தூக்கி, உள்ளங்கை பக்தர்களை நோக்கியவாறு இருக்கும், இடது கையில் ஒரு புஷ்பம் இருக்கும். வால் உடலைச் சுற்றி, தலையைச் சுற்றி இடது பக்கம் தொங்கும்; அதன் நுனியில் ஒரு சிறிய மணி கட்டியிருக்கும். தமிழ் நாட்டிலும் இதுவரை சுமார் 30 விக்ரஹங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது,
    அதன் பிறகு சிவாஜி மஹாராஜ் காலத்தில் மஹாராஷ்டிரத்தில் ஸமர்த்த ராமதாசர் துலுக்கர் ஆதிக்கத்தை எதிர்த்துச் செயல்பட்டார். இதற்கும் ஹனுமான் தான் கைகொடுத்தார். அப்போது அந்தப் பகுதி நவாப்புக்கள் புதிய தாக ஹிந்துக் கோயில்கள் கட்டுவதையோ, பழைய கோவில்களைப் புதுப்பிப்பதையோ தடைசெய்திருந்தனர். ராமதாசர் பல இடங்களில் பஜனை மடங்களை நிறுவி அங்கு ஹனுமான் விக்ரஹங்களை வைத்து பூஜைகளைத் தொடங்கி, மக்களை ஒன்றுகூட்டினார். பின்னர் சிவாஜிக்கும் வழிகாட்டி ஸ்வராஜ்யத்தை ஸ்தாபித்து முகலாயர்கள் கொட்டத்தை அடக்கினார். இப்படி இரு சரித்திர நிகழ்ச்சிகளில் ஹனுமார் துலுக்கர்களிடமிருந்து ஹிந்துக்களைக் காப்பாற்றினார்.
    வட இந்தியாவில் பல முஸ்லிம்கள் ( சிலர் நவாப் குடும்பத்தினர் கூட) ஹனுமாரை வழிபட்டனர். இத்தகைய சில நிகழ்ச்சிகளை ஸ்ரீ ஸ்வாமினாத ஆத்ரேயர் எழுதிய “ஜய ஜய ஹனுமான்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
    ஹிந்து மதத்தில் கூட்டுவழிபாடு இல்லை. கோவில்களில் கும்பல் இருந்தாலும், அவரவரும் தனித் தனியேதான் வழிபடுகின்றனர். இங்கு வியாசராயர், ராமதாசர் செய்த முயற்சி மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஹனுமான் முன்னிலையில் வழிபடச் செய்ததே யாகும். இந்தக் கூட்டுப் பிரார்த்தனையின் பலன் தான் துலுக்கர்கள் ஆதிக்கம் பரவுவது தடைபட்டது!
    இன்றும் நமது நாடு அன்னிய மத தீவிரவாதிகளாலும் மத மாற்றும் முயற்சிகளாலும் துன்பத்திற்குள்ளாகியிருக்கிறது. இதிலிருந்து மீள நாம் மீண்டும் கூட்டாக ஹனுமாரை வழிபடவேண்டும்.
    புத்திர் பலம் யஶோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
    அஜாட்யம் வாக் படுத்வஞ்ச ஹனுமத் ஸமரணாத் பவேத்.
    தடுமாற்றம், தோல்வி என்பது ஹனுமார் அகராதியில் இல்லை!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: