ஆகஸ்ட் 15ம் அரவிந்த மகரிஷியும்! (Post No.6778)

Written by  London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 14 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  18-12

Post No. 6778

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

அரவிந்த மஹரிஷி பிறந்த தினம் ஆகஸ்ட் 15.

ஸ்ரீ அராவிந்த கோஷ் 15-8-1872 – 5-12-1950)

இந்திய சுதந்திர தினத்துக்கு இரண்டு சிறப்பு.

சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம்

இந்திய தத்துவ ஞானி, யோகி, கவிஞர், வேத விற்பன்னர்,சுதந்திரப் போராட்ட வீரர்,

பத்திரிகையாளர், புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரம ஸ்தாபகர்.

அரவிந்த மகரிஷி பற்றி பாரதிதாசன் கவிதை சக்தி மாலரில் வெளியானதை இணைத்துள்ளேன்

Tags அரவிந்தர், ஆஸ்ரமம், புதுச்சேரி, பாரதிதாசன் கவிதை, ஆரோவில், அன்னை

–subham–
Leave a comment

2 Comments

 1. இந்தியாவின் சுதந்திரப் பொன்னாளில் ஸ்ரீ அரவிந்தரை நினைப்பது புண்ணியமாகும்.
  ஸ்ரீ அரவிந்தர் சுதந்திரத்திற்கு ஆற்றிய பணியை பலரும் அறியவில்லை. சுதந்திர இந்தியாவின் அரசும் அதை மறைத்துவிட்டது.
  இங்கிலாந்தில் படிப்பை முடித்து 1893ல் தாயகம் திரும்பிய ஸ்ரீ அரவிந்தர் அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தாலும் பரோடா ஸமஸ்தானத்தில் வேலையில் இருந்ததால் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. அனல் பொறிக்கும் அவர் எழுத்துக்களைப் பிரசுரிக்கத் தயங்கினர். ஆனால் வங்காளப் பிரிவினையின் சமயம் அவர் வெளியே வந்து, 1903 முதல் 1910 வரை நேரடி அரசியலில் ஈடுபட்டு தன் எழுத்தாலும் பேச்சாலும் ஒரு கிளர்ச்சியைத் தோற்றுவித்து, படித்த இளைஞர்களிடையேயும் தேசீய எழுச்சியை ஊட்டினார். தேசீயத் தலைவர்களில் முதல் இடத்தைப் பெற்றார். திலகருடன் சேர்ந்து சூரத் காங்கிரசில் மிதவாத கோஷ்டியை மிரளச்செய்தார்.

  அரசினருக்கு கோரிக்கை விடுத்து அவர்கள் சலுகையை எதிர்பார்க்கும் அன்றைய காங்கிரஸ் தலைவர்களின் போக்கை ஸ்ரீ அரவிந்தர் எதிர்த்தார். துணிந்து செயல்படாதவர்களை ஆங்கிலேயர் மதிக்க மாட்டார்கள் என்பதை அவர் அறிவார்.
  வங்காளப் பிரிவினையின் போது (1905) நடந்த கிளர்ச்சியில் ஸ்ரீ அரவிந்தர் வகுத்துத் தந்த ஆக்க பூர்வமான முயற்சியின் முக்கிய அம்சங்கள்:

  – பூர்ண சுயராஜ்யம் [ ஆங்கில ஆதிபத்தியத்திற்கு உட்பட்ட டொமினியன் அந்தஸ்து அல்ல. இதை காங்கிரஸ் 25 ஆண்டுகள் கழித்து 1929ல்தான் ஏற்றுக்கொண்டது!]
  – ஆங்கில அரசுடன் ஒத்துழையாமை. Passive Resistance or Non-cooperation
  – அன்னிய நாட்டுப்பொருள்களை-குறிப்பாக இங்கிலாந்து நாட்டுப் பொருள்களை பகிஷ்கரித்தல்
  – சுதேசித் தொழில்களையும் பொருட்களையும் ஊக்குவித்தல்
  – ஆங்கில அரசு நிறுவிய கோர்ட்டுகளை நாடாமல் நம் வழக்குகளை நாமே தீர்த்துக்கொள்ளுதல்
  -ஆங்கிலேயர் புகுத்திய கல்விமுறையை பகிஷ்கரித்து தேசீயக் கல்வியை ஊக்குவித்தல்
  – மத்திய , படித்த வர்கத்தினரையேயன்றி. நலிந்தோர் நலனையும் பாதுகாத்து அவர்களையும் முன்னேற்றுதல்.

  இவை காந்திஜி வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீ அரவிந்தர் வகுத்துத் தந்த பாதை! Swaraj, Swadeshi, Boycott, Non-Cooperation, National courts and system of adjudicating disputes, national education, uplift of the down-trodden- these are the basic elements of Sri Aurobindo’s programme. பின்னாட்களில் காந்திஜி இவற்றையே பின்பற்றினார். ஆனால் இவை ஸ்ரீ அரவிந்தர் வகுத்துத் தந்த பாதை என்பதை காந்திஜி எங்கும் சொல்லவில்லை!

  ஸ்ரீ அரவிந்தர் சாதாரண அரசியல் வாதி அல்ல. அவருடைய அரசியல் இந்திய ஆன்மீகத்தின் ஒரு அங்கமே.
  “I entered into political action and continued it from 1903 to 1910 with one aim and one alone- to get into the mind of the people a settled will for freedom and the necessity of a struggle to achieve it in place of the futile ambling Congress methods.”..

  “I hold that India having a spirit of her own and a governing temperament proper to her own civilisation, should in politics as in everything else strike out her own original path and not stumble in the wake of Europe.”

  “I am identifying myself with only one kind of work or propaganda as regards India- the endeavour to reconstitute her cultural, social and economic life within larger and freer lines than the past on a spiritual basis.”
  Sanatana Dharma- that is nationalism for us என்று 1910லேயே அறிவித்தார்!
  ஸ்ரீ அரவிந்தருடைய எழுத்துக்கள் எழுச்சியூட்டுபவை. அதைக்கண்டு ஆங்கிலேய அரசு மிரண்டது. மூன்று முறை அவரைக் கைது செய்து அவரை அடக்க முயன்றது. அவர்களால் முடியவில்லை. ஆங்கிலேய சாம்ராஜ்யத்தில் இன்று மிகப்பெரிய எதிராளி அரவிந்த கோஷ்தான் என வைசிராய் அறிவித்தார்!

  காந்திஜியின் முயற்சிகள் அவ்வளவாக வெற்றிபெறவில்லை. 1920ல் பம்பாய் காங்கிரஸ் தலைவர் பாப்டிஸ்டாவும் நாகபுரி காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.மூஞ்சேயும் ஸ்ரீ அரவிந்தரை மீண்டும் அரசியலுக்கு வருமாறும் நாகபுரி காங்கிரஸுக்கு தலைமை ஏற்குமாறும் கோரினர்.ஆனால் அதை ஸ்ரீ அரவிந்தர் ஏற்கவில்லை. 1925-26 வாக்கில் காந்திஜியே தன் இயலாமையை உணர்ந்தார். தன் மகன் தேவதாஸை அரவிந்தரிடம் அனுப்பி அவரை மீண்டும் அரசியலுக்கு வருமாறு கோரினார். அதையும் ஸ்ரீ அரவிந்தர் ஏற்கவில்லை.

  இரண்டாவது உலகப்போர் தொடங்கிய நிலையில் காந்திஜி ஆகஸ்டு புரட்சியில் ஈடுபட்டதை ஸ்ரீ அரவிந்தர் ஏற்கவில்லை. ஹிட்லர் ஒரு அசுரன், அவன் மனித குலம் முழுமைக்குமே கேடுவிளைவிப்பவன், அவனை எதிர்த்து போரில் ஈடுபட்ட இங்கிலாந்து தனக்காக மட்டுமின்றி மனித குலத்திற்காகவும் போராடுகிறது என்பது ஸ்ரீ அரவிந்தர் கருத்து. அதுசமயம் இந்தியாவுக்கு வந்த கிரிப்ஸ் தூதுகோஷ்டியுடன் ஒத்துழைக்கவேண்டும், இதுவே பிரிவினையைத் தடுக்க இறுதி உபாயம் என்று ஸ்ரீ அரவிந்தர் கருதினார். அதனால் சென்னையில் பிரபல வக்கீலான துரைசாமி ஐயரை தன் சார்பில் காங்கிரஸ் தலைவர்களுக்கு செய்தியுடன் அனுப்பினார். ஆனால் நேரு போன்றவர்கள் அவரை அவமதித்தனர். ஸ்ரீ அரவிந்தர் யோகத்தை விட்டு அரசியலில் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்று கிண்டல் செய்தனர். ஆங்கிலேயர் காங்கிரஸாருக்கு பாடம் கற்பித்தனர். மூன்று- நான்கு மாதங்களுக்குள் ஆகஸ்டு புரட்சியை அடியோடு அடக்கினர். தலைவர் அனைவரையும் ஜெயிலில் போட்டனர். ஜின்னாவுக்கு ஆதரவு அளித்து பாகிஸ்தான் பிரிவினை வாதத்தை விசுவரூபமெடுக்க வைத்தனர். பின்னர் காங்கிரஸாலோ- காந்திஜியாலோ ஏதும் செய்ய இயலவில்லை.

  ஸ்ரீ அரவிந்தர் 1910 ஏப்ரலில் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டும், அரசியலை விட்டும் விலகினார். ஆனால் இந்தியாவை தன் மனதிலிருந்து நீக்கவில்லை! இந்தியா ஒரு நிலப்பரப்பல்ல- இதுஒரு சக்தி, ஒரு தெய்வம் என்பது ஸ்ரீ அரவிந்தரின் நம்பிக்கை. இதுவே வந்தேமாதரம் – இந்தியத் தாய் என்பதன் பொருள். இந்தத்தாய் தன் தவப்புதல்வனை மறக்கவில்லை. 1947 ஆகஸ்டு 15ல் சுதந்திரம் என ஆங்கில அரசு அறிவித்தது. ஸ்ரீ அரவிந்தர் அரசியலிலிருந்து நீங்கிய 37 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய பிறந்த நாளே நமது சுதந்திர நாளாக மலர்ந்தது! இதுவே இறைவன் ஸ்ரீ அரவிந்தரின் தேசியப் பணிக்கு அளித்த அங்கீகாரமாகும்! ஆயிரம் தலைவர்கள் வந்து போவார்கள்; சுதந்திர பாரதம் இருக்கும் வரை ஸ்ரீ அரவிந்தரை மறக்க இயலாது!
  வந்தே மாதரம் என்போம்- எங்கள்
  அரவிந்த மஹானை வாழ்த்துதும் என்போம்.

 2. Santhanam Nagarajan

   /  August 15, 2019

  one more point.When at a later stage when Gandhiji wanted to visit Aurobindo at Pondicherry, maharishi Aurobindo refused to give an audience to Gandhiji. So is the case with Jawaharlal Nehry. Nehru tried his level best to meet Aurobindo. But Aurobindo refused.
  I have to write an article on this soon. nagarajan

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: