தில்லை சிதம்பரத்தில் 75 மரம் செடி கொடிகள்! (Post No.6897)

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 18 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 18-21

Post No. 6897

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் சைவர்கள் கோயில் என்று போற்றும் தில்லைச் சிதம்பரத்தில் தில்லை வாழ் அந்தணர் குலத்தில் அவதரித்த பெரியார் உமாபதி சிவாச்சார்யார். அவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவை சைவ சித்தாந்தத்தின் தூண்களாக விளங்க்குகின்றன. தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் புலமை இருந்ததால் அவர் இரு மொழியிலும் புஸ்தகங்கள் இயற்றினார். அவற்றுள் ஒன்று நடராஜ த்வனி மந்த்ர ஸ்தவம். அதில் தில்லையைச் சுற்றி வளரும் 75 தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். கோவில் அருகில் இத்தனை மரம் செடி கொடிகள் பாதுகாக்கப்பட்டது இந்துக்களுக்கு இயற்கை மீது எவ்வளவு அன்பு இருந்தது என்பதைக் காட்டுகிறது

தாவர இயல் அறிவும் பரிவும் அந்த அளவுக்குப் பரவி இருந்தது.

அவ்வப்போது இது போன்ற அதிசயச் செய்திகளை என்னுடன் பகிர்ந்து மகிழும் லண்டன் வாழ் திருச்சி கல்யாண சுந்தர சிவாச்சாரியார் அனுப்பிய பக்கத்தில் 75 தாவரங்களின் பெயர்கள் உள்ளன. படித்தும் அவைகளை வளர்த்தும் மகிழ்வோமாக:-

நூல் – நடேஸ்வர தண்டகம்

வானை எட்டுகின்ற கிளைகளில் எப்போதும்உறைகின்ற மேகக் கூட்டங்களின் உரசலால் விழுகின்றநீர்த்தாரைகளால் எப்போதும் பூத்துக்காய்த்துக்குலுங்குபவையும் எல்லா ருதுக்களிலும் பூத்துக் காய்த்துஅழகியவையுமான ஆல், முரள், வேழல், வெப்பாலை, அரசு,விளா, சம்பகம், பனை, பச்சிலைமரம், ஈந்தல், பனை, பைன்,ஒட்டுமா, நருவிளி, மலையகத்தி, வாகை, இலந்தை,அழிஞ்சில், பாதிரி, காட்டுப்பிச்சில், குங்கில்யம், மகிழம்,நீர்கடம்பு, கொன்னை , ஸரளதேவதாரு, அரேணுகம்,இலுப்பை, நீரிலுப்பை, நீர்க்கடம்பு, செஞ்சந்தனம், கல்லால்,ஏழிலம்பாலை, கோர்க்கப்புளி, கருகு, மா, நொச்சி,தென்னை, கருங்காலி, வெண்காலி, பேரீச்சை, சிறுகொன்னை, சிறுநாகம், புன்னாகம், நார்த்தை, நாகலிங்கம்,எலுமிச்சை, வேங்கை, மருது, கருமுருங்கை, வாகை, கடம்பு,வேம்பு, புளி, பாக்கு, லவங்கம், வாழை, மருதோன்றி,முல்லை , ரஸாளுமா, மந்தாரம், பாரிஜாதம், வெண்காலி,மஞ்சள் சந்தனம், அமுக்கரா, தேவதாரு, பில்வம், தில்லை ,ஜாதி முதலிய மரங்கள் அடர்ந்த மனத்தைக் கவர்-தோட்டங்களாலும் ஏலம், வெற்றிலை, மல்லி, திப்பிலிபிச்சகமல்லி, கணிகாரி, மயிர் மாணிக்கம் கற்பகம் முதலியபல கொடிகள் கற்றிய பல தோட்டங்களாலும் விளங்குவதும்.(9)

சங்க இலக்கிய நூலான குறிஞ்சிப் பாட்டில் கபிலர் எனும் பிராமாணப்புலவர் ஒரே மூச்சில் 99 தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு உலக சாதனை படைத்தார். அதற்கடுத்த சாதனை உமாபதி சிவாச்சார்யாரததான் இருக்க வேண்டும்.

Following is taken by Project Madurai; thanks.

குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சொன்ன 99 மலர்கள், செடி கொடிகள்

யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித
ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம் 
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா …. 70

விரிமல ராவிரை வேரல் சூரல் 
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த 
றாழை தளவ முட்டாட் டாமரை …. 80

ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி …. 90

நந்தி நறவ நறும்புன் னாகம் 
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு
மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் 
மாலங் குடைய மலிவன மறுகி
வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப் 
புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்
வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக் …. 100

–subham—

Leave a comment

1 Comment

 1. நான் 47 வருஷங்களாக சிதம்பரம் சென்று வருபவன். இந்த ஆண்டுகளில் சிதம்பரம் எப்படிச் சீரழிந்தது என்பதை நேரில் கண்டு வந்திருக்கிறேன்.
  நான்கு ரத வீதிகளிலும் இருந்த வீடுகள் இன்று அடுக்குமாடிக் குடியிருப்புக்களாகவும் வியாபாரத் தலமாகவும் மாறிவிட்டன- மாறி வருகின்றன. ஒவ்வொரு வீட்டின் பின்புறம் இருந்த தோட்டமும் பழ, மலர் செடி கொடி மரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. எத்தனை வகைச் செடிகொடிகள் இப்படி அழிந்து விட்டன என யாரே சொல்ல முடியும்?
  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இருப்பிடம். அங்கு தாவரவியல் பிரிவு உண்டு. அவர்கள் முயற்சியெடுத்து இத் தாவர வகைகளைப் பட்டியலிட்டு வகைப்படுத்திப் பாதுகாக்க முயற்சி செய்யலாம். ஆனால் நமது பல்கலைக் கழகங்கள் வியாபாரத் தலங்கள் அல்லவா?

  வியாபாரம் எங்கும் உண்டு. நடராஜர் கோவில் சிதம்பரத்திற்கே உரியது. அந்தவூர் மக்கள் இதை மறந்து விட்டார்கள். கோயிலைச் சுற்றி நெடிய கட்டிடங்களை எழுப்பி கோயிலையே தெரியாமல் மறைத்து விட்டார்கள். முன்பு எந்த ரத வீதியிலும் [ மேல வீதி தவிர] எங்கு நின்று பார்த்தாலும் கோபுர தரிசனம் செய்யலாம். இன்று எங்கு நின்றாலும் கோபுரம் தெரியாது! கோபுரத்திற்கு நேரெதிரே நின்றாலும் கோபுரம் முழுதும் தெரியாது! அவ்வளவு கட்டிடங்கள்!
  புவனகிரியிலிருந்து சிதம்பரம் வரும் வழியில் நான்கு கோபுரங்களும் நன்கு தெரியும். இன்று புற நகர்ப்பகுதிகளும் அதிவேகமாக விரிவடைந்து வருவதால் இந்த நிலையும் மாறிவிட்டது.
  கோவிலைச் சுற்றிலும் தோட்டம் துரவுகள் இருந்ததால் நீர்வளமும் நன்கு பாதுகாக்கப் பட்டது. இன்று கோவில் கிணற்றில் நீர் இல்லை! ஊர் முழுவதும் ஆழ் நிலைக் கிணறுகள் பெருகிவிட்டதால் நீர் விரைவில் உறிஞ்சப்பட்டு எவ்வளவு மழை பெய்தாலும் போதவில்லை என்ற நிலை தோன்றிவிட்டது.
  ஆக பொதுவாக, சாமி கோவிலைப் பற்றியும் கவலையில்லை; இயற்கைச் சூழல் பற்றியும் அக்கறை இல்லை. இதுவே இன்றைய நிலை.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: