ராமாயண வழிகாட்டி – 13 (Post No.6924)

WRITTEN BY  S NAGARAJAN

swami_48@yahoo.com

 Date: 24 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-54 am

Post No. 6924

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

2013ஆம் ஆண்டில் ராமாயண வழிகாட்டி தொடரில் 12 அத்தியாயங்களில் வால்மீகி ராமாயணத்தில் உள்ள சில ஸ்லோகங்களைப் பற்றிப் பார்த்தோம். (www.tamilandvedas.com தளத்தில்) நெடுநாளைக்குப் பிறகு – இதோ, ராமாயணத்தின் இன்னும் சில ஸ்லோகங்களைப் பார்க்க விழைவோமா?

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 13

ச.நாகராஜன்

மனைவியாக சீதாதேவியின் பண்புகள்!

இந்தியாவின் இலட்சிய பெண்மணியாக ஹிந்து நாகரிகம் முன் வைக்கும் வனிதையர் திலகம் சீதா.

சீதா தேவியைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுக்கிறார் ஸ்வாமி விவேகானந்தர். அவரது ராமாயணம் பற்றிய உரையில் ஒரு பகுதி இதோ:

Rama and Sita are the ideals of the Indian nation. All children, especially girls, worship Sita. The height of a woman’s ambition is to be like Sita, the pure, the devoted, the all-suffering! When you study these characters, you can at once find out how different is the ideal in India from that of the West. For the race, Sita stands as the ideal of suffering. The West says, “Do! Show your power by doing.” India says, “Show your power by suffering.” The West has solved the problem of how much a man can have: India has solved the problem of how little a man can have. The two extremes, you see. Sita is typical of India — the idealised India. The question is not whether she ever lived, whether the story is history or not, we know that the ideal is there. There is no other Paurânika story that has so permeated the whole nation, so entered into its very life, and has so tingled in every drop of blood of the race, as this ideal of Sita. Sita is the name in India for everything that is good, pure and holy — everything that in woman we call womanly. If a priest has to bless a woman he says, “Be Sita!” If he blesses a child, he says “Be Sita!” They are all children of Sita, and are struggling to be Sita, the patient, the all-suffering, the ever-faithful, the ever-pure wife. Through all this suffering she experiences, there is not one harsh word against Rama. She takes it as her own duty, and performs her own part in it. Think of the terrible injustice of her being exiled to the forest! But Sita knows no bitterness. That is, again, the Indian ideal. Says the ancient Buddha, “When a man hurts you, and you turn back to hurt him, that would not cure the first injury; it would only create in the world one more wickedness.” Sita was a true Indian by nature; she never returned injury.

MELUKOTTE

சீதா தேவியை கானகத்தில் இழந்த இராமபிரான் லக்ஷ்மணனிடம் சீதையின் குண நலன்களைப் பற்றிக் கூறியவாறே புலம்புகிறார்.

அதில் வரும் ஸ்லோகம் இது:

கார்யேஷு மந்த்ரி  கரணேஷு தாசி

   தர்மேஷு பத்னி க்ஷமயா தரித்ரி |

ஸ்னேஹேஷு மாதா சயனேஷு ரம்பா

    ராகே சகி லக்ஷ்மண் ஸா ப்ரியா மே ||

ஸ்லோகத்தின் பொருள் :-

ஆலோசனை கூறுவதில் அவள் மந்திரியைப் போல.

பணிவிடை செய்வதில் அவள் ஒரு வேலைக்காரி போல.

தர்ம காரியங்களில் செய்வதில் அவள் ஒரு பத்னியைப் போல.

பொறுமையிலோ அவள் பூமாதேவியைப் போல.

அன்பு பாராட்டுவதில் அவள் ஒரு அன்னையைப் போல.

படுக்கையிலோ அவள் ரம்பையைப் போல.

விளையாட்டில் அவள் ஒரு தோழியைப் போல.

லக்ஷ்மணா! அப்படிப்பட்ட பிரியை அவள்! (அந்த சீதா!)

இதை விட அற்புதமாக ஒரு பெண்மையின் இலக்கணம் இருக்க முடியாதல்லவா?!

நீதி வெண்பாவை இயற்றிய கவிஞர் பெண்ணுக்கான இலக்கணத்தைத் தருகிறார் இப்படி:

அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் – வன்னமுலை 
வேசி துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில் இவையுடையாள் பெண்.    (நீதி வெண்பா பாடல் எண் 30)

அப்படியே ராமரின் கூற்றை இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது அல்லவா?

ராமாயணம் ஹிந்துக்களின் ஜீவ நாடி. ராம பிரான் ஹிந்துக்களின் லட்சிய புருஷன். மரியாதா புருஷோத்தமனான ராமனையும் வனிதையர் திலகமான சீதையையும் போற்றுவோம்! வழிபடுவோம்!!

***

RAMAYANA IN THAILAND
–SUBHAM–
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: