
WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 25 AUGUST 2019
British Summer Time uploaded in London – 7-14 AM
Post No. 6930
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.







R.Nanjappa (@Nanjundasarma)
/ August 25, 2019இத்தகைய நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டு காஞ்சி சங்கர மடத்திலும் மஹாபெரியவர் காலத்தில் நடந்திருக்கின்றன அவர் ஆளையும் கண்டு, காரணத்தையும் கண்டு அவருக்கே உரிய முறையில் விஷயத்தை முடித்துவைத்தார்.
காந்திஜி எதையும் எளிமைப்படுத்தி விடுகிறார். திருடுவதற்கு சமூகத்தில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மட்டும் காரணமாவதில்லை. சிலர் பொருளின்மையால் திருடலாம். ஆனால் இன்று பெரிய பெரிய புள்ளிகள் மகத்தான திருட்டுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இவற்றின் பின்னணியில் உள்ள அறிவுத்திறன் அபாரமானது. இன்றைய கம்ப்யூட்டர் வழித் திருட்டுக்கள் இத்தகையவை. இன்னும் மியூசியங்களில் திருடுவதும், நமது ஆலயங்களில் சிலைகளைத் திருடுவதும் இல்லாமையினால் அல்ல! இதிலெல்லாம் ஒரு த்ரில்லும் பெருமையும் இருப்பதாகக் கொள்கின்றனர். இன்னும் , சில பணக்காரர்களும் ( சினிமா நடிகை போன்று) பெரிய ஷாப்பிங் மால்களில் விலையுயர்ந்த பொருள்களை அபேஸ் செய்கின்றனர்! இது ஒருவகை மன நோயாகும். இதை Kleptomania என்கின்றனர்.
சிலருக்கு திருடும் இயல்பு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இதை கீதையில் வரும் ‘அஸுர சம்பத்து’ எனக் கொள்ளலாம்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விலையுயர்ந்த பேனா, புத்தகம் முதலியவை ‘காணாமல்’ போய்விடும். பரீட்சை நடக்கும் ஹாலுக்கு வெளியே விட்டுவிட்டு வரும் புத்தகம் திருடுபோய்விடும். சிலர் லைப்ரரியில் நல்ல விலையுயர்ந்த புத்தகங்களை வாங்கி தொலைந்து போய்விட்டது என்று சொல்லி பணத்தைக் கட்டுவார்கள். அந்த புத்தகங்கள் மீண்டும் கிடைக்காது! சென்னையில் கன்னிமாரா லைப்ரரியில் சில பலே ஆசாமிகள் சில புத்தகங்களின் பக்கங்களைத் திருடுவார்கள்- பிளேடால் வெட்டி எடுத்துச் செல்வார்கள்.
பொதுவாக இக்காலத்தில் ஓரளவு வசதியுள்ள மாணவ மாணவிகள் தங்கிப் படிக்கும் ஹாஸ்டல்களிலும் திருடுகள் சாதாரணமாக நிகழ்கின்றன.
இன்று பல இடங்களில் கார்களும் பைக்குகளும் திருடுபோகின்றன. [ டில்லியில் பழைய மாருதி 800 கார் திருடர்களிடம் கியாதி பெற்றது- இதில் வரும்சில பகுதிகள் தீவிரவாதிகளின் bomb செய்யப் பயன்படுமாம்! ]
கல்யாண மண்டபங்களிலும் கோவில்களிலும் வெளியே விடும் உயர்ந்த காலணிகள் திருடுபோய்விடும்- இது தமிழ் நாட்டில் மிகவும் சகஜம். இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு ஃப்லேட்டிற்கு வெளியேவிடும் காலணிகள் திருடுபோகின்றன- இதில் ‘ஸ்பெஷலைஸ்’ செய்யும் நபர்கள்- கும்பல்கள் இருக்கின்றன.
இன்னொருவகை வினோதமான திருட்டு- அடுக்குமாடிக் கட்டிடங்களில் நடக்கிறது. அங்கெல்லாம் செய்திப்பத்திரிகைகள் களவுபோகும்! இரண்டு, மூன்று பேர் செய்திப்பத்திரிகை போட்டால் ஒன்றிரண்டு வீடுகளில் களவுபோய்விடும் ! ஆனால் ஒருவரே எல்லாவீடுகளுக்கும் போட்டால் எல்லாம் சரியாக இருக்கும்! இது பத்திரிகை போடுபவர்கள் ஆடும் ஆட்டம்!
CCTV வைத்து இன்று எல்லா இடங்களும் கண்காணிக்கப்படுகின்றன. அப்படியும் திருட்டுக்கள் நின்றபாடில்லை! ஆக, திருட்டின் காரணங்கள் பல!
Santhanam Nagarajan
/ August 25, 2019திருட்டு திருட்டு தான்! திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஒருவரை இரு வருடம் சிறையில் போடுகிறார் மாஜிஸ்ட் ரேட்.
ஆனால் பல கோடானுகோடி கொள்ளையடித்த ‘செல்லையாக்களையும் சிதம்பரங்களையும்’ சுப்ரீம் கோர்ட்டே ஒன்றும் செய்ய முடியாமல் விழிக்கிறது. ஏன் இப்படி? என்றாலும் மஹாத்மாக்கள் தங்கள் அளவில் பெருந்தன்மையாக நடந்து கொள்கின்றனர். அந்தப் பெருந்தன்மையே அந்தக் குறிப்பிட்ட திருட்டைச் செய்தவனை மாற்றி விடுகிறது.
ஆனால் ஒவ்வொரு திருட்டிற்கும் ஒரு மஹாத்மா வருவதும் சாத்தியமில்லை தான்.
நன்றி