

Compiled by
London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 AUGUST 2019
British Summer Time uploaded in London – 15-49
Post No. 6954
Pictures are taken FROM VARIOUS SOURCES. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
நான் கற்றுக் கொண்ட ஒரு முக்கிய பாடம்- வட இந்திய ஹோட்டல்களில் மசாலா தோசை, இட்லி, வடை கேட்காதே; தென்னிந்திய ஹோட்டல்களில் பராட்டா, குருமா முதலியன கேட்காதே; இரண்டு இடங்களிலும் சைனீஸ் நூடில்ஸ் Chinese Noodles ஆர்டர் செய்யாதே.
செய்தால் நீண்ட நேரம் சென்று அந்தப் ‘பொருள்கள்’ வரும்;அது அதுவாக இராது.
இதே போல ஹிந்துஸ்தானிக்காரர்
தெலுங்கு, கன்னடக்காரர்கள், கர்நாடக சங்கீத- குறிப்பாக- தமிழ்ப் பாட்களைப் பாடும்போது உச்சரிப்புப் பிழைகள் வருவதை நான் லண்டலிலேயே கேட்டிருக்கிறேன்—“கெட்டும் இருக்கிறேன்”.
தமிழ்ப் பாடகர்களின் இந்தி, மராட்டி உச்சரிப்பும் இப்படித்தான்.
லண்டனில் ஆடல், பாடல் கற்றுக்கொண்ட ஒரு பெண், — ஆசிரியர் சொன்னதை ஆங்கிலத்தில் எழுதும் போது, பாரோ (baaro) கிருஷ்ணையா என்பதை கடன்வாங்கு (BORROW பார்ரோ) கிருஷ்ணையா என்று எழுதி படித்துக் கொண்டிருந்ததை என் நண்பர் பார்த்துவிட்டார். பாவம் அந்தப் பெண் நாட்டியம் ஆடினால் “கடன் வாங்கு கிருஷ்ணையா” என்றல்லவோ அபிநயம் பிடிப்பாள்! ஆகப் பொருள் தெரியவிட்டால்,அர்த்தம், அனர்த்தம் ஆகிவிடும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் மதுரையில் R S S விழா ஒன்றில் ‘அப்னி தரத்தி, அப்னா அம்பர் அப்னா ஹிந்துஸ்தான், அப்னா ஹிந்துஸ்தான்’ என்ற இந்தி மொழி தேசபக்தப் பாடலைப் பாடி முடித்தேன். விழா முடிந்தவுடன் “பாட்டுப் பாடி கொன்னுட்டீங்களே” என்றார் ஒருவர். அது பாராட்டு இல்லை, பாட்டை நான் கொலை செய்ததை அவர் அப்படிச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளக்கூட எனக்கு சிறிது நேரம் பிடித்தது (சரியான ட்யூப்ப் லைட்டு நான்!)
xxx
75 ஆண்டுக்கு முந்திய அருமையான தமிழிசை மாநாட்டு மலர் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. அதில் சிலர் ‘கைபர் கணவாய்’ போன்ற சுடுமொழிகளையும் இன்னும் சிலர் தமிழ் இலக்கியம் 15,000 ஆண்டுப் பழமையுடையது என்ற உளறல் மொழிகளையும் உதிர்த்து இருந்த போதிலும் பல அருமையான கட்டுரைகளும்,நூற்றுக் கணக்கான அரிய பாடகர் படங்களும் அதிலிருந்து கிடைத்தன.
அதில் 1943-ம் ஆண்டில் ராவ் பகதூர் சம்பந்த முதலியார் பேசிய பேச்சு பொருள் பொதிந்தது .அவர் பல சுவையான சம்பங்களைச் சொல்லி, அதன் கருத்துக்களை விளக்குகிறார்.
கச்சேரிக்கு வந்த ஆங்கிலேயரை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு பாடகி, TWINKLE, TWINKLE LITTLE STAR ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலை ‘கன்னா பின்னா’ என்று பாடி ஆங்கிலேயரை வேதனைப் படுத்தியதையும் இன்னும் சிலர் தேவாரம், தெலுங்கு கிருதிகளைத் தாறுமாறாகப் பாடி அவைகளைக் ‘கொலை செய்ததையும்’ சுவைபட எழுதி இருக்கிறார்.
சில சுவையான சம்பவங்கள் இதோ:–






—subham–
R.Nanjappa (@Nanjundasarma)
/ August 30, 2019இது இன்றும் நிலவும் நிலை. தமிழ் நாடு, பெங்களூர், மைசூர் தவிர வேறு எங்கும் காஃபி சாப்பிடக்கூடாது. 5 ஸ்டார் ஹோட்டல்களில் எந்த இந்திய உணவும் நன்றாக இருப்பதில்லை. காஃபி மிகவும் மோசம், விலையும் அதிகம்.ஆனால் தடபுடல் அதிகம்.
பாடகர்கள் பாடும் விதத்திற்கு என்ன சொல்வது? முன்னணி கர்னாடக சங்கீத வித்வான்கள் தமிழ் நாட்டவர்கள். இவர்களில் பலருக்கு தமிழ்ப்பாடலே சரியாக வருவதில்லை. பெயர் சொன்னால் பொல்லாப்பு. ஒரு முன்னணிப் பாடகர் பாடிய கீரவாணி ராகம் தானம் பல்லவி காசட்டில் ” அபகார நிந்தைபட் டுழலாதே, அறியாத வஞ்சரைக் “குறையாதே” என்று பாடிப் பதிவாகியிருந்தது. இந்த அபத்தத்தை பல்லவியில் திரும்பத்திரும்பக்கேட்டால் குட்டிக்கொள்ள ஒருதலை போதாது! நான் ரிகார்டு கம்பெனிக்கு எழுதினேன்- ‘குறியாதே’ என்று இருக்கவேண்டுமென்று! பதிலில்லை. பாடகருக்கே [ இன்று சங்கீத கலாநிதி] தெரியவில்லையா,அல்லது வாய்தவறி வந்த சொல்லா எனத்தெரியவில்லை!
இன்னொரு பெரிய பாடகர் “உருவாய் அருவாய் இலதாய் இலதாய்” எனப் பாடியிருந்தார்.
தமிழ்ப் பாடலே இந்தக் கதியானால், மற்ற மொழிகளைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. இவர்கள் தெலுங்கு கன்னட உச்சரிப்பு பெரும்பாலும் தவறானது. ஹிந்தியோ , மராத்தியோ கேட்கவே வேண்டாம்.அது வேற்றுமொழி அப்படித்தான் இருக்கும் என்பது சரியில்லை. பாடியே பிழைக்கவேண்டும் என்னும்போது சரியான உச்சரிப்பைக் கற்றுக்கொண்டால் என்ன? த்யாகராஜரைக் கொண்டாடுகிறார்கள் -அவர் கீர்த்தனைக்களைக்கூட சரியாகப் பாடுபவர்கள் மிகவும் குறைவே. ராகத்தைப் பிடித்தால் வார்த்தைகளை விழுங்கிவிடுவார்கள். நான் பாடலைக் கேட்கும் போது புத்தகத்தை வைத்திருப்பேன். சரியாகப் பாடுபவர்கள் மிகவும் குறைவே. பஞ்ச ரத்னக் கீர்த்தனைகள் பாடம் உள்ளவர்கள் [ அஞ்சும் தெரிஞ்சவர்கள்] சிலரே..
எவரும் முழுக் கீர்த்தனையையும் ( எல்லா சரணங்களையும் ) பாடுவதில்லை. இதனால் ஒரு கீர்த்தனையின் innate organic structure பாதிக்கப்படுகிறது. ரசபாவமும் பாதிக்கப்படுகிறது. நான் கேட்டவரையில் சாஹித்யத்தைச் சரியாக உச்சரித்தவர் பாலமுரளி கிருஷ்ணாதான். அடுத்து MS, மணி கிருஷ்ணஸ்வாமி, நெய்வேலியைச் சொல்லலாம். எம்.எஸ். ஸாஹித்யத்தில் மிகவும் கவனம் செலுத்துவார். அவர் ஹிந்தி உச்சரிப்பு இலக்கணப்படி ( தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரச்சார் சபா) சரியாக இருக்கும். ஆனால் அது மக்கள் இயற்கையாகப் பேசும் ஹிந்தியல்ல. அவர் பாடிய ஹனுமான் சாலீசா அருமை, ஆனால் அது வடஇந்தியாவில் வழங்கும் மொழியல்ல. அசல் துளஸிதாஸரின் உச்சரிப்பும் அல்ல. பண்டிட் ராஜன்-சாஜன் மிஶ்ராவோ, பண்டிட் ஜஸ்ராஜோ பாடியதைக் கேட்டால் நான் சொல்வதன் உண்மை விளங்கும்.
எல்லா இந்திய மொழிகளிலும் பல பொது அம்சங்கள் இருக்கின்றன. அம்மொழிப் பாடல்களைக் கற்பது கடினமல்ல- ஆனால் ஆர்வமும் அக்கறையும் வேண்டும்.பாடலை நன்கு கற்று, சொற்களைப் பிரித்து பொருள் தெரிந்து பாடினால்தான் பாடலின் கருத்தும் பாவமும் வெளிவரும். ஒரு மொழிப் பாடலை அந்த மொழி தெரிந்தவரிடம் பாடம் செய்யவேண்டும்.
பொதுவாக இன்று தமிழ் நாட்டில் தமிழே சரியாக உச்சரிப்பதில்லை. தமிழ் இலக்கியப் பாடல்களுக்கும் ஒரு ராக அமைப்பு உண்டு- வெண்பா, ஆசிரியப்பா ஆகிய வற்றுக்கான ராகங்கள் உண்டு. உ.வே.சா இது பற்றி குறிப்பிட்டிருக்கிறார். பாரதியாரின் பாடல்களுக்கு அவரே ராகத்தைச் சொல்லியிருக்கிறார்.. 60 வருஷங்களுக்கு முன் எங்கள் ஆசிரியர் முதலில் உரிய ராகத்தில் பாடிக்காட்டுவார், பிறகு பதம் பிரித்தும் சொல்லுவார். இன்று இந்த முறை மறைந்துவிட்டது. ஆனால் இயல் இசை எனப் பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள்.
தெலுங்குக் காரர்களுக்கும் கன்னடக் காரர்களுக்கும் தமிழ் உச்சரிப்பு அவ்வளவாக வராது, ஆனால் ஹிந்தி சற்று எளிதாக வரும். மலையாளக் காரர்கள் உச்சரிப்பு nasal ஆனால் பிரின்ஸ் ராமவர்மா ஒரு அரிய விதிவிலக்கு. இப்படிப் பலரிடமும் ஒரு பாடலைக் கேட்பதும் ஒரு இனிய அனுபவம்தான்.
ஆனால் ஹிந்திக் காரர்களுக்கு ( தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் தவிர) தமிழ் சுத்தமாக வராது- ஏனெனில் தமிழ் பேச்சிலும் எழுத்திலும் மிகவும் மாறுபடுகிறது. ஒலிக்கும் வரி வடிவத்திற்கும் வித்தியாசம் உண்டு. இதெல்லாம் பழகினால்தான் புரியும். லதா மங்கேஷ்கர் பல மொழிகளில் பாடியிருக்கிறார். ஆனால் சில பாடல்களை தமிழில் டப் செய்ய தடுமாறினாராம். அவன், வானரதம் ஆகிய படங்களுக்கான பாடல்களை டப் செய்த போது, தமிழ் வார்த்தைகளில் தடுமாறினாராம். அவருக்கேற்றவாறு கம்பதாசன் எளிய சொற்களைப் போட்டாராம். அப்போதும் ‘அவன்’ படத்தில் ஹிந்தியில் [ AAH- 1953] அவர் பாடிய பாடல்களைத் தமிழில் ஜிக்கி பாடினார். வானரதம் ( Uran Khatola- 1955) படத்தில் ரஃபி பாடல்களை டி ஏ.மோதி தமிழில் அருமையாகப் பாடினார். லதா பாடல்களை பாலசரஸ்வதிதேவி பாடுவதாக ஏற்பாடு, ரிஹர்சலும் முடிந்து, ஒரு பாடல் ரிகார்ட் ஆகி, மற்றவை ரிகார்டிங் ஆகவேண்டிய நிலையில் லதா மங்கேஷ்கர் தானே பாடுவேன் என அடம்பிடித்தார், சில பாடல்களை அவர் பாடினார்-ஆனால் தமிழ் உச்சரிப்பு சுமார்தான். ஆக தமிழர்களுக்கு சில மொழிகளில் தடுமாற்றம், பிறருக்கு தமிழில் தடுமாற்றம்! சீர்தூக்கும் கோல் சமனாகிவிட்டது!
Tamil and Vedas
/ August 31, 2019THANKS FOR ADDING INTERESTING ANECDOTES AND ILLUSTRATIVE EXAMPLES