
Compiled by
London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 AUGUST 2019
British Summer Time uploaded in London – 6-28 AM
Post No. 6955
Pictures are taken FROM VARIOUS SOURCES. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
செப்டம்பர் 2019 நற்சிந்தனை காலண்டர்
அன்பு, நேசம் பாசம், கணவன் – மனைவி இடையேயுள்ள காதல் பற்றிய 30 தமிழ்- ஸம்ஸ்க்ருதப் பொன் மொழிகள் செப்டம்பர் காலண்டரில் இடம்பெறுகின்றன,
பண்டிகை நாட்கள் – செப்.2 – விநாயக சதுர்த்தி, 3 ரிஷி பஞ்சமி, 6 ராதாஷ்டமி, மஹாலக்ஷ்மி விரதம் ஆரம்பம், 11-ஓணம், பாரதியார் நினைவு தினம், 14- மஹாளயம் ஆரம்பம், 18-மஹாபரணி, 22-மத்யாஷ்டமி, மஹலக்ஷ்மி விரதம் நிறைவு, 28- மஹாளய அமாவாசை, 29- நவராத்ரி ஆரம்பம்.
பௌர்ணமி- 13,
அமாவாசை – 28,
ஏகாதசி விரத நாட்கள் – 9/10, 25
முகூர்த்த நாட்கள்- செப்டம்பர் 1,2,4,8,11,12,16

செப்டம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை
எல்லோரும் நேசிப்பது மாப்பிள்ளையைத்தான்!
ஸர்வஸ்ய வல்லபோ ஜாமாதா பவதி- ஸம்ஸ்க்ருத பழமொழி
Xxx
செப்டம்பர் 2 திங்கட்கிழமை
அன்புக்குரியவரை திடீரெனப் பிரிவது இடி விழுந்தது போன்றதல்லவா. யாரால் அதைத் தாங்க முடியும்?
ஸஹஸா ப்ரியவிச்சேதம் வஜ்ரபாதம் ஸஹேத் கஹ- ப்ருஹத் கதா மஞ்சரி
Xxx
செப்டம்பர் 3 செவ்வாய்க்கிழமை
செல்வச் செழிப்பின் நோக்கமே நெருங்கிய சொந்த, பந்தங்களை இணைப்பதே- ராமாயண மஞ்சரி 6-1-34
ப்ரிய சமாகமஹ ஸாரஹ ஸத்யம் விபவஸம்பதாம்
xxx
செப்டம்பர் 4 புதன்கிழமை
அன்பிற்குரியவர் இறந்துவிட்டால் உலகமே பாலைவனம் ஆகிவிடும்- உத்தமராம சரிதம் – ப்ர்யாநாசே க்ருத்ஸ்னம் கில ஜகத் அரண்யம் பவதி– ப்ருஹத் கதா மஞ்சரி
xxx
செப்டம்பர் 5 வியாழக்கிழமை
உறுதியுள்ளம் உடையவரும் கூட பிரிவால் வருந்துவர்.
ப்ரியப்ராம்சோ தீரைரபி ந சஹ்யதே
Xxx

செப்டம்பர் 6 வெள்ளிக்கிழமை
மிருகங்களுக்குக் கூட அன்பு உணர்ச்சியும் பிறவற்றைக் கவனிக்கும் குணமும் உண்டு –
விக்ஞாயந்தே பசுபிரபி ப்ரியாதராஹா – ஸ்ரீராமசரிதாப்திரத்னஹ
xxx
செப்டம்பர் 7 சனிக்கிழமை
அன்பிற்குரியவரின் முழு அன்பைப் பெறுவதற்குத்தானே இத்தனை ஊடலும்.
ப்ரியேஷு சௌபாக்யபலா ஹி சாருதா – குமர சம்பவம் 5-1
Xxx
செப்டம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை
கள்ளினும் காமம் இனிது – குறள் 1201
Xxx
செப்டம்பர் 9 திங்கட்கிழமை
காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று – குறள் 1255
Love is blind.
xxxx
செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமை
காமக்கடல் மன்னும் உண்டே – குறள் 1164
(கடல் போலக் காமம் இருக்கிறது)
Xxx

செப்டம்பர் 11 புதன்கிழமை
இன்பம் கடல் மற்றுக் காமம் – குறள் 1166
Xxx
செப்டம்பர் 12 வியாழக்கிழமை
காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் – குறள் 1167
Xxx
செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை
செல்லாமல் உண்டேல் எனக்குரை- குறள் 1151
(பிரிந்துபோக மாட்டேன் என்றால் பேசு)
xxx
செப்டம்பர் 14 சனிக்கிழமை
அன்பிற்குரியவர் அளிக்கும் நீர்க்கடனை முன்னோர்களும் விரும்புவர் -ராமாயண மஞ்சரி
ப்ரியபாணிச்யுதம் வாரி வாஞ்சந்தி பிதரோ அதிகம்
Xxx
செப்டம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை
அன்புடையோர் கொடுக்கும் நற்செய்தி கூடுதல் இனிமையுடைத்து- அவிமாரக நாடகம்
ப்ரியநிவேத்யமானானி ப்ரியாணி ப்ரியதராணி பவந்தி
xxxx

செப்டம்பர் 16 திங்கட்கிழமை
காமம் மறையிறந்து மன்றுபடும் – குறள் 1138
(காமம் பலர் அறிய ஊர் மன்றத்தே வெளிப்படும்)
Xxx
செப்டம்பர் 17 செவ்வாய்க்கிழமை
கருமணியிற் பாவாய் நீ- குறள் 1123
xxx
செப்டம்பர் 18 புதன்கிழமை
பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி- குறள் 1121
Xxx
செப்டம்பர் 19 வியாழக்கிழமை
அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து
(நோயும் அவளே. நோய்க்கு மருந்தும் அவளே) குறள் 1102
xxxx
செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை
கண்டார் உயிருண்ணும் தோற்றம்- குறள் 1084
(இப்பெண்ணின் கண்கள் பார்த்தவர் உயிரை உண்டுவிடும்)
xxx

செப்டம்பர் 21 சனிக்கிழமை
அன்பிற்குரியவர் அன்பற்ற செயல்களைச்செய்தாலும் அவர் பிரியமானவரே- ஹிதோபதேசம் 2-133
அப்ரியாண்யபி குர்வாணோ யஹ ப்ரியஹ ப்ரிய ஏவ சஹ.
xxx
செப்டம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை
மலரினும் மெல்லிது காமம் – குறள் 1289
Xxx
செப்டம்பர் 23 திங்கட்கிழமை
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ- குறள் 1323
ஊடலில் கிடைக்கும் இன்பம் தேவலோகத்தில் உண்டா?
Xxx
செப்டம்பர் 24 செவ்வாய்க்கிழமை
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு – குறள் 1199
அன்பு செய்யவிடினும் அவர் பற்றிக்கூறப்படும் எல்லாம் என் காதுக்கு இசை போலத்தான்.
Love sees no faults
xxx
செப்டம்பர் 25 புதன்கிழமை
பிடிக்காதவர் செய்த நல்ல செயலும் வேம்பாய்க் கசக்கும்
அப்ரியேண க்ருதம் ப்ரியமபி த்வேஷ்யம் பவதி- பழமொழி
xxx

செப்டம்பர் 26 வியாழக்கிழமை
வேண்டாத பெண்டாட்டியின் (மருமகளின்) கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் – பழமொழி
Faults are thick where love is thin
xxx
செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை
தனக்குப் பிரியமானவளைக் குணவதி என்றே மனிதர்கள் நம்புகிறார்கள் – சிசுபாலவதம்
தயிதம் ஜனஹ கலு குணீதி மன்யதே
xxx
செப்டம்பர் 28 சனிக்கிழமை
இந்த உலகில் மனிதர்கள் இரண்டு விஷயங்களை மிகவும் நேசிக்கிறார்கள்- பெண்களையும் நண்பர்களையும்
த்வயாமிதமதீவ லோகே ப்ரியம் நராணாம் ஸுஹ்ருச்ச வனிதா ச – மிருச்சகடிகம்
xxx
செப்டம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை
மூத்த பையனை தந்தை பாராட்டுவான்/நேசிப்பான்; இளைய பிள்ளையை தாய் பாராட்டுவாள்/நேசிப்பாள்
ப்ராயேணஹி ஜ்யேஷ்டாஹா பித்ருஷு வல்லபாஹா மாத்ரூணான் ச கனீயாம்சஹ- பழமொழி
xxx
செப்டம்பர் 30 ஞாயிற்றுக் கிழமை
ஆசையுள்ள இடத்தில் பூசை நடக்கும்- பழமொழி

xxx subham xxx
Parameswaraiyer Ambikapathy
/ August 31, 2019வாழ்க…வளர்க தம் சேவை
அன்புடன்
அம்பி
Sent from my iPhone