திரிசங்கு நட்சத்திரம் பற்றிய புதிய விளக்கம்! (Post No.6962)

Research Article written by London Swaminathan

swami_48@yahoo.com

 Date: 1 SEPTEMBER 2019


British Summer Time uploaded in London – 9-28 am

Post No. 6962

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

canopus/agastya
Leave a comment

2 Comments

  1. இக்கட்டுரை பல முக்கிய விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது.
    1. இந்திய புராதன எண் முறைகள். சங்கம், ஜலதி, வெள்ளம் போன்ற பல சொற்கள் மிகப்பெரிய எண் தொகைகளைக் குறித்து வழங்கின. பழைய இலக்கியம் ஊன்றிக் கற்போர் அருகிவிட்டதாலும். இத்தகைய சொற்கள் பாடதிட்ட வழியாக வராததாலும் இன்றைய இளைய சமூகத்தினர் இவற்றை அறிவதில்லை. நாளடைவில் இவை நம் மொழி வழக்கிலிருந்தே, நினைவிலிருந்தே நீங்கிவிடும் அபாய நிலை தோன்றிவிட்டது.
    ராமாயணத்தில் ராமர் பத்து ஆயிரம்+ பத்து நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என வருகிறது. இதன் உண்மை என்ன? இது ‘ஸித்த சங்கேதம்’ என்ற முறையில் அடங்கும். . அதன்படி, 10×4+ 10×3 = 40+30 = 70 ஆண்டுகள் ஆகும். ஆக, ராமர் வாழ்ந்தது 110 ஆண்டுகள். இதை அண்ணா சுப்ரமண்ய ஐயர் “ஸ்ரீ வால்மீகி ராமாயண சாரம் ” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இத்தகைய இந்திய எண் சங்கேத முறைகளைப் பற்றி நாம் அறியவில்லை.

    2. ஒரு விஷயத்தை விளக்க பல துறைகளின் உதவியை நாடவேண்டும். வானவியல் பற்றிய ஆராய்ச்சியை கடற்பயணம் வாயிலாக ஊர்ஜிதப் படுத்துவது மிகச்சிறந்த உதாரணம். ராமாயண, மஹா பாரத நிகழ்சிகளை வானவியல் குறிப்புகள் கொண்டு விளக்கலாம். அதேபோல் சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றின் காலத்தையும் விளக்கலாம்.ஆனால் இத்துறைகளில் விருப்புவெறுப்பின்றியும் அரசியல் சாராமலும் ஆய்வோர் குறைவே.
    இன்று சாடிலைட் காமிராக்கள் வந்த நிலையில் புராதன சரஸ்வதி நதியின் போக்கையும், ராம சேதுவின் இயல்பையும் அறிந்திருக்கிறோம் அதேபோல் கடலில் அகழ்வாராய்ச்சியின் மூலமும், carbon dating மூலமும் அசல் த்வாரகாவும் கண்டறியப் பட்டுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களால் இவை அமுங்கிக் கிடக்கின்றன. சமீபத்தில் அகழ்வாராய்ச்சியில் அயோத்தியில் புராதன ராமர் கோயில் இருந்தது ஊர்ஜிதமானது. இந்த ஆராய்ச்சி உயர் நீதி மன்றத்தின் ஆணைப்படி நடந்திருந்தாலும், அதன் முடிவுகள் நீதி மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்ப்ட்டிருந்தாலும் அரசியல் காரணங்களால் இவை அமுக்கிவைக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றால் தெரிவது, ஒரு விஷயத்தை விளக்க பல துறைகளும் உதவும் என்பதே.

    3.புராணக்கதைகளை கட்டுக்கதை எனத் தள்ளாமல், அவற்றை ஒரு உண்மையின் உருவகமாகக் கருதி அணுகவேன்டும். அவற்றில் பொதிந்துள்ள ஆழ்ந்த கருத்துக்களை வெளிக்கொணரவேண்டும். இந்த விஷயத்தில் மேலை நாட்டு உளவியல் துறையினர் நமக்கு மேலே சென்றுவிட்டனர். Carl Jung, Joseph Campbell போன்றோர் இத்துறையில் அரிய ஆராய்சிகள் செய்துள்ளனர். இவை தமிழில் இன்னும் பிரபலமாகவில்லை.
    5. நட்சத்திர மண்டலங்கள், பல நட்சத்திரங்கள் ஆகியவற்றுக்கான இந்தியப் பெயர்கள் நம்மவருக்குத் தெரியவில்லை. அவற்றின் ஆங்கிலப் பெயர் சிலருக்குத் தெரிந்திருக்கலாம், ஆனால் அவர்களால் குறிப்பிட்ட நடசத்திரங்களைக் காட்டமுடியுமா என்பது சந்தேகமே. இது பாட திட்டம் பற்றி நான் கூறியதற்கு ஒரு உதாரணம். 50களில் சென்னைப் பல்கலைக்கழக பாட திட்டங்கள் மாற்றப்பட்டன. அப்போது, அறிவியல் படிப்பவர்களுக்கு சில சமூக இயல் பாடங்களும், சமூக இயல் படிப்பவர்களுக்கு சில அறிவியல் பாடங்களும் Minor subjects என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் ஒன்று வானவியல்-Astronomy பற்றீயது. அப்போது எங்கள் புரொஃபசர் சில
    நட்சத்திரங்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் இரவில் வானத்தில் காட்டுவார். இன்று இந்த நிலை மாறிவிட்டது. பல ஊர்களிலும் நட்சத்திரங்களே தெரியாத அளவுக்கு வானம் புகையாலும் புழுதியாலும் மூடிக்கிடக்கிறது. இன்று வானவியலும் அவ்வளவாகப் படிப்பதில்லை. அதனால் நாளடைவில் நமது இந்தியப் பெயர்கள் மறைந்து அன்னியப் பெயர்களே நிலைத்துவிடும் அபாயம் இருக்கிறது- அரேபிய எண்கள் மாதிரி.
    நமது திருமணங்களில் அருந்ததி காட்டுவது என்று ஒரு சடங்காவது இருந்தது. இன்று அதுவும் நடப்பதில்லை!

    நம் பாடதிட்டத்தில் நம் ஊர் மரம், செடி கொடிகளின் பெயர்களே தெரியவில்லை, பெயர் தெரிந்தாலும் அவற்றை அடையாளம் காண்பதும் கடினம். சங்க இலக்கியத்தில் வரும் பல மலர்களையும் அடையாளம் காண முடியுமா? வானவியலைப் பற்றி என்ன சொல்வது!

    இந்த விஷயங்களைப்பற்றி எந்தப் புத்தகமும் தமிழில் வந்திருப்பதாகத் தெரியவில்லை.

  2. Calculating Rama’s rule in scientific way is interesting. Patanjali has also worked out in this way; but he has arrived at a different figure; whatever it may be, it shows that even before two thousand years they approached the number issue in a scientific way.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: