உரிச்சொல் நிகண்டு எனும் வெண்பா நூலை இயற்றியவர்! (Post No.7001)

WRITTEN BY S Nagarajan

swami_48@yahoo.com


 Date: 22 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-35

Post No. 7001


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ச.நாகராஜன்

கொங்குமண்டல சதகம் 91ஆம் பாடலில் ஒரு அரிய செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

அலைகடல் சூழு மவனியிற் செந்தமி ழாய்பவர்கள்

நலனுறத் தக்க வகையாக வுள்ள நனிமகிழ்ந்தே

இலகு முரிச்சொ னிகண்டுவெண் பாவி நிசைத்தகலை

வலவெழிற் காங்கேயன் வாழுமோ ரூர்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : தமிழிலக்கியம் கற்பவர்கள் எளிதில் பாடம் செய்யவும், தெரிந்து கொள்ளவும் உதவியாகும் படி உரிச்சொல் நிகண்டு என வெண்பாவினால் ஆன நூலைச் செய்து உதவிய காங்கேயன் என்பவன் வாழும் மோரூருங் கொங்கு மண்டலம் என்பதாகும்.

பலதலைதேர் காங்கேயன் பட்ட முடையான்

உலகறியச் சொன்ன வுரிச்சொல் – (உரிச்சொல் நிகண்டு)

என்றும்

முந்து காங்கேய னுரிச்சொல் – (ஆசிரிய நிகண்டு)

என்றும்

பெருத்த நூல்பலவுஞ் சுருக்கித் தமிழில்

உரிச்சொல் நிகண்டென உரைத்த காங்கேயன் –     

                (பாம்பணகவுண்டன் குறவஞ்சி)

என்றும் இப்படிப் பலபட நூல்கள் காங்கேயன் இயற்றிய உரிச்சொல் நிகண்டு பற்றிக் குறிப்பிடுகின்றன.

ஆனால் காங்கேயன் என்ற பட்டப்பெயரை உடைய இவர் யார் என்பது தெரியவில்லை.

கங்கைக் குலத்தவரான வேளாண்டலைவைருக்குக் காங்கேயன் என்ற பட்டப் பெயரிட்டு அரசர் அழைத்திருக்கின்றனர் போலும்.

புதுவைக் காங்கேயன், ஆட்கொண்ட காங்கேயன் என்னும் பெயர் கள் வழங்கி வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

வேறொருவர் தான் இந்த உரிச்சொல் நிகண்டை இயற்றினார் எனக் கூறுவதுமுண்டு.

கொங்குமண்டல சதகத்துள்  54 மற்றும் 94 ஆகிய பாடல்கள் இம்மோரூர்க் காங்கேயர்களையே குறிப்பிடுகின்றன.

இவர்களுக்கு இம்முடி என்ற பட்டப்பெயர் இருக்கிறது.

காங்கேயர்களைப் பற்றிய சிறப்புக்களை கொங்குமண்டல சதகத்துள் கண்டு மகிழலாம்.

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: