

WRITTEN BY London Swaminaathan
swami_48@yahoo.com
Date: 23 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 6-51 a m
Post No. 7003
Pictures are taken from various sources;
beware of copyright rules; don’t use them without permission; this is a non-
commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs
11,000.









வாழ்க்கை பற்றி கீட்ஸ் எழுதிய வரிகளை கண்ணதாசன் பாடலுடன் ஒப்பிடலாம்
John Keat’s Poem Sleep and Poetry
(Lines 85-95)
Stop and consider! life is but a day; |
A fragile dew-drop on its perilous way |
From a tree’s summit; a poor Indian’s sleep |
While his boat hastens to the monstrous steep |
Of Montmorenci. Why so sad a moan? |
Life is the rose’s hope while yet unblown; |
The reading of an ever-changing tale; |
The light uplifting of a maiden’s veil; |
A pigeon tumbling in clear summer air; |
A laughing school-boy, without grief or care, |
Riding the springy branches of an elm. |
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ… ஒஹோஹோ…
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்
——போனால் போகட்டும் போடா
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
—போனால் போகட்டும் போடா
…
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞடா
—-போனால் போகட்டும் போடா
திரைப்படம்: பாலும் பழமும் (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்
xxxx
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பருவமென்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
பருவமென்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்
……………ஆசையே
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா முதுமையே சுகமா
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்
…………………..ஆசையே
சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ
சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்
…………………..ஆசையே
படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்


R.Nanjappa (@Nanjundasarma)
/ September 23, 2019ஆங்கிலக் கவிஞர்களில் இளவயதிலேயே அமரானாலும் காலத்தால் அழியாத கவிதைகளைப் புனைந்தவர் ஜான் கீட்ஸ். A thing of beauty is a joy for ever என்ற இவரது வரி அழியாப் புகழ் பெற்றது. [ சத்யம், சிவம்] சுந்தரம் என்று நாம் நமது மரபில் கொண்டாடும் நிலையில் வைத்து மதிக்கப்படும் கருத்து.
டாக்டர் தொழிலுக்குப் படித்தும், பயிற்சிபெற்றும் சிலகாலம் அத்தொழில் புரிந்தும் பின்னர் கவிஞர் எழுத்தாளர்களாகிப் புகழ் பெற்றவர்கள் பலர். இதில் குறிப்பிடத் தக்கவர்கள்:
ஆலிவர் கோல்ட்ஸ்மித். [Oliver Goldsmith] இவர் கவிஞர்- கதை-நாடக ஆசிரியர்-கட்டுரையாளர். இவர் எழுதிய The Deserted Village என்ற நீண்ட கவிதை 18ம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்துவந்த தொழிற்புரட்சி இங்கிலாந்தின் வாழ்க்கைமுறையையும் அமைதியையும் எப்படிக் குலைத்தது என்பதை விவரிக்கிறது. இன்று இந்தியாவில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கிறது!
ஸர் ஆர்தர் கானன் டாயில் : Sir Arthur Conan Doyle மிகப் புகழ்பெற்ற ஷெர்லாக் ஹோல்ம்ஸ் துப்பறியும் கதைகளை எழுதி புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்தவர். நாம் பள்ளிக்கூட நாட்களில் படித்துமகிழ்ந்த தமிழ்வாணனின் ‘சங்கர்லால்’ கதைகள் இதன் அடிப்படையில் தோன்றியவையே!
ஃஜேன் க்ரே :Zane Grey : இவர் பல்மருத்துவராக இருந்தார். அமெரிக்காவின் மேற்குப் பகுதி விஸ்தாரம்- ஆக்ரமிப்பு [ American West- Frontier ]பற்றிய கதைகளை எழுதி உலகப் புகழ் பெற்றார்.
ஏ.ஜே. க்ரோனின் A.J.Cronin: லண்டனில் செல்வாக்குமிக்க பகுதியில் டாக்டராகத் தொழில் பார்த்த இவர். மிகச்சிறந்த நாவலாசிரியரானார். இங்கிலாந்தின் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலைசெய்த தொழிலாளர்களின் அவல நிலையையும் அவர்களின் ஆரோக்யச் சீர்கேட்டையும் பற்றி எழுதி, எப்படி டாக்டர்கள் அவர்களைச் சரியானபடி கவனித்துக்கொள்வதில்லை என்பதையும் விளக்கினார். இதன் அடிப்படையில்தான் பிரிட்டனின் தேசிய மருத்துவ நலத்துறை உருவாயிற்று.
ஆன்டன் செகாவ் Anton Chekov உலகின் மிகப்புகழ் பெற்ற ரஷ்ய சிறுகதை எழுத்தாளர்.
சாமர்செட் மாம் Somerset Maugham : புகழ் பெற்ற கதாசிரியர். டாக்டராகத் தொழில் தொடங்கியும் முதல் நாவலே வெற்றிபெற்றதும் முழு நேர எழுத்தாளரானார்.
இப்படி இன்னும் பலர் இருக்கின்றனர்.