காந்திஜியிடம் புரபஸர் கீதையைப் பற்றிக் கேட்ட கேள்வி! ( (Post No.7080

Written by S Nagarajan


swami_48@yahoo.com

Date: 10 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-23
Post No. 7080

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ச.நாகராஜன்

காந்திஜி ஒரு கர்மயோகி. கீதை வழி நடப்பவர்.

அவரைப் பார்க்க ஆசிரமத்திற்கு ஒரு பேராசிரியர் வந்தார்.

அவரை வணங்கிய புரபஸர், “நீங்கள் கீதையை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு தயவுசெய்து கீதையின் சாரத்தை விளக்க முடியுமா?” என்று கேட்டார்.

அவரை உற்று நோக்கிய காந்திஜி, “புரபஸர், எனக்காக ஒன்றை நீங்கள் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக” சந்தோஷத்துடன் கூறினார் புரபஸர்.

முற்றத்தில் குவிந்து கிடந்திருந்த செங்கல் அடுக்கை அவரிடம் காண்பித்த காந்திஜி, “இதை தயவுசெய்து எதிர்ப் பக்கம் போட்டு விட முடியுமா?” என்றார்.

திகைத்தார் புரபஸர். திக்கித் திணறியவாறே, “ உம், நான் உங்களிடம் முக்கியமான ஒரு  கேள்வியைக் கேட்டேன். அதற்கு நீங்கள் மட்டும் தான் பதில் கூற முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.

“ஆம், அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்.இப்போது தயவு செய்து அந்த செங்கல்களை…” காந்திஜி இழுத்தார்.

புரபஸருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. குழப்பமடைந்தார். ஆனால் மஹாத்மா சொன்னபடி செய்ய விழைந்தார்.

 செங்கற்களை எடுத்து எதிர்ப்பக்கம் கொண்டு சென்று அடுக்கினார்.

வேர்த்து விறுவிறுக்க காந்திஜியிடம் வந்த புரபஸர், ‘வேலை முடிந்து விட்டது’ என்று கூறினார்.

காந்திஜியே நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

“அடடா, இப்படிச் செய்யச் சொல்லவில்லையே நான்!” என்று ஆச்சரியப்படும் குரலில் கூறினார் காந்திஜி.

“நான் எதிர்ப்பக்கம் என்று சொன்ன போது நேர் எதிரில் என்று சொல்லவில்லை. அந்த மூலையில் எதிர்ப்பக்கத்தில் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.. அதொ அந்த வடக்குப் பக்க மூலையில்…”

பெருமூச்சு விட்ட புரபஸர், “அதனால் என்ன, இதோ அந்தப் பக்கம் போட்டு விடுகிறேன்” என்று மறுபடியும் தன் வேலையை ஆரம்பித்தார்.

அவருக்கு மேலும் கீழும் மூச்சு வாங்க ஆரம்பித்தது. கைகளில் எல்லாம் சிராய்ப்பு. முதுகில் வலி.

காந்திஜியிடம் மீண்டும் வந்த அவர், “பாபுஜி, வேலை முடிந்து விட்டது, இப்போது நீங்கள் என் கேள்விக்கு…” என்று சொல்ல ஆரம்பித்த போது  இடைமறித்தார் காந்திஜி.

“இந்த மூலையில் இருக்கும் செங்கல்கள் தோட்டத்திற்குப் போகும் வழியை அல்லவா அடைக்கிறது. இதை கிழக்குப் பக்க மூலையில் போட்டு விடலாமே” – காந்திஜி புரபஸரை நோக்கி இப்படிக் கூறினார்.

தனது நிதானத்தை இழந்த புரபஸர், “முதலில் அந்த இடத்தில் தானே இவை இருந்தன! நான் ஒரு புரபஸர், பாபுஜி!  உங்களிடம் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண வந்தேன். ஆனால் நீங்களோ என்னை கேவலம் ஒரு கூலி வேலைக்காரன் போல நடத்துகிறீர்கள். ஒரு வேளை  நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியாது என்று எண்ணுகிறீர்களோ அல்லது உங்களால் கீதையின் சாரத்தை நான் புரிந்து கொள்ளும்படி விளக்க முடியாதோ..” எனப் பொங்கினார்.

“அன்புள்ள நண்பரே, நான் உங்களுக்கு நடைமுறை விளக்கத்தை அல்லவா இப்போது அளித்தேன். கீதையின் முக்கியமான உபதேசத்தில் அல்லவா உங்களை ஈடுபடுத்தினேன் இவ்வளவு நேரமும்” என்ற காந்திஜி, “ கீதையின் சாரம் இது தான் – உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை  செய்யுங்கள். வேறு எதையும் நாடிச் செல்லாதீர்கள்” (Gita’s Central Teaching : –  Do your allotted task. Do not seek anyting else) என்று முடித்தார்.

*

அருமையான இந்த சம்பவத்தை ஜே.பி. வாஸ்வானி கீதையை விளக்கும் தனது  புத்தகமான The Seven Commandments of the Bhagavad Gita என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

அது என்ன செவன் கமாண்ட்மென்ட்ஸ்?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

***

Gandhiji in Mauritius- Puvana Sharma’s Picture
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: