
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 OCTOBER 2019
Time in London – 18-35
Post No. 7162
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Vitamin Tablets to Students
1992ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நான் எழுதிய கட்டுரை மாணவர் அறிவு வளர வைட்டமின் (விட்டமின் என்றும் உச்சரிக்கலாம்) மாத்திரைகள் உதவுமா என்று பிரிட்டனில் நடந்த ஒரு சுவையான வழக்கு பற்றியதாகும்.
சுவையான வழக்கு இது. படியுங்கள்










R.Nanjappa (@Nanjundasarma)
/ November 1, 2019இன்றுவரை இத்தகைய நம்பிக்கைகளும் அது தொடர்பான சர்ச்சைகளும் இருந்துவருகின்றன. மருந்து மாத்திரைகளினால் ‘அறிவு’ த்திறன் கூடாது. ஆனால் ஊட்டச்சத்து குறைந்துள்ளவர்களுக்கு உடல் வலிவு கூட இத்தகைய மருந்து மாத்திரைகள் உதவுகின்றன. மனோதைரியமும் வளரும் வகையில் சில மருந்துகள் இருக்கின்றன.ஞாபக சக்தியை ஊக்குவிக்கவும் சில மருந்துகள் தரப்படுகின்றன. இக்காலத்தில் சில ஆயுர்வேத மருந்துகளும் இப்படி விற்கப்படுகின்றன. தூக்கம் வராமலிருக்கவும் ,படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளவும் ( தாற்காலிகமாக) சிலர் சில மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இத்தகைய மருந்துகளைப் பயன்படுத்துவதை நான் அறிவேன்.
இந்த I.Q விவகாரம் சிக்கலானது- அரசியல் கலப்புள்ளது. இது மேலை நாடுகளின் கண்டுபிடிப்பானதால் இதில் மேலை நாகரிகத்தின்-பண்பாட்டு, பழக்க வழக்கங்களின் தாக்கம் அதிகம், இதில் கேட்கப்படும் கேள்விகள் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தாது. அதனால் இந்த அடிப்படையில் ஒருவரின் அறிவுத்திறனை அளக்க முடியாது.
இதில் இன்னொரு நுண்ணிய அம்சமும் இருக்கிறது. ஒருவருக்கு IQ அதிகம் என்று இருந்தாலும் அவர் எல்லாவித படிப்புக்கும் ( all subjects) தகுதியானவர் எனக் கருத முடியுமா? முடியாது என்பதே நடைமுறையில் நாம் காண்கிறோம்.
இந்த அறிவுத் திறன் என்பது என்ன? இதைப்பற்றியே ஒரு திடமான கருத்து இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் திறமை இருக்கிறது. ஒருவருக்கு கணக்கு எளிதாக வருகிறது, ஒருவருக்கு இசை சுலமாக வருகிறது- ஆர்வத்துடன் திறமையும் இருக்கிறது; ஒருவருக்கு மொழிகளை கற்கும் திறன் இருக்கிறது, ஒருவருக்கு சித்திரம் வரைவதில் திறமை இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இது அத்தனையும் அறிவுத்திறனின் வெளிப்பாடுதான். இந்தத் திறமைகள் எல்லாம் ஒருவரிடமே அமைந்திருக்கும் எனச் சொல்லமுடியாது. ஆனல் நமது கல்விமுறையில் இவற்றைத் தனித்தனியே கண்டு ஊக்குவிக்கும் செயல்பாடு இல்லை. பல விஷயங்களையும் கலந்துகட்டி குழப்பி குழந்தைகளைக் கொடுமைப் படுத்துகிறோம். பொறி இயல் மருத்துவம் படிப்பவர்கள் தான் ஏதோ அதிபுத்திசாலிகள் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.
பொதுவாக ஒருவரின் மூளையில் வலது-இடது என இருபகுதிகள் இருக்கின்றன. இடது பக்கம் சார்புடையவர்கள் analytic, logical என்ற வகையில் திறமையுடையவர்களாக இருப்பார்கள். வலது பக்கம் சார்புடையவர்கள் கலையுணர்வும் திறமையும் உடையவர்களாக இருப்பார்கள் . இவற்றை
சமீப காலத்தில் மேலும் விஞ்ஞான முறையில் ஆராய்ந்து விடை கண்டவர் Howard Gardner என்ற அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக் கழக உளவியல் துறை அறிஞர். அறிவுத்திறன் என்பது பொதுப்படையான விஷயம் அல்ல- இதில் பல அம்சங்கள் இருக்கின்றன. ஒருவரின் அறிவு எட்டு விதமாக, எட்டுத் துறைகளில் வெளிப்படுகிறது , ஒவ்வொன்றும் பிரதானமானது தான், அதனால் ஒன்றை மட்டுமே முக்கியமானதாகக்கொண்டு ஒருவரை அறிவாளியெனவும் மற்றொருவரை அறிவுகுறைந்தவரெனவும் எடைபோடக்கூடாது என்று சொன்னார் கார்ட்னர். 1983ல் இவர் எழுதிய “Frames of Mind: The Theory of Multiple Intelligences,” என்ற புத்தகத்தில் இவற்றை விளக்கியிருக்கிறார். பின்னரும் பல புத்தகங்களில் இக்கருத்துக்களை மேலும் விளக்கியிருக்கிறார். இக்கருத்துக்கள் அமெரிக்காவில் பல கல்வித்துறை அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாடத்திட்டமும் அவ்வாறே வகுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதெல்லாம் இந்தியாவிற்கு விரைவில் வராது!
இதெல்லாம் நமக்கு ஓரளவு தெரிந்த உண்மைதான். ஒரு சொந்த அனுபவம் சொல்கிறேன். 1952ம் வருஷம். எங்கள் ஊரில் உயர் நிலைப் பள்ளியில் [ Board High School] முதல் ஃபாரத்தில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வு வைத்தார்கள். தமிழ் , கணக்கு என்ற இரண்டு பாடங்களில் தேர்வு. தலைமை ஆசிரியர் பரிட்சையில் தேறியவர்களின் பட்டியலை வாசித்தார். முதலில் இரு பாடங்களிலும் தேறியவர்களின் பெயர்களைப் படித்தார். பிறகு , ” ஒருவனே இந்த இரண்டு பாடங்களிலும் தேர்ச்சிபெற்றிருப்பான் எனச் சொல்லமுடியாது- சிலருக்கு கணக்கு நன்றாக வரும் , சிலருக்கு தமிழ் நன்றாக வரும்; அதனால் யார் எந்தப் பாடத்தில் தேறியிருந்தாலும் அவர்களையும் எடுத்துக்கொள்வேன்” எனச் சொன்னார்! கணக்கில் தேறியவர்கள், தமிழில் தேறியவர்கள் என இரு பட்டியல்களைப் படித்தார்! நான் கணக்கில் பல்டி அடித்து தமிழில் தேறியவன். இத்தனை ஆண்டுகளாகியும் என் மனதில் ஆழப்பதிந்தது இந்த நிகழ்ச்சி. அந்தத் தலைமை ஆசிரியர் பெயர் ஸ்ரீ சதாசிவ உடையார். அவருக்கு பொன்னில் சிலை வடிக்க வேண்டும்! Multiple Intelligence கொள்கையை 67 ஆண்டுகளுக்கு முன்பே நடத்திக்காட்டியவர் .
எதிலும் இந்தியா தன் சொந்தப் பார்வையை இழக்கக் கூடாது.