லண்டன் S.I.S. (எஸ்.ஐ.எஸ்.) நாடக வெள்ளி விழா!(Post No.7181)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 5 NOVEMBER 2019

Time  in London – 14-59

Post No. 7181

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

இன்று நவம்பர் 5, 2019. இதே நாளில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சவுத் இந்தியன் South Indian Society  (United Kingdom)  ஸொஸைட்டியில் ஒரே பரபரப்பு. எங்கள் நாடகம் இனிதே நிறைவேற வேண்டுமே என்ற கவலை. இரவு பத்து மணிக்கு எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். நானும் எனது நண்பர்களும் நடித்த ஹம்ப்டி டம்ப்டி (HUMPTY DUMPTY) நாடகம் பெரிய கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றது. ஏறத்தாழ 6 மாதங்களுக்கு வாரம் தோறும் நண்பர்கள் வீட்டில் ரிஹர்ஸல்/ (REHEARSAL)  ஒத்திகை நடந்தது.

நாடகத்தை எழுதிய கிரிதரும் மதுரைக்காரர். நாங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் வசித்த காலத்திலேயே டாக்டர் சூர்ய நாராயணன், அவரது புதல்வர்கள் டாக்டர் மணி, கவிஞர் கிரிதர் மற்றுறுமுள்ள சகோதரர்களுடன் பழக்கம் உண்டு. அதனாலும்

நான் பி.பி.சி.தமிழோசையின் `பூக்காரி` (TAMIL VERSION OF BERNARD SHAW’S PYGMALION) நாடகத்தில் நடிகை ராதிகா சரத் குமாருடன் முக்கிய வேடத்தில் (AS PROF. HENRY HIGGINS)  நடித்ததாலும் எனக்கும் நடிக்க அழைப்பு வந்தது. பெர்னார்ட் ஷாவின் பிக்மாலியன் நாடகத்தை பி.பி.சி. சங்கர் அண்ணா தமிழாக்கம் செய்யவே நடிகை ராதிகாவை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து ஒரே வாரத்தில் ரேடியோ ஒலிப்பதிவு செய்தோம். அது சிறப்பாக முடிந்தவுடன் இந்த நாடகம். இது வெற்றிகரமாக முடிந்தவுடம் லண்டன் பாரதீய வித்யா பவனுக்கு நிதி எழுப்ப கிட்நாப் இன் கேளம்பாக்கம் நாடகத்தில் நடிக்க

திருமதி மைத்ரேயி கணேசனிடமிருந்து அழைப்பு வந்தது. இப்படி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுக் காலம் வேலைப் பளுவுடன் நடிக்கும் பளுவும் சேர்ந்து கொண்டது

எனது சுய புராணத்தையும் தற்பெருமைத் தம்பட்டத்தையும் நிறுத்திவிட்டு ஹம்டி டம்டி நாடகத்துக்கு வருகிறேன். இதன் மூலம் சவுத் இந்தியன் சொசைட்டிக்கு சில ஆயிரம் பவுண்ட் நிதி கிடைத்தது( செலவு போக).

எனக்கு ராம்லால் ஷேட்ஜி வேஷம். என் நண்பர்கள் சிவ சங்கரன், ராம்தாஸ் ஆகியோருக்கு மகாதேவன் ,சகாதேவன் வேஷம். ஆடிட்டர் ஜெகந்நாதனு க்கு 4 வேடங்கள். பெண்களில் முக்கிய கதா பத்திரம் ஜில்ஜில் தேவி மாதாஜி; அதை செவ்வனே செய்தவர் திருமதி கல்பனா மூர்த்தி. நாடக ஆசிரியர் கிரிதர், `புலவர் புகழேந்தி`யாக நடித்தார். இது ஒன்றரை மணி நேர முழு நீள நாடகம். இப்போதெல்லாம் அந்தக் காலம் போல யாருக்கும் நேரம் கிடைக்கததால் குறு நாடகங்கள் மட்டுமே லண்டனில் மேடை ஏறுகின்றன. ஒன்றரை மணி நேர கதையுள்ள நாடகங்களுக்கு 6 மாதம் தேவைப்படும் (வாரம் தோறும் இரண்டு நாள் ஒத்திகை வீதம்).

இது தீபாவளி நிகழ்ச்சி நாடகம். இதன் தமிழ்ப் பெயர் ‘தில்லுமுல்லு – குல்மால்’.

சாமியார்கள் பெயரில் நடக்கும் மோசடி பற்றிய நகைச் சுவை நாடகம்.

நாடகத்தில் நாங்கள் சேர்த்த நகைச் சுவைக் காட்சிகளுடன் ஆக்ஸிடெண்டாக நகைச் சுவைக் காட்சிகளும் ஏற்பட்டன. ஜில்ஜில் தேவி மாதாஜிக்கு நாங்கள் போட்ட ஆசன மேடை சரியவே புது வசனக்களை சேர்த்து சமயோஜிதமாக சமாளித்தோம். எங்களுக்கும் சிரிப்பு! வேடிக்கை பார்த்த ரசிகர்களுக்கும் சிரிப்பு!!

இந்த நாடகத்துக்கு உறுதுணையாகவும் ஊற்றுணர்ச்சியாகவும் நின்றவர்கள் அப்போதைய ஸாஈஸ் டலைவர் டாக்டர் ஐயங்காரும். அவரது மனைவி சித்ரா ஐயங்காரும் ஆவர். சித்ரா ஐயங்கார் பார்கவியாக நடித்தார். ரிஹர்ஸல் நேரத்தில் கல்பனா மூர்த்தியுடன் சேர்ந்து இன்சுவை திண்பண்டங்கள் படைப்பார். டாக்டர் ஐயங்கார் கடை, கடையாக ஏறி இறங்கி ஏராளமான விளம்பரங்களைச் சேகரித்தார். அவருடன் சென்று விளம்பரம் வாங்கி அதை வடிவமைத்துக் கொடுத்தவர் கிழக்கு லண்டன் பாரஸ்ட்கேட் திருமதி லதா ஐயர்.சிறிய ப்ரோஷரில் முப்பதுக்கும் மேலான விளம்பரங்கள்!!

ஆக ஒரு சிலர் நடிப்பினால் மட்டுமின்றி ஏராளமானோரின் முயற்சியால் சிறந்தது இந்த நாடகம். அப்போதைய கமிட்டி மெம்பர்களின் விவரத்தையும் நாடகத்துகு உதவி செய்தோரின் பட்டியலையும், நடிகர், நடிகையர் விவரங்களையும் இத்துடன் இணத்துள்ளேன்.

ஒரு சோகச் செய்தி:– இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்த ராம்தாஸ் சென்ற மாதம் இறந்துவிட்டார். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமதி மங்காளம் மாத்ருபூதம் இறந்தார்.

நான் இரண்டு பீரோக்கள் முழுதும் சேர்த்து வைத்த 40 ஆண்டு பேப்பர் கட்டிங் (PAPER CUTTINGS) குகளையும் ஆராய்ச்சிக் குறிப்புகளையும் களைந்து வருகிறேன் அப்போது கிடைத்த நாடக விஷயத்தைக் கண்டு வியந்தேன் 25 ஆண்டுகள் உருண்டோடிவிடன!!

லண்டனில் தமிழர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தபோது நாடகக் கொடி பறக்கவிட்ட சீதா மாமி, முரளிராவ், சர்மா மாமா, காந்தன், கோடீஸ்வரன் ஜெயஸ்ரீ லக்ஷ்மிகாந்த்  ஆகியோர் எங்களுக்கு ஊக்குவிப்பும் உற்சாகமும் தந்தனர்.

எங்களில் எவருக்கும் பெயரிலோ புகழிலோ ஆசையே இல்லை (!!!  ???) என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லட்டுமா? இந்த நாடகத்தின் போட்டோ யாரிடமும் இல்லை. எடுக்கவே இல்லை போலும். அந்தக் காலத்தில் சிலர் காமெராவுடன் உலவினர். அவர்களாலும் போட்டோவையோ வீடியோவையோ கண்டுபிடிக்க முடியவில்லை; மொபைல் போன், ஐ பேட் (MOBILE PHONES, I PAD)  கிடையாது. . நல்ல வேளை என்னிடம் மட்டும் ப்ரோஷர் BROCHURE  இருந்தது! மற்றவர்களிடம் அதுவும் இல்லை. எங்களுக்குப் பெயரிலோ புகழிலோ ஆசை இல்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்!!!???

நாடகத்தோடு தீபாவளி விருந்தும் சேர்ந்ததால் மேலும் சுவை கூடியது.

உதவியோர் அனைவருக்கும் நன்றி. சங்கத்தின்  கமிட்டிக்கும் நன்றி.

வாழ்க S.I.S.! வளர்க தமிழ்!!

3 OUT OF 33 ADVERTISEMENTS in S I S DIWALI BROCHURE —-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: