
Written by LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 6 NOVEMBER 2019
Time in London – 17-29
Post No. 7185
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
உலகெங்கிலும், குறிப்பாக வட கோளார்த்தத்தில் (Northern Hemisphere) , பனிக்காலத்தின் போது சொக்கப்பனை (Bonfire) கொளுத்துவது வழக்கம். நம்முடைய தீபாவளி, கார்த்திகையை ஒட்டி இது வரும். இதற்கு இரண்டு காரணங்கள்:
மக்கள் குளிர் காய ஒரு வாய்ப்பு; பழைய பொருட்களை அகற்றவும் ஒரு வாய்ப்பு
இரண்டாவதாக பயிர்களை அழிக்கும் பூச்சிகள் தாமாகவே வந்து தீயில் விழுந்து தம்மை அழித்துக் கொள்ளூம். இதனால் பயிர் வளம் பெருகும்.
கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னரே உள்ள வழக்கங்களை அழிக்க முடியவில்லை. ஆகையால் பழைய வழக்கங்களுடன் புதுக்கதைகளை இணைத்து பிரிட்டனிலும் பிற நாடுகளிலும் ஈஸ்டர், கை பாக்ஸ் டே (Easter, Guy Fawke’s Day) முதலியவற்றைக் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் மரம், சாண்டா கிளாஸ் (Christmas Tree, Santa Claus) என்பனவும் கிறிஸ்தவ மதத்துக்குத் தொடர்பில்லாதவை. இது பற்றி முன்னரே கட்டுரை எழுதிவிட்டேன். 1992 நவம்பர் 15 தினமணியில் நான் எழுதிய கட்டுரை – “இங்கிலீஷ் தீபாவளி”. படித்துப் பாருங்கள். நேற்று நவம்பர் 5ம் தேதியும் பிரிட்டனில், குறிப்பாக லண்டனில், பட்டாஸ் சப்தம் காதைப் பிளந்தது
நாம் ராம்லீலா, தசராவில், அசுரர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது போல அவர்களும் தீயோரின் உருவ பொம்மைகளை எரிப்பர்.










