
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 8 NOVEMBER 2019
Time in London – 11-54 am
Post No. 7192
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

1992ம் ஆண்டில் தினமணியில் இதாலிய கிறிஸ்தவப் பேய்களின் அட்டஹாசம் பற்றியும் பேய் ஓட்டுபவரே தன்னால் என்னவும் செய்ய முடியாது என்று சொன்னதையும் வெளியிட்டேன். இப்போதைய நிலவரம் இதாலியில் ரோம் நகருக்குள் இருக்கும் வாதிகன் சிட்டியில் வசிக்கும் போப்பாண்டவருக்குத்தான் தெரியும்! நிற்க.
இது ஒரு புறமிருக்க ஒவ்வொரு ஆண்டும் மேலை நாடுகளில் கொண்டாடப்படும் பேய்கள் தினமான அக்டோபர் 31ம் தேதி பேய் வீடுகள் பற்றிய புதிய தகவல்களை பத்திரிக்கைகள் வெளியிடும். இதை ஹாலோவின் தினம் என்றும் அழைப்பர்.
வழக்கமாக லண்டனில் லூயிஷாம் பகுதியில் வசிக்கும் பேய்தான் ஜெயிக்கும் . ஆனால் இந்த ஆண்டு லண்டனிலிருந்து 3 மணி தூர ரயி பயண தொலைவில் உள்ள பர்மிங்ஹாம் நகர பேய் முதல்டம் பெற்றுவிட்டது!
அதிசய சக்திகளை ஆராயும் குழுவினர் பர்மிங்ஹாம் நகரிலுள்ள ஆஸ்டன் ஹால் என்னும் கட்டிடத்தை நாட்டின் அதிபயங்கரப் பேய் வீடு என்று அறிவித்துள்ளனர். காரணம் என்ன?
ஒரு வேலைக்காரனுடன் ஓடிவிட எண்ணிய பெண்ணை அவருடைய தந்தை 16 ஆண்டுகள் சிறை வைத்த வீடு இது. அவளுடைய பெயர் மேரி ஹாட்டி. அவள் சாம்பல் நிர பேயாக அங்கே உலவுகிறாள். அத்தோடு வேலைக்காரன் பச்சை நிற உடை அணிந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கிறான்.
இந்தப் பேய்வீடுகளை தேசிய பாரம்பர்ய முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத்தில் சேர்த்திருப்பதால் தேசீய லாட்டரி நிதி உதவி வேறு கிடைத்து இருக்கிறது. பேய்ய்களுக்குக் கூட நிதி உதவி!!
தென் கிழக்கு லண்டனில் லூயிஷாமில் உள்ள மாளிகையும் பெக்கன்ஹாம் பூங்காவும் (Beckenham Place Park and Mansion in Lewisham, London) இரண்டாவது இடத்தைப் பிடித்த பேய் வீடுகள். அங்கு முக்காடு அணிந்த பேய் ஒன்று ஏரியின் மேல் காட்சி தருகிறது இது தவிர சிப்பாய் பேய்கள், பள்ளி மாணவ மானவி பேய்களும் காட்சி தருகின்றன.
மூன்றாவது இடம்
வட அயர்லாந்து எஸ்பி கோட்டையில் (Castle Espie Wetland Centre in Northern Ireland) உள்ள பெண் பேய், ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் பேய் ஆகும். உதவி செய்யுங்கள் என்று அலறுவாள். கையில் ஒரு லாந்தர் விலக்கு ஏந்தி வருவாள். ஆயினும் அருகில் போனால் மரத்துக்குப் பின்னர் மறைந்து ஓடி விடுவாளாம்.
லண்டனில் க்ராய்டன் பகுதியில் சர் வால்டர் ராலேயின் பேய், முதலாம் எலிஸபெத் மஹாராணியின் பேயுடன் குதிரை சவாரி செய்கிறது. ஆனால் எலிசபெத் மஹாராணிக்குத் தலை இல்லை ( (இப்போது ராணியாக உள்ளாவர் இரண்டாம் எலிசபெத்) பேய் மஹராணி சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். சர் வால்டர் ராலே மர்ன தண்டனையில் உயிர் இழந்தவர்.
இந்தப் பேய்களால் சுற்றுலா வளர்ச்சி பெறுகிறது. பகல் நேரத்தில் எல்லோரும் வருகின்றனார். இரவு நேரத்தில் பேய்ப் பிரியர்களும் பேய் ஆராய்ச்சியாளர்களும் வருகின்றனர்.



இதோ முழுப்பட்டியல் (ஆங்கிலத்தில்)—
The Top Ten Haunted Historic Sites 2019
1. Aston Hall, Birmingham – home to Dick the houseboy who hanged himself after being accused of stealing
2. Beckenham Place Park and Mansion, Lewisham – home to a hooded ghost who floats on the lake
3. WWT Castle Espie Wetland Centre, Northern Ireland – home to a Victorian girl carrying her baby
4. Tamworth Castle, Staffordshire – home to the Black Lady, a 9th Century nun who returned to avenge herself
5. Beddington Park & The Grange (Carew Manor), Croydon – home to ghosts of Sir Walter Raleigh and Queen Elizabeth
6. Tower of London – residents include Thomas A. Beckett and Anne Boleyn
7. Ruthin Gaol, Wales – home to Josephine, a spirit who moves objects
8. Muncaster Castle, Cumbria – home to the ghost of Tom Fool, a notoriously cruel court jester
9. Llancaiach Fawr Manor, South Wales – home to Mattie, a former maid who burned to death in an accident
10. Swanbourne Area, Buckinghamshire – home to a ghost dressed in a long black cape and black hat
பேய்கள் வாழ்க சுற்றுலா வளர்க
