
English version included
Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 17 NOVEMBER 2019
Time in London – 7-23 AM
Post No. 7223
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
வரலாற்றின் அற்புதமான ஏடு இது!
வருடம் 1555. ஆயிரத்தி ஐநூறுகளில் பல நாடுகளைப் பிடித்து தனது காலனி ஆக்குவதில் போர்த்துகீசியர் உச்ச கட்டத்தை எய்தி இருந்த காலம் அது.
காளிகட்டில் ஜமோரின்களை அழித்து, பீஜப்பூர் சுல்தானைத் தோற்கடித்து, குஜராத் சுல்தானிடமிருந்து டாமனைக் கைப்பற்றி, மைலாபூரில் தனது காலனியை ஸ்தாபித்து, பாம்பேயை தமது வசமாக்கி, கோவாவை தமது தலைமையகமாக்கிய போர்த்துகீசியரின் காலம் அது. எதிர்ப்பார் யாருமின்றி, கபாலீஸ்வரர் கோவிலையே இடித்து அங்கு ஒரு சர்ச்சை அவர்கள் நிர்மாணிக்க இருந்த சமயம்.
அடுத்த குறி மங்களூர். அது லாபம் தரும் ஒரு துறைமுகம் ஆயிற்றே!
ஆனால் அவர்களின் துரதிர்ஷ்டம், மங்களூரிலிருந்து 14 கிலோமீட்டர் தெற்கே உள்ளல் என்ற ஒரு சிறு பகுதியை முப்பதே வயதான வீரப் பெண்மணி அப்பக்கா சௌதா ஆண்டது தான்!
அந்த ராணியை அவர்கள் முதலில் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சில படகுகளில் தங்கள் போர்வீரர்களை அனுப்பினர், அதைக் கைப்பற்ற. ஆனால் படகுகளும் வரவில்லை, போர்வீரர்களும் திரும்பி வரவில்லை!
ஒரே அதிர்ச்சி!
கோபத்தில் உறைந்த அவர்கள் இந்த முறை பல கப்பல்களை அனுப்பினர். படைக்குத் தலைவன் அட்மிரல் டாம் ஆல்வாரோ டா சில்வெய்ரா.
அட்மிரல் சீக்கிரமே திரும்பி வந்தான் அடிபட்டு, உதைபட்டு, வெறும் கையுடன்!
உடனேயே, இன்னொரு போர்த்துகீசிய கடற்படை அனுப்பப்பட்டது. இந்த முறை சிலரே காயம்பட்டனர். ஒருவழியாக படை சமாளித்துத் திரும்பி வந்து விட்டது.
உடனே போர்த்துக்கீசியர் மங்களூர் துறைமுகத்தையும் அதைச் சார்ந்த கோட்டையையும் கைப்பற்ற முனைந்தனர். மங்களூரில் இருந்தால் அருகில் உள்ள சௌதாவை ஒரு கை பார்க்கலாமே என்று நினைத்தனர்.
மங்களூர் கைப்பற்றப்பட்டது. ஒரு பெரும் படையுடன் அனுபவம் வாய்ந்த போர்த்துக்கீசிய ஜெனரல் உள்ளலுக்கு அனுப்பப்பட்டான்.
அவனுக்கான உத்தரவு ஒரே வரி தான்! உள்ளலைப் பிடி சௌதாவைப் பிடி!
திட்டம் தீர்க்கமானது தான்!
மிகப் பெரும் படையை – ஆயிரக்கணக்கான வீரர்கள் நவீன ஆயுதங்களைக் கொண்டவர்கள் உள்ள படையை – முப்பதே வயதான ஒரு பெண்மணி தன்னுடன் இருக்கும் சில ஆட்களுடன் எதிர்கொள்ள முடியுமா, என்ன?
போர்த்துக்கீசியர் உள்ளலை அடைந்தனர். பார்த்தால் உள்ளல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்பக்காவை எங்கேயும் காணோம். சுற்றித் திரிந்து பார்த்தவர்கள் உல்லாசமாக இருந்து தங்களது அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்தனர். வெற்றி என்று முழக்கமிடும் தருணத்தில் சௌதா தேர்ந்தெடுத்த தனது இருநூறே போர்வீரர்களுடன் அந்தப் பெரும்படையைத் தாக்கினார்.
ஒரே குழப்பம், கூக்குரல். ஏராளமான போர்த்துக்கீசியர் சண்டை போடாமலேயே உயிரை இழந்தனர்.
ஜெனரல் ஜோஓ பெய்க்ஸோதோ கொல்லப்பட்டான். 70 போர்த்துக்கீசிய வீரர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
அப்பக்கா சௌதா அதே இரவு மங்களூரை அடைந்து மங்களூர் கோட்டையை முற்றுகை இட்டார். கோட்டைக் காவலை உடைத்தார், உள்ளே புகுந்தார்.
போர்த்துகீசிய தலைவனான அட்மிரல் மஸ்கரன்ஹாஸைக் கொலை செய்தார். அங்கிருந்த போர்த்துக்கீசியரை விரட்டி அடித்தார்.
இத்தோடு நிற்காமல், அவர் மங்களூருக்கு வடக்கே நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த குந்தபுரா கோட்டையையும் கைப்பற்ற முனைந்தார்.
வேறு வழி இன்றி போர்த்துக்கீசியர், சௌதாவை விட்டு விலகி இருந்த அவரது கணவருக்கு ஏராளமான பணம் கொடுத்து துரோகம் செய்யத் தூண்டினர்.
சௌதா கைது செய்யப்பட்டார். சிறையில் வைக்கப்பட்டார். அங்கும் அவர் எதிர்க்க ஆரம்பித்தார். சிறையிலிருந்து தப்பி வெளியேறும் சமயம் அவர் கொல்லப்பட்டார்.
முதல் சுதந்திரப்போர் நடந்த ஆண்டான 1857க்குச் சரியாக முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் அடங்கிய ஒரு சேனையுடன் ஜைன மதத்தைச் சேர்ந்த சௌதா போர்த்துக்கீசியரை இப்படி எதிர்த்தார்.
அவரை மறந்து விடலாமா? அவரைப் பற்றி எங்கேனும் நாம் சொன்னோமா? அவர் பெயரை எங்கேனும் சூட்டினோமா?
ஒரு தபால்தலையை வெளியிட்டோம், அவ்வளவு தான்! ஒரு படகுக்கு அவர் பெயரைச் சூட்டினோம், அத்துடன் இரண்டே இரண்டுச் சிலைகளையும் நிறுவினோம்.
அடடா, என்ன ஒரு நன்றி உணர்ச்சி, இந்தியர்களாகிய நமக்கு!!!
அமெரிக்காவோ, அல்லது ஐரோப்பாவாகவோ இருந்தால் இப்படி நடந்திருக்குமா? கொண்டாடி இருப்பார்கள், பாட புத்தகத்தில் இடம் பெற வைத்திருப்பார்கள்.
நாமோ, சண்டையிட்டது அவர் தானா இல்லை உண்மையில் அவர் மகளா என்ற ஒரு வெற்றுச் சர்ச்சையைக் கிளப்பி விவாதித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்!
நமது கூக்குரலிலும் வெற்றுச் சர்ச்சையிலும் ஒரு வெற்றிகரமான வீராங்கனையின் புகழ் மங்கி விட்டது.
அடடா, என்ன ஒரு ஆச்சரியம்…
அப்பக்கா சௌதா ஆச்சரியமா..
அல்லது நாம் தான் ஆச்சரியமா???!!!
நமது நன்றி ட்ரூத் வார இதழுக்கு (TRUTH VOL.87 NO. 28 ;8-11-19)
உரித்தாகுக!
*****
மூலத்தை அப்படியே ஆங்கிலத்தில் கீழே படிக்கலாம்:

Snippets from Social Media
Abbakka Chowta of Ullal and Portuguese Invaders :
This is a nice piece of history. Worth a read.
The year was 1555. Portuguese colonial power was at its peak in the 1500’s. They destroyed Zamorins of Calicut, defeated the Sultan of Bijapur, took away Daman from the Sultan of Gujarat, established a colony in Mylapore, captured Bombay and made Goa as their headquarters. And while they were at it, pretty much unchallenged, they even ruined the ancient Kapaleeswarar Temple to build a Church over it.
Their next target, the super profitable port of Mangalore.
Their only bad luck, just 14 kilometers south of Mangalore was the small settlement of Ullal– ruled then by a feisty 30 year old woman– Abbakka Chowta.
Initially, they took her lightly and sent a few boats and soldiers to capture and bring her back to Goa– those boats never came back.
Shocked and enraged, they sent a huge fleet of ships this time, under the command of much celebrated Admiral Dom Álvaro da Silveira– The admiral soon returned, badly injured and empty handed.
Thereafter, another Portuguese fleet was sent –only a few injured from the crew managed to make it back.
Then the Portuguese went on to capture the Mangalore port and the fort anyways, perhaps planning to tackle Mrs. Chowta from the convenient distance of the Mangalore fort.
After the successful capture of Mangalore, a huge army under João Peixoto, an experienced Portuguese General was sent to Ullal.
The brief was simple: Subjugate Ullal and capture Abbakka Chowta.
The plan was foolproof– there was no way a 30 year old with a few men could withstand the might of an army of thousands with advanced weapons.
The Portuguese reached Ullal and found it deserted. Abbakka was nowhere in sight. They roamed around, relaxed and thanked their stars. Just when they were about to call it a victory – Mrs Chowta attacked with 200 of her chosen men. There was chaos all around and many Portuguese lost their lives even without a fight. General João Peixoto was assassinated, 70 Portuguese were captured and the rest just ran away.
So if you’re Abbakka Chowta, who’s just defeated a large army of aggressors, killed a general, captured fighters and defended her city, what will you do? Rest and enjoy the moment right? Right? No!
Rani Abbakka Chowta, rode with her men towards Mangalore that same night, and laid a siege of the Mangalore fort. She not just broke inside the fort successfully, but assassinated Admiral Mascarenhas the Chief of the Portuguese power there and forced the remaining Portuguese to vacate the fort.
She didn’t just stop at this but went on to capture the Portuguese settlement at Kundapura, a full 100 kms, north of Mangalore. Just to make a point.
The Portuguese finally managed to get back at Abbakka Chowta by convincing her estranged husband, to betray for money. She was arrested and put in the prison where she revolted again and was killed while trying to escape.
Abbakka Chowta was a Jain who fought against the Portuguese with an army comprising of both Hindus and Muslims, a full 300 years before the First War of Indian Independence in 1857.
What did we Indians do to her, as a mark of our respect and gratitude? We just forgot her.
We didn’t name our girls after her. We didn’t even teach her stories to our kids. Yes, we did release a Postal Stamp in her name, named a boat after her and erected 2 statues, yes, just 2 statues in the whole of India for someone
who should be our national hero.
We might have got to read a chapter about even her in our text books, had she been a European or an American.
We Indians are still busy, arguing, if it was actually one of her daughters who fought the battles instead of her. Many talk about her being the last Indian to have the power of the agni-ban. In all this cacophony, our generation has lost a great hero– a great source of inspiration.
Still wondering why you’ve not heard about her yet?
Wonder on…
Source : Thanks to :
TRUTH Weekly, 91. Chowringhe Road Kolkata, – 700020, Annual Subscription : Rs- 100 E-mail: drsnsen@gmail.com
****

Surendhra Kumar Padayatchi
/ November 17, 20191750 களில் இதே போன்றதொரு வீர மங்கை பிரிடிஷார்களை துரத்தியடித்தாள் அவள் பெருமை மிக்க பாண்டிய மன்னர்களின் வம்சத்தில் வந்த ராணி வீரம்மாள் நாச்சியார், சிவகிரி சமஸ்தானத்தின் அரசி, பாவம் இந்த பெருமை மிகு அரசிக்கு தபால் தலை கூட இல்லை, ஏன் இப்படி ஒருவர் இருந்தார் என்று கூட யாருக்கும் தெரியாது.