

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 December 2019
Time in London – 9-38 AM
Post No. 7353
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
மநு நீதி நூல் – Part 46
ஒன்பதாவது அத்தியாயத்தை 16-11-2019-ல் முடித்தோம் . இன்று பத்தாவது அத்தியாயத்தைத் துவங்குவோம் இணைப்பில் முழு சுலோகங்களின் பொருள் உளது. முதலில் சுவையான செய்திகளை புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன்.
please go to swamiindology.blogspot.com for an old Manu Smriti Tamil Book.
இந்த அத்தியாயத்தில் மிக முக்கியமான பொன்மொழி ஸ்லோகம் 63-ல் வருகிறது .
அஹிம்ஸை, உண்மை, பிறர் பொருள் திருடாமை, தூய்மை , புலன் அடக்கம் ஆகியன நான்கு ஜாதிகளுக்கும் பொது என்று அறிவிக்கிறார்.
அதற்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்தது ஸ்லோகம் 62 ஆகும் . பிராமணன், கோ மாதா ,பெண்கள், குழந்தைகளைக் காக்க உயிர்விடுவோர் உயர்நிலையை அடைவர். இது சிலப்பதிகாரத்திலும் வருகிறது. மதுரையை எரிப்பதற்கு முன்னர் இவர்களை மட்டும் வருத்தாதே , தீண்டாதே என்று அக்கினி தேவனுக்கு கண்ணகி கட்டளை இடுகிறார். திருவள்ளுவரும் பிராமணர்களையும் பசுவையும் முதலில் வைக்கிறார். குறள் 560, 1066.
ஸ்லோகம் 65-ல் ஏழே தலைமுறையில் சூத்திரன் பிராமணன் ஆகிவிடுவான் என்கிறார்.
ஸ்லோகம் 69 முதல் 73 வரை மநு ஒரு சுவையான பட்டிமன்றம் நடத்துகிறார் விதை/ஆண் முக்கியமா , நிலம்/பெண் முக்கியமா என்று. இறுதியில் நல்ல நிலத்தில் நல்ல விதை விதைப்பதே சாலச்சிறந்தது என்று தீர்ப்பு வழங்குகிறார் .
இந்த அத்தியாயத்தில் முதல் 70 சுலோகங்களில் கலப்புத் திருமணம், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றி நிறைய ‘வகை’கள் வருகின்றன. அதில் விராத்யர் , திராவிடர், தஸ்யூ , யவனர் காம்போஜர், சகர் முதலியோர் யார் என்று விளக்கப்படுகின்றனர் . ஆயினும் இவையனைத்தும் இன்று நாம் வழங்கும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை . ஏனெனில் வேறு பல தேச பெயர்களும் கலப்புத் திருமண வகைகளில் வருகிறது.
இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
1.மனு நீதி நூலின் இந்த அத்தியாயம் எழுதப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட காலத்தில் கலப்புத் திருமணம் பெருவாரியாக நிகழ்ந்தது. இதை நாம் மகாபாரதத்திலும் காண்கிறோம்.
2.யவனர், திராவிடர், காம்போஜர், சகரர் ஆகியோரும் இந்துக்களே.
முதல் இரண்டு ஸ்லோகங்களில் மூன்று வர்ணத்தினரும் வேதம் படிக்க வேண்டுமென்பது எந்தக் காலம் வரை பின்பற்றப்பட்டது என்பதை ஆராய வேண்டும்.
சுலோகம் 20, 22 –திராவிடர், விராத்யர் பற்றிப் பேசுகிறது. தமிழ்ச் சங்கத்தில் நக்கீரர் முதலிய பிராமணர்கள் விராத்தியர் எனப்படுவர். அவர் சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழிலில் இருந்தார்.
ஸ்லோகம் 25 முதல் கலப்புத் திருமண தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றிப் பேசப்படுகிறது. இவையெல்லாம் இக்காலத்தில் பொருத்தம ற்றதாகிவிட்டன.
ஸ்லோகம் 47 முதல் அவர்கள் செய்யவேண்டிய தொழில்கள் பற்றி வருகிறது.
ஸ்லோகம் 58-ல் ஆர்யன் (ARYAN) அல்லாதான் குணம் பற்றி வருகிறது. இன்று இனப் பொருளில் பயன்படுத்தும் ஆர்யன் அல்ல இது . பண்பாடற்றவன் என்பதே பொருள்- அனார்யன் . என்றால் நாகரீகமற்றவன் என்று பொருள். கிரேக்கர்கள் மற்றவர்களை பார்பேரியன் (BARBARIAN) என்று அழைத்தது போல. இன்று அந்தச்சொல்லின் பொருள் காட்டுமிராண்டி












கடம்பூர்ச்சோழன்
/ December 23, 2019சுலோகம் 58 க்கு விளக்கம் சொல்லுகையில் ஆர்யன் என்பதற்கு நாகரீகமற்றவன் என்று தவறுதலாக் கூறியுள்ளீர்கள்.அநார்யன் என்றால்தீன் நாகரீகமற்றவன் என்று பொருள்.கவனப்பிழைதான்
Tamil and Vedas
/ December 24, 2019Thanks. I will correct it.