ஆகாயத்திலிருந்து விழும் நிக்கல்! (Post No.7497)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7497

Date uploaded in London – 26 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நிக்கல் என்னும் அற்புத உலோகம் – Part 2 (Post No.7497)

ஆகாயத்திலிருந்து விழும் நிக்கல்!

பூமியில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கில் விண்கற்கள் விழுகின்றன. காற்றில் எரிந்தது போ க பூமியில் விழும் கற்களே டன்  கணக்கில் என்பர் விஞ்ஞானிகள்

விண்கற்களில் அதிக அளவு இரும்பும் நிக்கலும் இருப்பதால் இதை கத்திகள் செய்ய நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். இது துருப்பிடிக்காததால் இதை பெரு நாட்டு பழங்குடி மக்கள் வெள்ளி என்று கருதினர். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா பைதுங் என்ற பெயரில் நிக்கல்-துத்தநாக கலப்பு தாதுவை ஏற்றுமதி செய்த்தது. பைதுங் என்றால் வெள்ளை நிற தாமிரம் என்று பொருள் . தாமிரச்  சுரங்கங்களில் கிடைத்த கலவை ஒன்றை ஜெர்மானியர்கள் பேய்த் தாமிரம் என்று அழைத்தனர். அதைக் கண்ணாடிக்கு பச் சை  வர்ணம் ஏற்ற மட்டுமே பயன்படுத்த முடிந்ததால் இந்த அவப்பெயர். நிக்கல் என்பது என்ன என்ற வாதப்  பிரதிவாதங்களை முடிவுக்குக்  கொண்டு வந்தவர் டோர்பெர்ன் பெர்க்மான்  ஆவார். 1775ம் ஆண்டில் இது தனி மூலகம் என்று அவர் அறிவித்தார்.

இப்பொழுது பூமியில் கிடைக்கும் நிக்கலி ன் பெரும்பகுதி ஆகாயத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுவர். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் ஒண்டாரியோவின் சட்பரி (Sudbury, Ontario, Canada) பகுதியில் ஒரு பிரம்மாண்டமான விண்  கல் (மலை) விழுந்தது. இங்கு 20 கோடி டன்  நிக்கல் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்; விண்ணிலிருந்து வந்த  மலை மோதிய வேகத்தில் பூமிக்கடியில் இருந்த நிக்கல் குழம்பும் வெளியேறி யி ருக்கலாம். பூமியின் மத்திய பாகத்தில் இரும்பும் நிக்கலும் சேர்ந்த திரவம் கொதித்துக்கொண்டே இருக்கிறது .  கனடாவில் 1905 ஆம்  ஆண்டு முதல் 17,000 ஓட்டைகள் போட்டு நிக்கல், தாமிரம் முதலியன எடுத்துவருகின்றனர்.

பொருளாதார உபயோகங்கள்

நிக்கலுக்கும் கந்தகத்துக்கும் இடையே ஒருவித காதல் உண்டு. இதனால் நிக்கல் சல்பைடு தாதுவிலிருந்து அதிகமாக நிக்கல் எடுக்கப்படுகிறது. கனடாவின் ஒண்டாரியோ சுரங்கம் மட்டுமே உலகின் 30 சதவிகித நிக்கலை உற்பத்தி  செய்கிறது. இது தவிர அமெரிக்கா , ரஷ்யா, தென் ஆப்ரிக்காவும் அதிக அளவில் நிக்கல் எடுக்கின்றன.

உலகில் தோண்டி எடுக்கப்படும் நிக்கலில் பாதி ஸ்டெயின்லஸ் ஸ்டீல் செய்யப் பயன்படுகிறது. எவர் சில்வர் என்று நாம்  அழைக்கும் இதை இருபதாம் நூற் றாண்டில் ஒரே நேரத்தில் ஜெர்மனியும் இங்கிலாந்தும் கண்டுபிடித்தன . காசுகள், நாணயங்கள் செய்யவும் பெரும்பகுதி பயன்படுகிறது. அமெரிக்காவில் ஒரு காசின் பெயர் நிக்கல்.. 1865ல் செய்த இந்தக் காசில் — 5 சென்ட் நாணயத்தில்– 25 சதம் நிக்கல் ஆகும்.

இனி அதிகம் பயன்படும் நிக்கல் கலப்பு உலோகங்களைக் காண்போம்.

இன் வார் — 64 சத இரும்பு 34 சத நிக்கல் – மீட்டர்கள், கடிகாரத்தின் உட்பகுதிகள் , அளக்க உதவும் டேப்புகள் செய்ய உதவுகிறது. கா ரணம் – வெப்பத்திலும் விரிவடையாத குணம் உடையது.

நிக்ரோம் – நிக்கலும் 22 சத க்ரோமியமும் – டோஸ்டர், மின்சார அடுப்புகளில் பயன்படுகிறது.

மோனெல் – 70 சத நிக்கல், 30 சத தாமிரம் – கப்பல்களில் பயன்படுகிறது.

பிளாட்டினைட் – 46 சத நிக்கல், 54 சத இரும்பு- மின்சார பல்புகளில்

இன்கோ 276 – 57 சத நிக்கல், 16 சத குரோமியம், 16 சத மாலிப்டினம்  – பூமியைத் தோண்டும் கருவிகள்

ஒவ்வொன்றிலும் வேறு சில உலோகங்களும் தேவைக்கேற்ப இடம்பெறும்.

நிக்கல்-காட்மியம் பாட்டரிகள் மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றி பயன்படுத்தப் படுகின்றன. பெயிண்டுகள், மார்ஜரின் (கிரியா ஊக்கியாக ) முதலியன தயாரிக்கும் இடங்களில் இது உபயோகப்படுகிறது.

பூமியிலுள்ள நிக்கல் எல்லாம் மையப்  பகுதியில்  கொதித்துக் கொண்டு இருக்கும் திரவக் குழம்பில் இருப்பதால் நாம் அதை எடுக்க இயலாது. இப்போது நாம் எடுப்பதெல்லாம் விண்வெளியில் இருந்து விழுந்த பாறைகளில் இருப்பதுதான். கடலிலும் 800 கோடி டன் கரைந்து கிடக்கிறது.

நிக்கல் ஆராய்சசி நீடிக்கிறது. சில வகைத் தாவரங்கள் நிலத்திலுள்ள நிக்கலை  உறிஞ்சியும் உயிர்வாழ்வதால் நிக்கல் மண்டிய நிலங்களில் இவற்றை வளர்த்து நிக்கல் விஷத்தை வெளியேற்றலாமா என்றும் முயன்று வருகின்றனர்.

from old Tamil Magazine

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: