
யுவாங் சுவாங் பொய் சொல்வாரா? பாஹியான் பொய் சொல்வாரா? (Post No.7506)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7506
Date uploaded in London – 28 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குச் செய்த தீமைகள் பல. கொஞ்சம் பட்டியலைப் பார்ப்போம்.
1. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செல்வங்களை இங்கிலாந்துக்குக்கு கொண்டு சென்றனர். இந்தியாவின் புகழ் பெற்ற வைரங்கள், மரகதங்கள் , நீலக் கற்கள் இப்பொழுது பிரிட்டனில் உள்ளன. இதே காலத்தில் வங்காளத்திலும் பீஹாரிலும் மட்டும் பல லட்சம் பேர் பட்டினியாலும் பஞ்சத்தாலும் இறந்தனர்.
2. இந்தியாவை மூன்று துண்டாக போட்டு கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்க தேசம்), மேற்கு பாகிஸ்தான் என்று செய்து நிரந்தர தொல்லை கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
3. இதையெல்லாம் விட மிகப்பெரிய விஷமம் வரலாற்றைத் திருத்தி எழுதியதாகும் . எகிப்து, பாபிலோனியா, மாயன், கிரேக்க நாகரீகங்களில் 5000 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்த மன்னர்கள் பட்டியல் உண்டு. இந்தியாவில் மட்டும் புத்தர் காலத்துக்கு முன்னர், ஆண்டவர் எவருமே இல்லை. புராணங்களில் இதிகாசங்களில் சொல்லும் மன்னர் பெயர்கள் எல்லாம் கட்டுக்கதை என்று சொல்லி மன்னர்கள் பெயர் அத்தனையையும் அழித்தனர். அது மட்டுமல்லாமல் இந்தியர்கள் மட்டும் உலகில் பூர்வ குடியினர் இல்லை. திராவிடர்கள் மத்தியதரைப் பகுதியில் இருந்தும், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்தும் வந்தனர் என்றும் கால்டுவெல் மூலமும்,மாக்ஸ்முல்லர் மூலமும் பரப்பினர். உண்மையில் நாம் வெளியே சென்று, உலகம் முழுதையும் நாகரீக மயமாக்கியதை மறைத்தனர்.
இந்தக் கட்டுரையில் இந்த மூன்றாவது விஷயத்தை எடுத்துக் கொள்வோம். பாஹியான், யுவாங் சுவாங், வராஹ மிஹிரர், கல்ஹணர் ஆகிய நால் வரும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். இந்த நான்கு பே ர்களும் அரசியல் கட்சிக்காரர்கள் இல்லை. மத வெறியர்களும் இல்லை என்பதை உலகமே ஒப்புக் கொள்கிறது. ஆகையால் பொய் சொல்ல வாய்ப்புகள் குறைவு.
முதலில் இந்த 4 பேரும் யார் என்று தெரியாதவர்களுக்குச் சொல்லிவிடுகிறேன்.
பாஹியான் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரீ கர்.
யுவாங் சுவாங் , பாஹியானுக்குப் பின்னர் சீன யாத்ரீகர் – 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா, இந்தோனேஷியா போன்றா நாடுகளுக்கு விஜயம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதி வைத்தார்.
வராஹமிஹிரர் என்பவர் கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்தவர்தான். பிருஹத் ஜாதகம், பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களில் வான சாஸ்திர,ஜோதிட மற்றும் கலாசார அறிவியல் விஷயங்களை எழுதியவர் .

கடைசியாக வாழ்ந்தவர் கல்ஹணர் என்னும் காஷ்மீரி பிராமணர் ஆவார் . ராஜ தாரங்கிணி என்ற காஷ்மீர் வரலாற்று நூலை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்தார். இவர் ஆண்டுகளைக் குறிப்பிட்டு எழுதியதால் இவரை முதல் இந்திய வரலாற்று ஆசிரியர் என்று மேலை நாட்டுக்கார்கள் புகழ்வர் .
ஆயினும் வராஹ மிஹிரரும் கல்ஹணரும் இந்திய வரலாற்றில் ஒரு வெடி குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.கலியுகம் என்பது கி.மு.3102ல் துவங்கவில்லை. அதற்குச் சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் துவங்கியது என்கிறார்கள்.மற்றோர் புறம் கல்ஹணரும் யுவாங் சுவாங்கும் இன்னொரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்கள். குஷான மன்னர்களான கனிஷ்கர் , ஹு விஸ்கர் எல்லோரும் மிகவும் முற்காலத்தில் ஆண்டதாகவும் , புத்தர் பெருமான் மிகவும் முற்காலத்தில் இருந்ததாகவும் சொல்கின்றனர் .
கல்ஹணரைப் புகழும் மேலை நாட்டினர் அவர் எழுதிய எட்டு அத்யாயங்களில் முதல் 4 அத்தியாயங்களை நம்பாதே என்கின்றனர். ஏனெனில் இதில் கி.மு.2000 முதலான மன்னர் பட்டியல் உளது!!
இதெல்லாம் ஒரு புறமிருக்க, பல வரலாற்று ஆசிரியர்கள் வெள்ளைக்காரர் எழுதிய இந்திய வரலாறு ஆயிரம் ஆண்டுகளை விழுங்கிவிட்டது, மறைத்துவிட்டது என்பர். அதாவது அசோகர் கல்வெட்டில் குறிப்பிடும் சந்திரகோட்டஸ் ( சந்திர குப்தர் என்பதன் மருவு) மௌர்ய சந்திர குப்தர் என்பது தவறு. உண்மையில் அது குப்த வம்சத்தைச் சேர்ந்த சந்திர குப்தர் என்பர். புத்தர் காலம் பற்றியும் இலங்கை , இந்தியா, திபெத், பர்மா, சீன வரலாறுகளில் குழ ப்பம் இருக்கிறது.
வெள்ளைக்காரர் எழுதிய வரலாற்றுப் புஸ்தகங்களை உலகம் முழுதும் திருத்திப் புதுப்புது புஸ்தகங்களை பாடத்திட்டங்களில் சேர்த்து வருகையில் நம் மட்டும் எம்.ஏ வரலாற்றுப் பாடம் வரை பழைய பல்லவியைப் பாடி வருகிறோம்!!
முதலில் வரலாற்றைத் திருத்தி எழுதவேண்டும். எதிரும் புதிருமான இரு வேறு கருத்துக்களையும் அருகருகே கொடுத்து ஆராய்ச்சிகளைத் தொடர வேண்டும். பாஹியான்,யுவாங் சுவாங் -கல்ஹணர் சொல்லும் கருத்துக்களை மேலும் ஆராய வேண்டும். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் எழுதி வைத்திருக்க காரணம் இல்லாமல் இருக்காது. பிற்காலத்தில் இந்தியாவுக்கு வந்த அல்பெரூனி கூட கலியுகம் முதலியவற்றில் சில மாறுபட்ட கணக்கீடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குஷ் (Kush Kingdom of Egypt) என்னும் ஒரு வம்சத்தினர் எகிப்து நாட்டை ஆண்டனர். அவர்களுக்கும் நமது குஷானர்களுக்கும் தொடர்பு உண்டா என்றும் ஆராயலாம். அவர்களும் கி.மு காலத்தை சேர்ந்தவர்கள்.
யுதிஷ்டிரர் பட்டாபிஷேகம் செய்து கொண்டபோது சபதரிஷி சுழற்சி மக நட்சத்திரத்தில் இருந்ததாக வராஹ மிஹிரர் சொல்கிறார். இதனால்தான் ஏறத்தாழ 640 ஆண்டு வித்தியாசம். இரும்பு, குதிரை ஆகிய இரண்டின் குறிப்புகள் காரணாமாக மஹாபாரத காலத்தை கி.மு. 1500 என்று தொல்பொருட் துறையினர் கூறுவர்.
ஆக நமது பஞ்சாங்கம், வராஹ மிஹிரர்/கல்ஹணர் ஜோடி, தொல் பொருட் துறை சான்றுகள் ஆகியன வெவ்வேறு காலத்தைச் சொல்லுவதால் அறிஞர் மாநாட்டைக் கூட்டி அவ்வாப்பொழு து ஆராயவேண்டும். ஏனெனில் குதிரை, இரும்பு இரண்டின் காலமும் கி.மு.1500க்கும் முந்தையது என்று தற்காலச் சான்றுகள் கா ட்டுகின்றன.
புராணங்களில் உள்ள வரலாறு என்ற தலைப்பில் புஸ்தகம் எழுதிய டி .ஆர் .மங்கட் (D R MANKAD, PURANIC CHRONOLGY) , ஒரு பட்டியல் தருகிறார். அதன்படி
தற்போது இந்துக்கள் தினமும் பூஜையில் சொல்லும் ஏழாவது மநுவான வைவஸ்வத மனுவின் காலம் கி.மு 5976
மஹாபாரத யுத்தம் நிகழ்ந்தது – கி.மு.3201
யுதிஷ்டிரர் இறந்தது – கி.மு. 3176
துவாபர யுகம் முடிவு – கி.மு .2976

இதை அப்படியே நம்பத் தேவையில்லை. இது ஒரு ஆராய்ச்ச்சிதான். ஆனால் இதில் பசையுள்ள பல வாதங்கள் இருக்கின்றன.
மெகஸ்தனீஸ் (Greek Ambassador) என்ற கிரேக்கரும் அரியான் (Arrian, Greek Historian) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியரும் சந்திரகோட்டஸ் காலத்துக்கு முன்னால் 154 அரசர்கள் இந்தியாவை ஆண்டதாகவும் அவர்களுடைய காலம் 6000 ஆண்டுகளுக்கும் மேல் என்றும் எழுதி வைத்துள்ளனர். இந்த சந்திரகோட்டஸ், மௌர்ய சந்திர குப்தர் என்பது வெள்ளைக்காரர் வாதம். இல்லை இவர், குப்தப் பேரரசரான சந்திரகுப்தன்தான் என்பது மங்கட்டின் வாதம். இத்துடன் கல்ஹணர் சொன்ன விஷயங்களையும் யுவாங் சுவாங் சொன்ன விஷயங்களையும் இணைத்து ஆராய்தல் அவசியம்.
புத்தர் காலம் பற்றி மகா குழப்பம்
புத்தர் காலம் பற்றி மகா குழப்பம் உளது. ஆதி சங்கரர் காலம் பற்றியும் குழப்பம் உளது. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) போன்றோர் அவர் கிறிஸ்துவுக்கு முந்தைய காலம் என்பார். ஏனையோர் அது கி.பி.732 என்பர். அப்போது சங்கரரைப் போலவே எல்லா விதங்களிலும் அச்சு வார்த்த துபோல அபிநவ சங்கர் என்பவர் இருந்ததால் இப்படிக் குழப்பம்.
புத்தர் காலம் பற்றி புத்தமத நாடுகள் வெவ்வேறு கணக்கு கொடுக்கின்றன. இந்தக் கணக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் யுவாங் சுவாங் எழுதிய புஸ்தகத்திலும் உளது. அட, காரணமே இல்லாமல் மெகஸ்தனிஸும், கல்ஹணரும் , யுவாங் சுவாங்கும் பொய் சொல்வார்களா ? சிந்தித்துப் பாருங்கள்.
பாஹியான் என்ற சீன யாத்ரீகர் எழுதிய குறிப்புகளில் தான் இந்தியாவுக்கு வந்தபோது புத்தர் இறந்து 1497 ஆண்டுகள் ஆனதாக எழுதுகிறார். அவர் கி.பி. 405 முதல் 411 வரை இந்தியாவில் இருந்தார். ஆகையால் அவருடைய கணக்குப்படி புத்தர் இறந்தது கி.மு 1086.
அவருக்கு சுமார் 250 ஆண்டுகளுக்குப் பின்னர் யுவாங் சுவாங் வந்தார். அவருடைய பெயருக்கு ‘தர்ம ஆசார்ய’ என்று அர்த்தம். அவர் எழுதிய சி யூ கி என்ற புஸ்தகத்தில் “புத்தரின் மரணம் பற்றி வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு காலத்தை சொல்கிறார்கள். சிலர் 1300, 1200, 1500 ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். சிலர் 900 ஆண்டுதான் ஆயிற்று என்பர்”.
அவருடைய கணக்குப் படி பார்த்தாலும், புத்தரின் மரணம் கி.மு.860 முதல் கி.மு.260 க்குள் இருந்திருக்க வேண்டும்.
சீ னர்கள் பொதுவாக நம்புவது கி.மு 638 (புத்தர் மரண ஆண்டு)
ஸ்ரீலங்கா, பர்மா, அஸ்ஸாம் – கி.மு.543
திபெத் – கி.மு.2422 முதல் கி.மு 546
காண்டன் புள்ளிக் கணக்கு புஸ்தகம் – கி.மு.543 அல்லது 487
வெள்ளைக்காரர்கள் இவை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு கி.மு 487ல் புத்தர் இறந்தார் என்று எழுதிவிட்டனர். அதாவது யுவாங் சுவாங், பாஹியான், கல்ஹணர் போன்ற வரலாற்று கதாநாயகர் சொன்னதும் பொய் மக்களின் நம்பிக்கையும் பொய் . நாங்கள் சொல்வதே மெய். என் று சொல்லி , அசோகர் கல்வெட்டு சொல்லும் சந்திர கோட்டஸ் தான் மௌர்ய சந்திர குப்தன் என்று எல்லோரையும் நம்பவைத்தனர். அதாவது கட்டைப் பஞ்சாயத்து முறையில் மற்றவற்றை மறுத்துவிட்டனர். இந்துக்களாகிய நாம் வரலாற்றைத் திருத்தி எழுதினால் தமிழர்கள் சொல்லும் 10,000 ஆண்டு தமிழ்ச் சங்க வரலாறும் உண்மையாகிவிடும்!
முதலில் எல்லா வரலாற்றுப் புஸ்தகங்களிலும் எதிரும் புதிருமாக உள்ள கருத்துக்களைக் கொடுத்து புதிய முடிவுகள் வந்தவுடன் அவற்றை முழு அளவுக்கு மாற்றி எழுதலாம்.
Xxxx subham xxx
R.Nanjappa (@Nanjundasarma)
/ January 28, 2020I just wish to point out that India has a strong literary tradition to support its history. For instance, most of Tamil history can only be understood from literary sources, and that not exactly chronologically. But we have a far more scientific method in the ASTRONOMICAL observations which are found in our two Itihasas, Ramayana and Mahabharata. When Indians study these itihasas, they do not pay attention to these astronomical data. And they also begin their studies with pet theories and prejudices.
Recently, Dr.Nilesh Nilkanth Oak has researched on the basis exclusively of the astronomical data internal to the two itihasas. Unlike others, he did not confine himself to a few select data , ignoring the others, but has taken every one of them into account and reconciled them, pointing out where there are even apparent disagreements. He used first SkyGazer4.5 software developed by Carina Software . Finding some imperfections in it, he then used their professional version of the software- Voyagger4.5. On the basis of his research, he has established that the Rama-Ravana Yuddha took place in 12,209 BCE and that the Mahabharata War took place in 5561 BCE. These conclusions are based entirely on astronomical observations- which are verifiable even today with the modern software. There are hundreds of such observations and no author , however clever, could have conjectured or invented these observations with such scientific precision, so that they are verifiable even after so many millennia. Dr.Oak is not fanatical, but in true scientific spirit has said that like all scientific theories, his conclusions only amount to a theory and he has openly invited other researchers to study, critique and disprove his findings. In spite of his open invitation, no one has disproved his findings so far. Dr. Oak is not concerned about the divinity of the characters, but only with the scientific aspects of the astronomical observations- which can be studied, verified and confirmed, as these are still there unchanged! His conclusions are stated in three books:
1.12,209 : Rama-Ravana Yuddha (2014)
2.When Did The Mahabharata War Happen? The Mystery of Arundhati (2018)
3.Bhishma Nirvana (2018 )
The facts presented in these books establish the hoary antiquity of Indian history beyond any doubt. These books are studded with astronomical charts, showing the position of the stars in the sky at the relevant time.