
WRITTEN BY S NAGARAJAN
Post No.7509
Date uploaded in London – 29 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
யோகவாசிஷ்டம் பற்றிய முந்தைய கட்டுரைகளைப் படித்தவர்களுக்கு இன்னும் ஒரு கட்டுரை
யோக வாசிஷ்டம் – 6 பிரகரணங்களும் 55 கதைகளும்!
ச.நாகராஜன்
உலகின் மிக அற்புதமான நூலான யோக வாசிஷ்டத்தைப் படிக்கக் கொடுத்து வைத்தவர்கள் நல்வினைப் பயனை அதிகம் கொண்டவர்கள் என்று துணிந்து கூறலாம்.
யோக வாசிஷ்டம் வசிஷ்டர் ராமருக்கு உபதேசித்தது. அதி ரகசியங்களைத் தெள்ளத் தெளிவாகப் பிட்டுப் பிட்டு வைக்கும் நூல் இது.
இதில் ஆறு பிரகரணங்கள் உள்ளன.
- வைராக்ய பிரகரணம்.
ஒரு மனிதன் தன்னைப் பற்றியும் உலகைப் பற்றியும் இறுதி உண்மையையும் பற்றிப் பகுத்துப் பார்ப்பது வைராக்ய ப்ரகரணம்.
- முமூக்ஷு வ்யவஹாரப் பிரகரணம்
உண்மையை அறியத் துடிக்கும் ஒருவன் பேரறிவையும் ஞானத்தையும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது முமூக்ஷு வ்யவஹாரப் பிரகரணம்
- உத்பத்தி பிரகரணம்
சிருஷ்டி, உலகம் படைக்கப்பட்டது போன்றவற்றைச் சொல்வது உத்பத்தி பிரகரணம்
- ஸ்திதி பிரகரணம்
உலகம் நிலைபெற்று நடப்பதை விவரிப்பது ஸ்திதி பிரகரணம்
- உபாசன பிரகரணம்
மனதைச் சாந்தப்படுத்துவதை விளக்குவது உபாசன பிரகரணம்
- நிர்வாண பிரகரணம்
நீண்ட இந்த பிரகரணம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது – பூர்வார்த்தம் – முதல் பகுதி, அடுத்தது உத்தரார்த்தம் – இறுதிப் பகுதி.
முக்தி பற்றி விளக்கும் இந்த பிரகரணத்தில் ஏராளமான கதைகள் இடம் பெறுகின்றன.
உலகின் ஆகப் பெரும் மகான்களும், ஞானிகளும், நவீன உலகப் பேரறிஞர்களும், விஞ்ஞானிகளும் வியக்கும் இந்த நூலில் 55 கதைகள் உள்ளன.
அவை அனைத்தும் சுவையானவை; சிந்தனையைத் தூண்டுபவை; பெரும் உண்மைகளை உரைப்பவை; பல ரகசியங்களைத் தெரிவித்து, மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பவை. மனதில் தோன்றும் சிக்கலான கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தருபவை.

55 கதைகளின் தலைப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.
வைராக்ய பிரகரணத்தில் இடம் பெறுவது :
- யோக வாசிஷ்டம் சொல்லப்பட்ட விதம்
முமூக்ஷு வ்யவஹாரப் பிரகரணத்தில் இடம் பெறுபவை :
- சுகர், வியாஸர் பற்றிய கதை
- வசிஷ்டருக்கு பிரம்மா கற்பித்தது பற்றிய கதை
உத்பத்தி பிரகரணத்தில் இடம் பெறுபவை :
- ஆகாசஜனின் கதை
- லீலாவின் கதை
- கர்கடியின் கதை
- இந்துவின் புதல்வர்களின் கதை
- இந்திரன், அகல்யையின் கதை
- மனதின் கதை
- பிறக்காத மூன்று குழந்தைகளின் கதை
- மந்திரவாதியின் கதை
ஸ்திதி பிரகரணத்தில் இடம் பெறுபவை :
- சுக்ராசார்யரின் கதை
- தாமா, வியாலா, கதாவின் கதை
- பீமா, பாசா, த்ருதா ஆகியோரின் கதை
- தாசுராவின் கதை
- கசனின் கதை
உபாசன பிரகரணத்தில் இடம் பெறுபவை
- ஜனகரின் கதை
- புண்யம், பாவனாவின் கதை
- பலியின் கதை
- ப்ரஹ்லாதனின் கதை
- காதியின் கதை
- உத்தாலகரின் கதை
- சுரகுவின் கதை
- பாஸா, விலாசாவின் கதை
- விதஹ்வ்யாவின் கதை
நிர்வாண பிரகரணத்தின் முதல் பகுதில் இடம் பெறுபவை :
- காக, புசுண்டரின் கதை
- தேவ பூஜையின் கதை
- வில்வ பழத்தின் கதை
- சின்னக் கல்லின் கதை
- அர்ஜுனனின் கதை
- சத ருத்ரனின் கதை
- வேதாளத்தின் கதை
- பகீரதனின் கதை
- சூடாலையின் கதை
- கிராதனின் கதை
- சிந்தாமணியின் கதை
- ஒரு யானையின் கதை
- கசனின் கதை
- மித்ய புருஷனின் கதை
- ப்ருங்கீசனின் கதை
- இக்ஷ்வாகுவின் கதை
- ஒரு வேடன், ஒரு மகானின் கதை
நிர்வாண பிரகரணத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெறுபவை :
- வித்யாதாராவின் கதை
- இந்திரனின் கதை
- மங்கியின் கதை
- மனத்தை மானுக்கு ஒப்பிடும் கதை
- ஒரு கல்லின் கதை
- விபச்சித்தின் கதை
- வததானா அரசகுமாரர்களின் கதை
- ஒரு சவத்தின் கதை
- ஒரு துண்டுக் கல்லின் கதை
- ப்ரம்மாண்டத்தின் கதை
- இந்துவின் புதல்வர்கள் பற்றிய கதை
- தாபஸாவின் கதை
- மரம்வெட்டியின் கதை
யோக வாசிஷ்டத்தின் ஆறு பிரகரணங்களையும் அதில் உள்ள மிகச் சுவையான 55 கதைகளையும் படிப்பவர்களுக்குப் பிரபஞ்ச மர்மம் புரியும். மனித மர்மமும் புரியும்.

படிப்பவர்கள் பாக்கியவான்களே; இதில் சந்தேகமில்லை!
***