
WRITTEN BY London Swaminathan
Post No.7528
Date uploaded in London – – 3 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Written by London swaminathan
நான் பேஸ் புக் (FACEBOOK) ரசிகன்; ஆனால் வாட்ஸ் அப்- (Whats up) பின் எதிரி. இருந்தபோதிலும் இவ்விரு ‘வீண் அரட்டை அரங்கங்களிலும்’ (Anti Social Media?!) பயன்படுத்தும் ‘கடவுள் இருக்காண்டா குமாரு’ என்ற வாசகம் எனக்கு மிகவும் பிடித்த கவர்ச்சிகரமான வாக்கியம் ஆகும்.
இந்தச் சொல்லாக்கத்தை யார் உருவாக்கினாரோ, அவர் வாழ்க!
தினமும் பத்திரிக்கையைத் திறந்தால் கலிபோர்னியாவில் காட்டுத் தீ (Wild Fire) ; மக்கள் ஓட்டம்; பலர் சாவு ; கருகிய காட்டு மிருகங்களின் சடலங்களில் இருந்து நாற்றம்.
இன்னொரு பக்கத்தைத் திருப்பிப் பார்த்தால் ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத புஷ் பயர் (Bush Fire) – புதர்களில் காட்டுத் தீ – அரிய கங்காரு, கோவாலா கரடிகள் சாவு- லட்சக் கணக்கில் அழிந்தன. ஹெலிகாப்டரில் இருந்து அணைக்க முயன்ற தீயணைக்கும் படையினர் பரிதாப சாவு.
மனிதனுக்கே தண்ணீர் இல்லாததால் 10,000 ஒட்டகங்கள் சுட்டுக் கொலை!
xxx

இன்னொரு நாள் பத்திரிக்கையைத் திறந்தால் கோர்னோ வைரஸ் (Corona virus) – சீன நகங்களில் இருந்து மக்கள் ஓட்டம் – எங்கும் மரண ஓலம்- உலகை மரண பயம் கௌவிக் கொண்டது. உலக சுகாதார ஸ்தாபனம் எமர்ஜென்சி அறிவிப்பு.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி (Tsunami) பேரலைகள் எழும்பி ஒரே இரவில் பல லட்சம் உயிர்களைக் காவு கொண்டது .
இது தவிர ஆண்டு தோறும் படிக்கும் வெள்ளம், வறட்சி, பஞ்சம் பட்டினி, போக்குவரத்து விபத்துகள், பூகம்பம், எரிமலை சீற்றம் , இடி மின்னல் தாக்குதல், பாம்புக்கடி சாவுகள்!!!
இவை யாரையும் துயரத்துக்கு ஆளாக்குவதில்லை. ஏனெனில் உலகில் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டே இருக்கும். நம்முடைய உணர்வுகள் மரத்துப் போய்விட்டன
புதியது என்ன?
முன்னர் போரில் (War) செத்தார்கள். இப்போது பயங்கரவாதிகளின் (Terrorists’ Bomb attacks) குண்டு வெடிப்பில் சாகிறார்கள். அதாவது மனிதன் இன்னும் மிருக மாகிவிட்டான் .
எவ்வளவு விஞ்ஞான முன்னேற்றம் இருந்தும் ஒரு எய்ட்ஸ் (AIDS) நோய் வந்து பயமுறுத்துகிறது; ஒரு கோர்னோ வைரஸ் வந்து பயமுறுத்துகிறது. இவை அனைத்து ம் பொருளாதார தாக்கங்களையும் (Economic Impact) உண்டுபண்ணுகின்றன.
மேல் உலகத்தில் இருந்து கடவுள் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறாரோ??
கடவுள் இருக்காண்டா குமாரு.
நம்புங்கடா ! கடவுள் இருக்காண்டா குமாரு!
xxx

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து
எல்லோரும் இன்புற்றிருப்பது அன்றி யாம் ஒன்றும் அறியோம் பராபரமே !
tags – கடவுள், இருக்காண்டா,
–சுபம்–