
கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் ! (Post No.7546)
RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7546
Date uploaded in London – – 7 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்ச புராணம், பாகவதம் முதலியவற்றில் கிருஷ்ணனைப் பற்றிய ஒரு உண்மைக்கதை- வரலாற்றுச் சிறப்புமிக்க கதை உள்ளது. யாதவர்களை ஓடஓட விரட்டிய நிகழ்ச்சி இது. உத்தர பிரதேச மாநிலமான மதுராவில் இருந்த ஒரு சமூகத்தை 802 மைல் — 1291 கிலோமீட்டர் தொலைவில் குஜராத் மாநிலத்தில் உள்ள துவராகா புரிக்கு விரட்டிய வரலாற்று நிகழ்வு இது – அதைவிட வியப்பான விஷயம், கிருஷ்ணனையும் யாதவர்களையும் விரட்டிய மன்னன் பெயர் ‘கால யவனன்’ . யமன் போன்ற யவனன் அல்லது கருப்பு யவநன் என்று பொருள் சொல்லலாம். அந்த யவனன் கிரேக்கனா, அராபியான , ரோமானியனா என்றும் தெரியவில்லை . இதை எல்லாவற்றையும் விட சுவையான விஷயம் கிருஷ்ணன் அனுப்பிய கறுப்புப் பாம்புக்குப் பதிலாக அவன் அனுப்பிய எறும்பு டப்பா கதை! tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதோ முழு விவரம்-
இந்த வரலாற்று நிகழ்வினைச் சொன்னால் மக்களிடையே கிருஷ்ணன் மதிப்பு குறைந்துவிடும் என்று பவுராணிகர்கள், இதை அதிகம் பிரஸ்தாபிக்கவில்லை போலும் !
கால யவனன் கதையில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. முதல் பகுதி கார்க்யர் என்ற ரிஷி பற்றிய கதை; அவர் வ்ருஷ்ணி குல, அந்தக குல (யாதவ) மக்களுக்கு குரு . அவரை ஒரு சமயம் யாதவர்கள் அவமானப்படுத்தவே அவர் 12 ஆண்டு தவம் செய்து சிவபெருமான் அருளால் ஒரு அப்சரஸ் மூலம், குழந்தை பெறுகிறார். அந்தக் குழந்தை யாதவ குலத்தைப் பழி வாங்கும் என்றும் சிவன் சொல்கிறார். இதை அறிந்த பக்கத்து தேச யவன மன்னன் அவரையும் அவரது குழந்தையையும் தனது அரண்மனையில் வளர்த்தான். காரணம்? அவனுக்குக் குழந்தை கிடையாது. அவன் இறந்தபின்னர் கார்க்யரின் மக ன் பட்டம் சூட்டப்பட்டான் . tamilandvedas.com, swamiindology.blogspot.com
அவனுக்கு கால யவனன் என்ற பெயர் ஏற்பட்டது..
நாரத முனிவர் இதுபற்றி மதுராபுரி மன்னனான கிருஷ்ணனை எச்சரிக்கிறார் . அவரோ சிறிதும் பொருட்படுத்தவில்லை.
இது ஒரு புறமிருக்க, கம்சனின் மாமனாரும் மகா சக்திவாய்ந்த மகத சாம்ராஜ்யத்தின் மன்னனும் ஆன ஜராசந்தன், கம்சனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனைக் காலி செய்ய தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது காலயவனனுடன் இமயமலைப் பகுதியில் உள்ள குட்டி நாடுகளை ஆளும் எல்லா மன்னர்களும் சேர்ந்து கொ ண்டனர். அவன், ஜராசந்தன் ஆதரவோடு மதுராபுரி மீது படையெடுத்தான். அவனுடைய படைகளுடன் வந்த குதிரைகளும் ஓட்டக்கங்களும் போட்ட லத்திகளும் மூத்திரமும் ஆறு போல பெருக்கெடுத்தது ; அந்த ஆற்று க்கு அஸ்வகிருத் என்ற பெயரும் ஏற்பட்டது.
மாபெரும் படை மதுராபுரியை நோக்கி வருவதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா யாதவ மக்களின் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி சொற்பொழிவைத் துவக்கினார்-
“எனது அருமை மக்களே, நான் சொல்லுவதைக் கேளீர் . மாபெரும் படை மதுராபுரியை சுற்றி வளைத்து இருக்கிறது. இது வெல்ல முடியாத படை. கால யவனன் , சிவ பெருமானிடம் வரம் பெற்றவன் . நானும் சமாதானத்துக்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன். இதுவரை பலன் கிட்டவில்லை. காரணம்? ஜராசந்தனின் கோபம் தணியவில்லை. அவன் காழ்ப்பு உணர்வு கொண்டுள்ளான். கால யவனனோ , ‘நானே ஆளப் பிறந்தவன்’ என்று மமதையுடன் கொக்கரிக்கிறான். இந்த செய்தியை நாரதர் என்னிடம் இயம்பினார்” tamilandvedas.com, swamiindology.blogspot.com
.

ஹரி வம்சத்தில் உள்ள சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் மேலும் சொல்லப்படுவதாவது —
“கிருஷ்ணர் ஒரு டப் பியை எடுத்து அதற்குள் அதி பயங்கரமான கரு நாகப் பாம்பை உள்ளே போட்டு ஒரு தூதனிடம் கொடுத்தார் இதை காலா யவன னிடம் காட்டி நான் சொல்லுவதைச் சொல்லிவிட்டு வா என்று தூது அனுப்பினார் கண்ணன். தூதன் , கால யவனனி டம் சென்று டப்பாவைத் திறந்து காட்டி, யது குல நந்தன னான கிருஷ்ணன் சீறும் கரும் பாம்பு போன்றவன் என்றான். கால யவன னுக்குப் புரிந்துவிட்டது. அதி பயங்கரமான கூரிய பற்களுடைய எறும்புகளை பிடித்துவரச் சொல்லி அதை டப்பா முழுதும் போட்டு நிரப்பினான் . அந்தப் பாம்பை அவை கடித்துக் குதறி சாப்பிட்டு விட்டன.. இதைப்போய் உங்கள் கிருஷ்ணனிடம் கொடு என்றான் கால யவனன் .
எறும்புடன் வந்த டப்பாவில் அதி பயங்கர கரும்பாம்பு பிணமானதைக் கண்டு கிருஷ்ணன் பயந்தான்; யாதவகுலத்தை அழைத்துக் கோடு 800 மைல் பயணம் செய்து கடலோரப் பட்டினமான துவாரகா நகருக்கு சென்றான் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
யாதவ குல மக்கள் அனைவரும் வீ ட்டு வாசலுடன் வாழத் துவங்கிய ஒரு நாள், கிருஷ்ணன் மட்டும் தனியாக, நிராயுதபாணியாக மதுரா புரிக்கு நடந்தே சென்றான் . கா லயவனனை ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு வா என்றான் . அவன் இத்தகைய தருணத்தை நழுவ விடக்கூடாது .கிருஷ்ணன் கதையை இன்றுடன் முடிப்போம் என்று புறப்பட்டான். கிருஷ்ணர் ஓட்டம் பிடித்தார் எல்லாம் ஒரு திட்டத்தோடு தான் .

ஹரிவம்சத்தில் உள்ள மூன்றாவது கதை.
மாந்தாதா என்ற மாமன்னனின் மகன் முசுகுந்த சக்ரவர்த்தி. அவன் தேவாசுரப் போரில் தேவர்களுக்கு வெற்றி வாகை பெற்றுத் தந்தவன் . இனி போரே வேண்டாம் . நான் நிம்மதியாகத் தூங்க அருள்புரியுங்கள் என்று தேவர்களிடம் வேண்ட, இந்திரன் மூலமாக ஒரு வரம் பெற்றான். என து தூக்கத்தை எவனாவது கெடுப்பானாகில், நான் விழித்தவுடன் பார்க்கும் மனிதன் எரிந்து போ க வேண்டும் என்றான். இந்திரனும் ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்றான். அவர் ஒரு குகையில் சென்று உறங்கி விட்டார் . இந்த விஷயம் முழுவதையும் நாரத முனிவர் ஆதியோடு அந்தமாக கிருஷ்ணனிடம் இயம்பி இருந்தார் . இது எல்லாம் கிருஷ்ணனுக்கு நினைவுக்கு வரவே முசுகுந்த மன்னன் தூங்கும் குகைக்குள் மெதுவாக சப்தமின்றி நுழைந்து முசுகுந்தனின் தலை மாட்டில் அமர்ந்தார் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
கால யவனனும் அந்தக் குகைக்குள் நுழைந்தான். கால யவனனுக்கு விநாச காலே விபரீத புத்தி; ஒரு உறங்கும் ஆசாமி அருகில், தலை மாட்டில், கிருஷ்ணன் அமர்ந்து இருப்பதைப் பார்த்து, உறங்கும் ஆசாமியை கால்களால் எத்தி உதைத்தான். கோபத்தோடு எழுந்த முசுகுந்தன் கோபப் பார்வையை அவன் மீது வீசவே கால யவனன் எரிந்து சாம்பலானான் . . கிருஷ்ணனுக்கு ‘புத்திமான் பலவான் ஆவான்‘ என்ற பழமொழி பொருந்தும்.
இதற்குப் பின்னர், முசுகுந்த மன்னனிடம், அவன் தூங்கிய காலத்தில் உலகில் என்ன என்ன நடந்தன என்ற தலைப்புச் செய்திகளை ‘புல்லட் பாயிண்டு’ (Bullet Points) களில் கிருஷ்ணன் மொழிந்தார். முசுகுந்தனும் மகிழ்ந்து, இனி சுவர்க்கம் புகும் நேரம் வந்துவிட்டது என்று சொல்லி பூவுலகில் இருந்து புறப்பட்டார்.
xxx

என் கருத்து
பைபிளில் (Bible) இரண்டாவது அத்தியாயத்தில் எக்ஸோடஸ் (Exodus) என்ற தலைப்பில் மோசஸ் என்ற தலைவன் யூத மக்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்து இஸ்ரேலுக்கு அழைத்துச் சென்றான் என்ற செய்தி வருகிறது . மூன்று மதங்கள் போற்றும் மோசஸ் உண்மையில் இருந்ததற்கு இதுவரை வரலாற்றுச் சான்றுகளோ தொல்பொருட் துறை சான்றுகளோ கிடைத்தில ; ஆயினும் எக்ஸோடஸ் என்னும் மாபெரும் வெளியேற்றம் பற்றி பல சினிமாக்களும் புஸ்தகங்களும் வெளியாகியுள்ளன. அது போன்ற நிகழ்ச்சி யாதவர் வெளியேற்றமும் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
மோசஸ் இஸ்ரேலை நோக்கி சென்ற காலையில் அவருக்கு செங்கடல் வழி திறந்துவிட்டது என்று பைபிள் இயம்பும். இது எல்லாம் ஹரிவம்சத்தைக் காப்பி அடித்து எழுதியது என்பர் ஆன்றோர். கிருஷ்ணர் பற்றி சொல்லும் விஷயங்கள் அத்தனையையும் பைபிளும் காப்பி அடித்து இருக்கிறது .
1.பிறக்கும் முதல் குழந்தை குலத்துக்கு ஆபத்து என்றவுடன் ரோம மன்னர் குழந்தைகளைக் கொன்றதை கம்சன் செய்த கொடுஞ் செயல்களுடன் ஒப்பிடலாம்.
2.மோசஸ் யாதவ/ யூதர்களை குடியேற்றியதை கிருஷ்ணனின் துவாரகா குடியேற்றத்துடன் ஒப்பிடலாம்.
3.கூடையில் மோசஸை நைல் நதியில் மிதக்கவிட்டதை கர்ணன் கதையுடன் ஒப்பிடலாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
4..செங்கடல் திறந்து மோசஸ் முதலியோருக்கு வழிவிட்டதை யமுனை நதி திறந்து வசுதேவனுக்கு வழிவிட்டதை ஒப்பிடலாம்.
5.ஆதம் (Adam) ஏவாள்(Eve) கதை என்பது உபநிஷத்தில் உள்ள இரண்டு பறவைக் கதை என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஏற்கனவே ஒப்பிட்டுள்ளார் . ஆதம் (Adam=Adma) என்பது ஆத்மா என்பதன் திரிபு. ஏவாள் என்பது ஜீவ (Eve-Jeev) என்பதன் மருவு. அதாவது உபநிஷத்தில் வரும் இரண்டு பறவைக் கதை– ஒரு பறவை பழம் சாப்பிட்டது– என்பதை பைபிள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டதாகக் கூறும் . இது பரமாத்மா , ஜீவாத்மா கதை
6.ஆதம் தனது இடது எலும்பை ஒடித்து பெண் இனத்தை உருவாக்கினான் என்பது அர்த்த நாரி கதை. சிவ பெருமானின் இடப்புறம் சக்தி/ பெண் இனம்.
7. ஏசு சொல்லும் குட்டிக்கதைகள் உபநிஷத் கதைகள் போன்றவை tamilandvedas.com, swamiindology.blogspot.com
.
8.இதுதவிர பைபிளில் ஏராளமான சம்ஸ்கிருத் சொற்கள் இருக்கின்றன.
பைபிள் என்பது இந்துமத நுல்களைக் காப்பி அடித்து எழுதியது என்பதற்கு இவைகள் சான்றுகள். மோசஸ் எக்ஸோடஸ் அத்தியாயம் எழுதப்பட்டது கி.மு ஆறாம் நூற்றாண்டு . கிருஷ்ணர் கதைகளோ கி.மு 3100க்கு முந்தையது.
xxx

இதை எல்லாம் விட்டுவிட்டு ஒரிஜினல் கதைக்குத் திரும்புவோம்
கால யவனன் கருப்பு கிரேக்கனா (Black Greek?), கருப்பு அராபியனா (Black Arabian)? என்ற ஆராய்சசியும் நீடிக்கிறது. யவன என்ற சொல்லை சங்க இலக்கியம் ரோமானியர் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. அலெக்சாண்டர் படை எடுப்புக்குப் பின்னர் கிரேக்கர் என்ற பொருளில் வருகிறது. குதிரை விற்பனைக் கதைகளில் அராபியர் என்ற பொருளில் வருகிறது . யவன என்ற சொல் வரும் பல்லாயிரம் இடங்களைத் தொகுத்து ஹெல்சிங்கி (பின்லாந்து) நகர புஸ்தக வெளியீடு 2015ல் வெளியாகி யிருக்கிறது. அதில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் ஆங்கிலத்தில் அப்படியே உள்ளன. கால யவனனுடன் சேர்ந்த மன்னர்கள், இனங்கள் பெயர்கள் நிறைய உள்ளன . அத்தனையையும் ஆராய்ந்தால் புதிய இந்திய வரலாறு tamilandvedas.com, swamiindology.blogspot.com
எழுதலாம்.
இதைவிட மிக மிக சுவையான விஷயம் ஹெலிகாப்டர் பற்றியது. ஹரி வம்சத்தில் ஓரிடத்தில் கால யவனனுக்கு வானில் பறக்கும் (aerial car) வாகனத்தில் தூது விடுவோம் என்ற ஸ்லோகம் வருகிறது. போகிற போக்கில் இதைச் சொல்லுவதால் அக்கால மக்களுக்கு விமானம், ஹெலிகாப்டர் என்பன அத்துப்படி என்பதும் ஆனால் மன்னர்கள் மட்டுமே அரிதாகப் பயன்படுத்தினர் என்றும் தெரிகிறது.
இதை எல்லாம்விட மிக மிக அதிசயமான விஷயம் போக்குவரத்து வசதிகள். கிருஷ்ணர், துவாரகைக்கும் ஹஸ்தினாபுரத்துக்கும், துவரகை க்கும் மதுராபுரிக்கும் இடையே சென்று வந்த செய்திகள் நிறைய உள்ளன. துவாரகா- மதுரா தொலைவு 1291 கிலோ மீட்டர். அதாவது 802 மை லகள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வதற்கு புல்லட் ரயில் (Bullet Trains) இல்லை ; அப்படியும் எப்படி கிருஷ்ணன் அடிக்கடி பயணம் செய்தார்? அதுவும் யாதவ குல மக்கள் கால் நடையாக எப்படி வந்தனர்? பின்னர் கிருஷ்ணர் மட்டும் எப்படி கால்நடையாக தனியே சென்றார்.? tamilandvedas.com, swamiindology.blogspot.com
புற நானுற்றுக்கு உரை எழுதிய மதுரை பாரத்வாஜ கோத்ர பிராமணன், உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர், விளம்புவது போல யாதவ குலத்தினர் தமிழ் நாட்டில் எப்படி குடியேறினர்? இரண்டாயிரம் மைல்கள் நடந்து வந்தனரா ? மதுரை அரசி மீனாடசியின் அம்மா காஞ்சன மாலை , அவளோ உக்ரசேனனின் குமாரத்தி ஆயிற்றே . அவர்கள் எப்படி தமிழ் நாட்டு மதுரைக்கு குடியேறினர் ? ஆதி சங்கரர் எப்படி இரு முறை இமயம் முதல் குமரி வரை வலம் வந்தார்? பாஹியானும் யுவாங் சுவானும் சீனாவில் இருந்து எப்படி காஞ்சிபுரம் வரை வந்தனர்? இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு புது வரலாறு எழுதுவோமாக . புரியாத பல புதிர்களை விடுவிப்போமாக .
Tags – துவாரகா , மதுரா , கிருஷ்ணன் , குடியேற்றம்,யாதவர், கால யவனன் , கார்க்யர் , ஜராசந்தன், கிருஷ்ணர்
—சுபம் —