

WRITTEN by London Swaminathan
Post No.7565
Date uploaded in London – 12 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
நமக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அம்பலவண கவிராயர் எழுதிய 100 , அருமையான நூறு பாடல்களில் நல்ல பல அறிவுரைகளை வழங்குகிறார். அதில் சாப்பிடக்கூடாத உணவு வகை என்ன என்று சொல்கிறார். இப்பொழுது பிட்ஸா , பாஸ்தா (PIZZA AND PASTA) போன்ற உணவுகளில் காளான் எனப்படும் மஷ்ரும் (MUSHROOM) களைச் சேர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலை நாடுகளில் மேலும் பல அயிட்ட (ITEMS)ங்களில் மஷ்ரும் சேர்ப்பதோடு மஷ்ரும் சூப்பு வேறு விற்பார்கள் . இதில் ஏராளமான வகைகளும் உண்டு. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அறப்பளிச்சுர சாதகத்திலும் இது இருப்பது வியப்பானதே. கிராமப்புறங்களில் பயன்படுத்தி இருப்பர் போலும்!
சிவன் கோவில் நிர்மால்யம் பற்றியும் அம்பல வாணர் எச்ச ரிக்கிறார் ; அவரே சிவபக்தர் என்பதால் இது நன்கு தெரிந்து இருக்கிறது. எல்லா கோவில்களிலும் பிரசாதம் வாங்கிச் சாப்பிடலாம். அதை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது. நிர்மாலியம் என்பது கோவிலில் மிஞ்சிப் போன பழைய பொருள்கள் ஆகும். இங்கே சிவன் கோவிலில் மிஞ்சிப் போன பிரசாதத்தை– சமைத்த உணவைக் குறிக்கிறது. பொதுவாகவே ‘சிவன் சொத்து குல நாசம்’ எனபது பழமொழி . அதாவது கோவிலில் உள்ள எதையும் வீட்டு உபயோகத்துக்கு, சுய நலத்துக்குப் பயன்படுத்தக் கூடாது.
சாப்பிட்டக்கூடாத– அதாவது ஆன்மீக நாட்டம் உடையோர்– சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் பட்டியல்:–

ஆட்டுப் பால் , கடையில் விலைக்கு வாங்கும் பால், காராம் பசுவிலிருந்து கறக்கப்பட்ட பால், சுரைக்காய் , முருங்கைக் காய் ,காளான் , நீர் முலாம்பழம்,பழைய சோறு , பயனில்லாத கீரை வகைகள், பீர்க்கங்காய் , அத்திக் காய் ,தென்னை வெல்லம் , வெள்ளைப் பூண்டு, வெங்காயம்,பெருங்காயம் , வெள்ளை உப்பு, வெள்ளைக் கத்தரிக்காய் , சிவன் கோவிலில் மிஞ்சிய உணவுப் பிரசாதம் , இருளில் உள்ள உணவு ஆகியன ஆசாரம் உடைய மக்களுக்கு ஆகாது என்று பழைய நூல்கள் சொல்கின்றன என்று கவிராயர் செப்புகிறார் . இறுதியில் ஐம்புலன்களை வென்ற சிவ பெருமானை வாழ்த்தி வணங்குகிறார் கவிராயர்; இதில் ஆசாரம் உடையார்க்கு என்பது அடிக்கோடு இடவேண்டிய சொற்கள்.




நாங்கள் இத்தாலிக்கு இருமுறை சென்றபோது தினமும் சாப்பிட்ட ‘வெஜிட்டேரியன்’ உணவில் மஷ்ரூம், வெங்கயம், பூண்டு இருந்தன. வேறு எதுவும் கிடைக்கவில்லை.ஆகையால் உணவு விதிகளும் கால, தேச, வர்த்தமானத்தைப் பொறுத்ததே. மனு நீதி நூலும் பகவத் கீதையும் சொல்லும் உணவுக் கட்டுப்பாடுகளை முன்னரே எழுதிவிட்டேன்.
ஆபத்துக் காலத்திலும், நோய்களைத் தீர்ப்பதற்காகவும் எதையும் சாப்பிடலாம்.
இந்தக் காலத்தில் வெங்காயம், உள்ளிப் பூண்டு சாப்பிடா தோரைப் பார்ப்பது அரிது.அனால் இவை இரண்டும் இல்லாமலேயே சுவையான உணவு ஆக்க முடியும் என்பதற்கு பிராமணர் வீட்டு உணவு வகைகளும் மலையாள சமையலும் சான்று பகரும் .
இன்றும்கூட, ஹரே கிருஷ்ண இயக்கத்தினரும், சுவாமி நாராயண சம்பிரதாய குஜராத்திகளும் மேற்கண்ட விலக்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதே இல்லை.
tags- ஆட்டுப் பால் , மஷ்ரும் , பூண்டு , வெங்காயம், சாப்பிடாதே
XXX subham xxxx
R.Nanjappa (@Nanjundasarma)
/ February 12, 2020மஷ்ரூம், பூண்டு, வெங்காயம்- இந்த மூன்றுமே மருத்துவ-விஞ்ஞானத்தின் அடிப்படையில் இன்று மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நவீன மருத்துவத்தில் இவற்றில் உள்ள ஊட்டச்சத்து, மினரல்கள் போன்றவற்றையே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் நமது பாரம்பரிய முறையில், எந்த உணவுப்பொருளின் பித்த, வாத, கபத்தன்மையே பிரதானமாகக் கருதப்படுகிறது. மேலும் , உணவு பருவத்திற்கொத்ததாகவும், வயது, தொழில் ஆகியவற்றிற் குகந்தாகவும் இருக்கவேண்டும். சில சமயங்களில் தயிரும் மோருமே தவிற்கப்படவேண்டும். ஒரு மாதத்தில் காய்கறிகளைத் தவிற்கவேண்டும். மழைக்காலத்தில் கீரைகள் சாப்பிடக்கூடாது. நெல்லிக்காய் இரவில் ஆகாது. இஞ்சி பகலில் நல்லது, இர்வில் வாய்வு சேர்க்கும் . துவாதசிக்கு அகத்திக் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள். மேலும் உட்கொள்ளும் உணவுப் பொருள்களும் காய்கறிகளும் நாம் வாழும் இடத்தின் அருகிலேயே விளைந்ததாக இருக்கவேண்டும். இதன் படி மேலை நாட்டுக் காய்கறிகள், பழங்கள் நமக்கு ஆகாது. இப்படி ஆயுர்வேத விதிமுறைகள்.
இங்கு கவிராயர் ஆசாரம் உள்ள மக்களைப் பற்றிப் பேசுகிறார். இவர்கள் ஆன்மீக நாட்டம் உடையவர்கள. இவர்கள் உணவின் “குணத்தன்மை” பற்றிக் கவனிக்க வேண்டும் – அவற்றின் சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்கள். இது மேலை நாட்டு விஞ்ஞானத்தின் பிடியில் வராதது. கீதையில் இதைப்பற்றி வருகிறது. இதன்படி பூண்டும் வெங்காயமும் ராஜஸ-தாமச குணங்களைத் தூண்டுபவை. இவை ஆன்மீக நாட்டத்திற்கும் முயற்சிக்கும் தடையாக இருப்பவை.
பூண்டு தீவிரமான மருத்துவ குணங்கள் கொண்டது- அதாவது அதை சில நோய்களுக்கு குறிப்பிட்ட முறையில் குறிப்பிட்ட அளவில் தான் மருந்துபோல உட்கொள்ளவேண்டும். அது சாதாரணமாக தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய பொருளல்ல. அசைவ உணவு கொள்பவர்கள் ஓரளவுக்கு பூண்டு சாப்பிடவேண்டும்- அது அசைவத்தின் பாதகப் பலன்களைக் குறைக்க உதவலாம்.. ஆனால் முற்றும் சைவ உணவு உட்கொள்பவர்கள் , பூண்டைத் தவிற்கவேண்டும். இதுவே நமது பரம்பரை மருத்துவர்களின் கருத்து.
இவற்றையெல்லாம் திரட்டி கவிராயர் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன ஆசாரத்தில் மருத்துவமும் ஆன்மீகமும் அடங்கும். இன்றும் ஆசாரம் பார்க்கும் பிராமணர்கள் சுரைக்காய், பீர்க்கங்காய், முருங்கை, வெங்காயம், பூண்டு , பல கீரை வகைகள், ஆட்டுப்பால் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் ‘பால்’ என்ற பெயரில் இன்று வரும் திரவம் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. நகரங்களில் வேறு வழியில்லை; கிராமப்புரங்களிலும் மாடுகளுக்குத் தீவனம் மாறிவிட்டது, பாலின் இயல்பும் மாறிவிட்டது. விவரம் தெரிந்த ஆயுர்வேத டாக்டர்கள் இத்தகைய பாலைத் தவிர்க்கவேண்டும் என்கிறார்கள்.Vegetarian ஆக இருப்பதைவிட Vegan ஆக மாறுவதே இன்று நல்லது எனத் தோன்றுகிறது.
Tamil and Vedas
/ February 13, 2020Well said. There is a sudden and big demand for VEGAN products here. I dont know what happened. All MacDonald, Kentucky Fried chicken and Subway shops are giving advertisements and incentives (buy one get one free etc) in newspapers. But i am not a vegan. This vegan concept has no support in our scriptures. Even Rishis used Honey and Milk. I think even Jains use Milk. But if u tick Vegan in foreign trips, you will get only Salad. So one must be careful.